பத்மு தீவு தரிசனம் Jeffersonville, Indiana, USA 60-1204E 1அன்றொரு நாளில் சகோ.நெவில் அவர்கள் ஒரு காரியத்தைக் குறித்து அறிவிப்புகளைச் செய்கையில், கர்த்தருடைய ஆவியானவர் இக்கட்டிடத்திற்குள் வல்லமையாக இறங்கியதைக் குறித்துக் கூறினார். அவர், ''எடுத்துக் கொள்ளப்படுதல் வந்து விட்டதோ என்று நினைக்குமளவுக்கு ஆவியானவர் பிரசன்னம் அவ்வளவு மகத்துவமாக இருந்தது'' என்று கூறினார். மேலும் அவர், “நான் சுற்றுமுற்றும் பார்க்கையில் மற்றவர்கள் யாவரும் உட்கார்ந்திருந் ததைக் கண்டேன். 'இல்லை, இவர்கள் எல்லாம் இன்னும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அப்படியெனில் நானும் இங்கு தான் இருக்கிறேன், எனவே எடுத்துக் கொள்ளப்படுதல் வரவில்லை' என்று கூறினேன்'' என்று குறிப்பிட்டார். எனவே, சில வேளை களில், கர்த்தருடைய ஆவியானவர் அவ்வாறாக நல்லவராக இருக்கிறார். 2இப்பொழுது இக்கட்டிடத்தில் நம்முடைய நண்பர்கள் அநேகர் வந்திருப்பதை நாம் காண்கிறபடியால் மகிழ்ச்சி யடைகிறோம். அவர்கள் அநேகராயிருக்கிறபடியால், யாவரையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் திருமணத்தை நடத்தி வைத்த சகோ.கார்ப்பெண்டர் அவர்கள் இதோ இப்பொழுது இவ்வாயிலின் வழியாக உள்ளே நுழைந்ததை நான் கவனிக்க நேர்ந்தது. இங்கே சபையில் சகோ.கார்ப்பெண்டர் அவர்கள் எங்களுக்கு ஊழியத்தில் மிகவும் ஒரு ஆசீர்வாத மானவராக இருந்து வருகிறார், எங்கும், எல்லா ஊழியக் காரர்களுக்குமே, அவர் ஒரு ஆசீர்வாதமானவராக இருக்கிறார். அவரோடு இன்னும் ஏனையோரும் இங்கு நம் மத்தியில் இருப் பதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். 3நேற்று மாலையில் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கேள்வி இதோ இங்கே இருக்கிறது: “சகோ. பிரன்ஹாம் அவர்களே! மத்.25ம் அதிகாரத்தில் காணப்படும் ஐந்து புத்தியில்லாத கன்னியர் புறஜாதிகளில் உள்ள மீதியானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஐந்து புத்தியில்லாத கன்னியர் இரட்சிக்கப்பட்டவர்கள்தான் என்றும், ஆயினும் அவர்கள் மகா உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார் கள் என்று நான் கருதுகிறேன். அது சரிதானா? அப்படி யாயின் அவர்களுடைய இறுதி முடிவு என்னவா யிருக்கும்? மத்.23:33,34 ஆகிய வசனங்களில் கூறப் பட்டுள்ள, வெள்ளாடுகளினின்று பிரிக்கப்பட்ட செம்மறியாடுகள் என்று அவர்களைக் குறித்து கருதலாமா? சரியான வேதசாஸ்திரி போலத் தெரிகிறது இக் கேள்வி கேட்பவர்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... நித்திரை செய்த புத்தியில்லாத கன்னியர் ஐந்து பேர்களும், வெளிப்படுத் தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ள மீதியாயிருப்பவர்கள் தான் என்பது என்னுடைய கருத்தும் கூட. வெளிப்படுத்தின விசேஷத் தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மீதியானவர்கள் ஸ்திரீயின் வித்தானவர்கள், அவர்கள், தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவின் சாட்சியை உடையவர்களுமாவர். உதாரணமாக, ஒரு பெண் துண்டுத் துணியை எடுத்து அதை விரித்து வைத்து, அதின் மேல் எந்த அளவு அல்லது மாதிரிப்படி துணியை வெட்ட வேண்டுமோ அதை விரித்து வைத்து, துணியை வெட்டுவாள்; ஆனால், அவள் தன் விருப்பப்படி, எந்த இடத்தில் வெட்ட வேண்டுமோ அதை வெட்டியெடுக்கிறாள், வெட்டியெடுத்தது போக மீதமாகும் துணி, மீதியானது என்று அழைக்கப்படும். அதைப் போலத்தான் மீதியாயிருப்பவர்கள் என்பதும். அங்கே ஐந்து பேர்கள் புத்தியுள்ள கன்னியரும், ஐந்து பேர்கள் புத்தியில்லாத கன்னியருமாயிருந்தனர் என்பதைக் கவனியுங்கள். பத்து பேர்களுமே ஒரேவிதமான தன்மையுள்ள மக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மாசில்லாத கன்னியரே, ஆனால் தேவனோ தெரிந்து கொள்ளுதலில் மூலமாக உலகத் தோற் றத்திற்கு முன்னரே, தன் மணவாட்டியைத் தெரிந்து கொண்டு, அவர்களுடைய பெயர்களை, உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதி யுள்ளார். ஏனெனில் தேவன் முடிவற்றவராய் இருப்பதினால், உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவருடைய சிந்தையில் இது இருந்தது. 4நாம் சில சமயங்களில் “முன்குறித்தல்' என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். நாம் வாழும் இச்சபையின் காலத்தில் முன் குறித்தல் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. இரத்த சாட்சிகளின் காலத்தில் முன்குறித்தலானது அவர்களால் உறுதியாக விசுவாசிக்கப்பட்டு, அக்காலத்தில் மகத்தானதொரு உபதேசமாக இருந்தது. அதன் பின்பு, நல்ல கிரியைகளினால் இரட்சிப்படையலாம் என்ற லீகலிஸ்டுகளின் போதகம் வந்தது. அப்பொழுது முன்குறித்தலினால் இரட்சிக்கப்பட்டோம் என்ற உபதேசத்தை விட்டு விட்டார்கள். அது ஒரு விதத்தில் நல்லது தான். ஏனெனில் இங்கிலாந்தில் யாவரும் கால்வினிஸ்ட் போதகத்தை பின்பற்ற ஆரம்பித்து பிறகு எழுப்புதலே இல்லாமற் போயிற்று. அதன்பிறகு வந்த ஜான் வெஸ்லி அர்மீனிய உப தேசத்தை பிரசங்கித்தார். வெஸ்லி உப தேசித்தவைகள் கால்வின் உபதேசத்தை சீரான நிலைக்குக் கொண்டு வந்தது. தேவன் எப்பொழுதும் சமன்படுத்துகிறார். புத்தியில்லாத கன்னியரிடம் அவர்களது விளக்குகளில் எண்ணெய் இருக்கவில்லை. அவர்கள் புறம்பான இருளில் தள்ளப் படுவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே அவர்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அவர்கள் மகா உபத்திரவ காலத்திற்குள் செல்வார்கள். அதைப் பற்றி உங்களது வேதாகமங்களின் அடிக்குறிப்புகளில் (Footnotes) பார்த்தால் அறிந்து கொள்வீர்கள். அது மீண்டும் மகா உபத்திரவ காலத்திற்குள் கொண்டு செல்லும். புத்தியில்லாத ஐந்து கன்னியரும் கைவிடப் பட்டு, மகா உபத்திரவத்தினுள் செல்பவர்கள். நமக்கு நேரம் இருந்தால் இதில் நமக்கு ஒரு பெரிய பாடம் உள்ளது. 5ஒலிநாடாக்களில் செய்தியைக் கேட்கையில் நான் துவக்கத்தில் “இச்செய்திகள் யாவும், நான் எந்த விதத்தில் அவைகள் சரியானவையாக உள்ளது'' என்று கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்கள் தவறு என்றால் எனக்கு அதைப் பற்றி தெரியாது. நான் என்ன விசுவாசிக்கிறேனோ அதையே தான் நான் உரைக்க முடியும். எவருடைய உணர்வு களையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. நாம் இங்கே உள்ளே வருகையில், ஏனையோர் என்ன கூறினர் என்பதை யெல்லாம் தள்ளி வைத்து விட்டு, இங்கே சொல்லப்பட்ட காரியங்கள் வேதத்தின் படி சரியாக இருக்கிறதா? இல்லையா என்பதை ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். இவ்வாறு செய்வது தான் மிகச் சிறந்த வழியா யிருக்கும். ஏனெனில் நாம் வாழும் இவ்விதமான நாளில், இந்த தேசத்தில் மக்களால் பலவிதமான உபதேசங்கள் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், சத்தியத்தை மக்கள் கிரகித்துக் கொள்ளச் செய்வதென்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் பல விதமான உபதேசக் குழப்பங்கள் எட்டியிராத கன்னிப் பிரதேசங்களில் சத்தியம் பிரசங்கிக்கும் போது, அங்கே மக்கள் உடனே கிரகித்துக் கொள்வார்கள். அவ்வாறு தான் அது சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதோ, ஒருவர் ஒரு உபதேசத்தையும், இன்னொருவர் இன்னொரு உபதேசத்தையும் கொண்டு வருவார். உலகில் நமக்கு இப்பொழுது சுமார் 900 மத ஸ்தாபனங்களும் அதற்கு மேலும் உள்ளன. ஒவ்வொருவரும் ஏனைய உபதேசங்கள் தவறு என்று கூறிக் கொண்டு தங்கள் தங்கள் உபதேசங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஏதாவது ஒன்றுதான் சரியான தாகவும், ஏனையவைகளெல்லாம் தவறானதாகவும் இருத்தல் வேண்டும். எனவே, இவை யாவற்றின் மத்தியிலும் சத்தியத்தை நிரூபிக்க, நாம் வேதத்திற்கு திரும்பிச் செல்லுதல் வேண்டும். வேதம் தான் குறிப்பிட்ட உபதேசம் சரி அல்லது தவறு என்பதை நிரூபிக்க வேண்டும். அநேக சமயங்களில் மக்கள் சொந்த வியாக்கியானத்தை வேத வாக்கியங்களுக்கு அளிக்கின்றனர். ஆனால் நாமோ, எந்தவித மனுஷீக வியாக்கியானத்தையும் அதற்கு அளிக்காமல், வேதத்தின் சத்தியங்களை அறிய மிகச் சிறந்த வழியை நாடுகிறோம். வேதத்தை அது எழுதியிருக்கிறபடியே அப்படியே வாசித்து, ''அது எவ்வாறு கூறுகிறதோ அவ்வாறே இருக்கிறது'' என்று கூறுகிறோம். 6தேவன் கூறியவைகளையெல்லாம் அப்படியே நீங்கள் எடுத் துக் கொண்டு பார்த்தால், அவை ஒவ்வொன்றும் வேத வாக்கியங் களில் அதனதன் இடத்தில் சரியாக பொருந்துகிறதாயிருக்கிறது என்பதை நான் எப்பொழுதும் கவனித்துப் பார்த்திருக்கிறேன். அது எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு ஜிக்-சா பசில் போல் உள்ளது (ஜிக்-சா பசில் Jig Saw Puzzle என்றால் ஒரு உருவம் காகிதத்திலோ அல்லது மரத்திலோ அல்லது உரிய எந்தப் பொருளிலோ வரையப்பட்டிருக்க, அதை ஒழுங்கில்லாமல் பல துண்டுகளாக பிய்த்து வைத்துவிட்டு, ஒருவரிடம் கொடுத்து, மீண்டும் அந்த உருவம் ஒழுங்காக அமையும்படி அத்துண்டுகளை ஒழுங்காக இணைக்க வேண்டும். இதற்குத்தான் ஜிக்-சா பசல் (Jig Saw Puzzle என்று பெயர் - மொழி பெயர்ப்பாளர்). ஆகவே, இவ்வாறாக பல துண்டுகளாக பிய்க்கப்பட்டிருக்கிற ஒரு சித் திரத்தை ஒழுங்காக அடுக்கி, காது இருக்க வேண்டிய இடத்தில் காதும், கண் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணையும் பொருத்தி, இவ்வாறாக அவையவை இருக்க வேண்டிய இடத்தில் அதைப் பொருத்திச் சேர்த்து அது எந்த ரூபத்தில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக உள்ள மாதிரியைப் பின்பற்றிட வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யாவிடில், மாடு மரத்தின் கீழ் புல்லை மேய்வதாக இருப்பதற்குப் பதிலாக, மரத்தின் மேல் நின்று கொண்டு புல் மேய்வதாக இருக்கும். இவ்வுதாரணத்தை நான் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே இவ்வாறு செய்வது சரியாக காட்சியை அமைத்துத் தராது. 7எனவே, நாம் வேதத்தை அறிந்து கொள்ள பரிசுத்த ஆவியானவருக்கு இடங்கொடுத்தால்... வேதாகமத்தை எழுதியது யார்? தேவ மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள். அப்படியிருக்கையில், நீங்கள் எவ்வளவுதான் உயர்கல்வி கற்றிருந்தாலும், பரிசுத்த ஆவியை உடைவர்களாயில்லாவிட்டால், நீங்கள் ஒருபோதும் வேதத்தைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் இயேசுவும் கூட, வேத சத்தியங்களை தேவன், ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, அவைகளைக் கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்தரித்தார். பவுலைத் தவிர ஏனைய சீஷர்கள் யாவரும் ஏறத்தாழ கல்வியறிவு அற்றவர் களாக இருந்தனர். பவுலுங்கூட, கிறிஸ்துவை அறிந்து கொள் வதற்காக, தான் பெற்றிருந்த கல்வி ஞானம் இவற்றையெல்லாம் மறக்க வேண்டியிருந்தது. எனவே தான் கொரிந்து சபைக்கு எழுதும் போது, ''..... நான் உங்களிடத்தில் வரும்போது சிறந்த வசனிப்போடாவது மனுஷ ஞானத்தோடாவது வரவில்லை...'' என்று கூறுகிறான். ஏனெனில், மனுஷ ஞானத்தோடு செய்தி வந்திருந்தால், அச்சபையினரின் விசுவாசமும் மனுஷ ஞானத்தின் படி அமைந்து விடும். ஆனால் அவர்களது விசுவாசம் வேத வாக்கியங்களின்படி பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளின் பேரில் சார்ந்திருக்கத்தக்கதாக, பவுலின் ஊழியம் கொரிந்தியருக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தேவனுடைய செயல் பிரத்தியட்சப்படுத்தப்பட்டதாக இருந்தது. அத்தகைய விசுவாசத் தில்தான் நாம் நெருக்கமாக சார்ந்திருக்க இப்பொழுது விரும்பு கிறோம். ஏனெனில் இந்த வாரம் முடியும் முன்னர், காலம் பூராவும் எவ்வாறு பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்ட மேற்கூறிய ஊழியமானது, தொடர்ச்சியாக அறுபட்டுப் போகாமல், வந்து கொண்டேயிருந்தது என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். 8இக்கரும்பலகையை சற்று உயரமாக பொருத்தியமைத் தமைக்கு நன்றி. இப்பொழுது அதில் வரையப்படுபவைகளை நன்கு பார்க்க முடிகிறது. இச்சீதோஷண நிலையானது இன்னும் தொடர்ந்து குளிர் காலமாகவே இருந்து விட்டால் நலமாயிருக்கும் என எண்ணு கிறேன். ஏனெனில் அவ்விதமான சூழ்நிலையில் நாம் களைப்பின்றி தொடர்ந்து அப்பருவ கால முழுவதிலும், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எடுத்து படிக்கலாம். மிக அருமையான உபதேசங்கள் அடங்கிய புத்தகம் அது. இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக என்று நினைக்கிறேன்; அப்போது நமது சபையானது இன்னும் அதின் ஆரம்ப நிலையிலேயே இருக்கையில், ஒரு இலையுதிர் காலத்தில் ஆரம்பித்து ஏறத்தாழ அடுத்த இலையுதிர் காலம் முடிய வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை படித்தோம். யோபு புத்தகத்தை எடுத்து நான் பிரசங்கித்ததை நினைத்துப் பார்க்கிறேன். ஓ சகோ.ரைட் அவர்களே! யோபின் புத்தகத்தி லிருந்து நீண்ட நாட்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு சகோதரி, ''சகோ. பிரான்ஹாமே, யோபுவை நீங்கள் சாம்பலிலிருந்து எடுத்து விடப் போவதில்லையா'' என்று கேட்டு எழுதுமளவுக்கு அது நீண்ட காலத்துக்கு நீடித்தது. நான் அவ்வாறு நீண்ட காலத்திற்கு யோபு சாம்பல் குவியலின் மேல் இருந்ததைப் பற்றி பிரசங்கித்த காரணம் ஒரு முக்கியமான கருத்தை மக்கள் அறியச் செய்வதற்காகத்தான். ஏனெனில் அந்த இடத்தில் தான், கர்த்தருடைய ஆவியானவர் யோபுவின் மேல் வந்தார். அப்பொழுது மின்னல்கள் அடித்தன, இடி முழக்கங்கள் முழங்கின. ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்து அதினால் அவன் கர்த்தருடைய வருகையை கண்டான். இத்தனை மகத்துவ மான காரியங்களும் மக்கள் காண வேண்டுமென்ற நோக்கில் தான் யோபு சாம்பல் குவியலின் மேல் துன்பத்தோடு உட்கார்ந்த காட்சியில் யோபுவை நிலைநிறுத்தி அதைக் குறித்து நீண்ட காலம் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு செய்வது களைப்படையச் செய்து விடக் கூடும் என்று அறிந்திருந்தேன். யாராவது வேறு ஏதாவதின் பேரில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் நானுங்கூட சற்று உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். ஒரு நோக்கத்திற்காக தேவன் ஒருவேளை அந்த நபரை அவ்வாறு நடத்தியிருக்கக்கூடும். 9இப்பொழுது, இந்த மீதியாயிருப்பவர்கள் யார் என்பதைப் பற்றிய கேள்விக்கு தெளிவான விடையை அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த மீதியாயிருப்பவர்கள் உண்மையிலேயே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த மீதியாயிருப்பவர்களை தேவன் முன்னறி வின்படியே உலகத் தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். முன்குறித்தல் என்ற வார்த்தையை கவனியுங்கள். ஏனெனில், இது ஜனங்களுக் குள் மிகவும் அற்பமாக எண்ணப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தேவனோ, உலகத் தோற்றத்திற்கு முன்னரே, தனது முடிவில்லாத, எல்லையற்ற சிந்தையில், சபையைத் தெரிந்து கொண்டார், இயேசுவைத் தெரிந்து கொண்டார், சபையைத் தெரிந்து கொண்டார். அதினால், அச்சபையானது முடிவில் எவ் வாறிருக்கும் என்று அவரால் முன்னுரைக்க முடிந்தது. அவர் முடிவற்றவராக, காலம், தூரம் இவைகளுக்கு கட்டுப்படாதவராக, எல்லையற்றவராக, நித்தியமானவராக இருப்பவராயின் அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இருக்க முடியாது. பூமியின் மேல் எத்தனை அற்ப தெள்ளுப்பூச்சிகள் உண்டாயிருக்கும் என்பதையும் அவை எத்தனை தடவை கண் சிமிட்டும் என்பதைக் கூட நன்கு அறிந்துள்ளவர். அவை ஒவ்வொன்றும் எவ்வளவு நிணத்தை (கொழுப்பை) உற்பத்தி செய்கின்றன, பூமியிலுள்ள லட்சோப லட்சம் தெள்ளுப் பூச்சிகள் அனைத்தும் சேர்த்து ஒரே நேரத்தில் எந்த அளவு நிணத்தை உற்பத்தி செய்துவிட முடியும் என்பதை யெல்லாம் கூட அவர் அறிவார். அவருடைய அறிவு எல்லையற்றது. அதை நம்மால் விவரிக்கவே முடியாது. அவர் தேவனாயிருக்கிறார், அவர் சகலத்திலும் எல்லையற்ற அறிவுள்ளவர். 10எனவே, கடைசி நாட்களில் பூமியின் மேல் வரப்போகும் அந்திகிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறியுள்ளதை நீங்கள் கவனிப் பீர்களானால்.... இப்பொழுது கவனமாக கேளுங்கள். ஒரெயொரு பிழை அதுவே... என்னுடைய பிழைகள் லட்சக்கணக்கில் அவரால் கண்டு பிடிக்கப்படக் கூடும். ஆனால் நம்முடைய விலையேறப் பெற்ற சகோதரனாகிய பில்லி கிரகாம் அவர்கள் அன்றொரு நாளில் மிகவும் குறிப்பிடத்தக்க பிரசங்கத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நிகழ்த்தினார், அது சரியான நேரத்திற்குரிய செய்தி என்று நான் நிச்சயமாக நினைத்தேன். ஆனால் ஒரு காரியம் அவர் கூறினார், அது என்னவெனில், ''தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட சாத்தான் வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்'' என்று அவர் கூறினார். வேதம் அவ்வாறு கூறவில்லை .... வேதம் கூறுகிறது, ... கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவன் வஞ்சிப்பான்...''. தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் தேவனால் உலகத் தோற்றத்திற்கு முன்னரே தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து உலகத் தோற்றத்திற்கு முன்னரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியா யிருக்கிறார். தேவன் அதைக் குறித்து தன் சிந்தையில் தீர்மானிக் கையில், தேவன் அதைக் குறித்து வார்த்தையை பேசுகையில், அது ஒருபோதும் மாற முடியாது, ஒரு போதும் அதை மாற்றி அமைக்க முடியாது. அவர் முடிவற்றவராக இருப்பதினால், அவருடைய வார்த்தைகள் நிறைவேறியே ஆகவேண்டும். 11சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் அமர்ந்திருக்கிற இந்த பூமியே தேவனுடைய வார்த்தை பிரத்தியட்சப்படுத்தப்பட்ட தாகும். உலகமானது காணப்படாதவைகளினால் தோற்றுவிக் கப்பட்டது. “இன்னது உண்டாகக்கடவது'' என்று மாத்திரமே அவர் உரைத்தார், அவை அவ்வாறு உண்டாயின. அவரால் எத்துணை பெரிய சிருஷ்டிகளையும் வெறுமனே வார்த்தை உரைத்தலினால் உண்டாக்கக் கூடுமானால், வியாதியுள்ள ஒரு சரீரத்தை சொஸ்தமாக்குவது அவருக்கு எவ்வளவு எளிதானது! அவருடைய வார்த்தையைப் பாருங்கள். அவருடைய வார்த்தை யானது எத்தகையது என்பதை காண நமக்கு மட்டும் போதுமான விசுவாசம் இருக்குமென்றால் அது எப்படியிருக்கும்! ஓ நாம் மிகவும் மண்ணானவைகளோடு ஒட்டிக் கொண்டு நம் சிந்தையில் பூமிக் குரிய காரியங்களில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம், ஓ, எனக்கு தெரியவில்லை. பல்வேறு விதமான போதகங்கள் நமக்குள் திணிக்கப்பட்டிருக்கிறது, இந்தப் போதகத்தின் தாக்கம், அந்தப் போதகத்தின் தாக்கம் என்று இவ்வாறாக பலவிதமானவைகளின் தாக்கம் நம்மேல் உண்டாகி, அதினால், முற்றிலும் கோணல் மாணலாக யாவும் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் இவைகளை யெல்லாம் உதறியெறிந்து விட்டு திரும்ப வந்து, அவரே தேவன் என்றும், அவரது வார்த்தைகள் ஒருபோதும் தவறுவதில்லை யென்றும், அதுபோல் அவரும் தவறுவதில்லையென்றும் அறிந்து கொள்ளுங்கள். அவரது வார்த்தை தவறுமென்றால், அப்பொழுது தேவனும் தவறிவிடுவார். அவர் தவறுவாராயின் அவர் தேவனல்லவே. எனவே இதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே ஒன்றைக் கூறிவிட்டு, வேறு ஒரு இடத்தில் வேறொன்றைச் சொல்ல அவரால் முடியாது. அவர் தேவனாயிருக்க வேண்டு மெனில், துவக்கத்தில் அவர் கொண்டிருந்த தீர்மானத்தில் அவர் நிலைத்திருக்க வேண்டும். 12அவர் நம்மிடம் கேட்டதெல்லாம், அவர் கூறியவை சத்திய மென்றும், அவற்றை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதையும் விசுவாசிக்க வேண்டுமென்பதே. ஓ, இது எவ்வளவு அழகாயிருக்கிறது! நீங்கள் உடனடியாக ஒன்று சம்பவிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்கள். சில வேளைகளில் ஏதாவது சம்பவிக்க உங்களிடத்தில் சிறிதளவு விசுவாசம் தேவைப்படுகிறது. அது ஒரு அற்புதத்தை நிகழ்த்தாது; ஆனால் நீங்கள் அந்த விசுவாசத்தில் நிலைத்திருப்பீர்களாயின், அது உங்களை வெளியே கொண்டு வருகிறது, அதோடு அப்படியே நிலைத்திருங்கள். அவர் கூறியது போல், '...எல்லா விதைகளிலும் கடுகு விதையானது மிகவும் சிறியதாயிருக்கிறது...''. கடுகு விதையானது வேறு எந்த விதையோடும் கலக்க முடியாது என்பதைக் கவனித்தீர்களா? கடுகு விதையை இனக்கலப்பு செய்யவே முடியாது. நீங்கள் விசுவாச முடையவர்களாக இருந்தால், அதுவும் சிறிதளவு விசுவாசம் இருந்தால், அது ஒருபோதும் அவிசுவாசத்துடனோ, அல்லது, சபைக்கொள்கையுடனோ, அல்லது கோட்பாடுகளுடனோ கலப்படையாது. விசுவாசம் தேவனோடு நிலைத்திருக்கும். உங்களை விசுவாசமானது பனிமூட்டங்களினின்றும் வெளியே விடுவித்துக் கொண்டு வரும். விசுவாசத்தில் நிலைத்திருங்கள். 13ஆதியில் தேவனானவர்... வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன் கூறினார், ''கடைசி நாட்களில் அந்தி கிறிஸ்து...'' இப்பொழுது இந்த சபைகள் யாவும் ஒன்று சேர்ந்து கொண்டிருப் பதைக் கவனியுங்கள். உலகத் தோற்றத்திற்கு முன்னர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்படாத இப்பூமியிலுள்ளவர்கள் யாவரையும் அந்திகிறிஸ்து வஞ்சித்துப் போடுவான். ஜீவ புத்தகத்தில் எப்பொழுது உங்களுடைய பெயர் எழுதப்பட்டது? உலகம் என்று ஒன்று உண்டா யிருப்பதற்கு முன்னரே, நீங்கள் இந்தக் காலத்தில் பரிசுத்த ஆவியைப் பெறும்படி தெரிந்து கொள்ளப்பட்டீர்கள். எடிப்ரூயிட் என்பவருடன் சேர்ந்து நான் அவருடைய இப்பாடலை பாடுகிறேன்: இளைப்பாறும் துறைமுகத்தில் நான் என் ஆத்து நங்கூரத்தை பாய்ச்சினேன் இனி கொந்தளிக்கும் கடலலைகள் மேல் நான் பயணம் செய்ய வேண்டியதில்லை கடும் புயற்காற்று கொந்தளிக்கும் ஆழ்க்கடலில் வீசினாலும் இயேசுவில் எப்போதும் பத்திரமாக என்றும் இருப்போம் 14தேவனை விட்டு நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது. அவருடைய வார்த்தையை விட்டு பின்வாங்கிப் போகாதீர்கள். தேவன் முடிவற்றவராக இருப்பாராயின், உங்களுக்கு பரிசுத்த ஆவியை அளிப்பாராயின், உங்களை அவர் எவ்வாறு கை விட்டு விடுவார்? அப்படிச் செய்வாராயின் அவர் என்னவிதமான காரியம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்? உங்கள் அனுபவத்தில் நீங்கள் வஞ்சிக்கப்படவில்லையெனில், பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றிருந்தால்! எபேசியர் 4:30ல் வேதம் என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள்: ''அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்''. எதுவரைக்கும் இருக்கும்படி பரிசுத்த ஆவியாகிய முத்திரை உங்களுக்கு போடப்படுகிறது? அடுத்த எழுப்புதல் வரையில் மட்டும்தானா? மீட்கப்படும் நாள் வரை யிலும் இருக்கும்படி நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப் பட்டிருக்கிறீர்கள். அடுத்த எழுப்புதல் வரையிலும் தான் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்களா? அப்படியாக இருக்கு மென்றால், அது முறையாக இருக்கிறதா? ''... நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கிலும் முத்திரையிடப்பட்டிருக் கிறீர்கள்'' எவ்வளவு காலம் வரையிலும்? உங்கள் மீட்பு உண்டாகிற வரைக்கிலும் முத்திரை நிலைத்திருக்கும். சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரயில்வே பெட்டி பற்றி சிந்தியுங்கள். அந்த பெட்டியில் சரக்குகள் முழுவதும் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையில், அது சரியாக சரக்குகள் ஏற்றப்பட்டு, முறையாக இருக்கிறதா, அல்லது இடைவெளிகள் உண்டா யிருந்து, வண்டி ஓடிக்கொண்டிருக்கையில், இடைவெளிகளினால் சரக்குகள் அசைந்து விழுந்து சேதம் விளைதல் உண்டாக்கி விடுமல்லவா, அதை பற்றி சோதிக்க அதற்குரிய ஆய்வாளர் வரும் வரையிலும் பெட்டியின் கதவுகளை அவர்களால் மூட முடியாது. ஆய்வாளர் வந்து, ஏதாவது இடைவெளிகள் இருந்தால், பொருட்கள் அசையாதபடி மேற்கொண்டும் சரக்குகளை ஏற்றி, பொருட்கள் அசைந்து விழுந்து விடுதல் ஏற்படாதபடி நெருக்க மாக வைத்து இருக்கிறார். அதன் பிறகே கதவுகள் மூடப்படு கிறது. அதே விதமாகத்தான் நம்மில் அநேகருடைய காரியமும் உள்ளது. நம்மில் அநேகர் இடைவெளிகள் இல்லாதபடி முழுவதுமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது இல்லை. பரிசுத்த ஆவியான வராகிய ஆய்வாளர் வந்து, நம்மில் அநேகம் இடைவெளிகள் காணப்பட்டால், அதை இன்னமும் அவர் முத்திரையிடுவது இல்லை . 15ஒரு சமயம், அதாவது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு பெரிய வேத பண்டிதர் என்னிடம் வந்து, ''நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன், அதாவது, 'ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப் பட்டது' அல்லவா?'' என்று கேட்டார். அதற்கு நான், ''ஆம், அது உண்மையிலே சரிதான்'' என்றேன். “மனிதன் விசுவாசித்தலைத் தவிர வேறு கூடுதலாக என்ன தான் செய்திட முடியும்?'' என்று கேட்டார். ''நான், 'அவ்வளவே அவன் செய்ய முடியும்'' என்றேன். அந்த மனிதர் ஒரு பாப்டிஸ்டு ஆவார். அவர் மீண்டும்: “அப்படியென்றால், இந்த பரிசுத்த ஆவியைப் பெறுவது என்கிற விஷயமும் அப்படித்தானே இருக்க வேண்டும், அதற்கு மிஞ்சி நீங்கள் இந்த விஷயத்தில் சிந்திக்கிறீர்களே? ஒரு மனிதன் விசுவாசித்தார்! நீங்கள் விசுவாசிக்கும் அந்த நிமிடமே பரிசுத்த ஆவியைப் பெறுகிறீர்களே'' என்று சொன்னார். நான் சொன்னேன்: இல்லை, இல்லை. வேதவாக்கியங்களில் நீங்கள் முரண்பாட்டை உண்டாக்குகிறீர்கள். ஆனால் வேத வாக்கியங்களோ ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லையே. 'நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண் டிருக்கிறீர்களா' என்று தானே பவுலும் கேட்டான்'' என்று நான் கூறினேன். அவர் “நல்லது...'' என்று கூறினார். நான், 'அது உண்மைதான், விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உடையவனாயிருந்து, தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப் பட்டது. ஆனால் தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஆபிரகாமுக்கு விருத்தசேதன மாகிய முத்திரையைக் கொடுத்தாரே'' என்றேன். 16அவர் இன்னமும் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பி யிருக்கவில்லை யென்றால், அவர் இன்னமும் அவருக்குள்ளாக உங்களுடைய விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும், உங்களுக்குள் இன்னமும் சில இடைவெளிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதையும் காட்டுகிறது. நீங்கள் விசுவாசித்திருக்கக் கூடும், ஆனால் இன்னமும் நிறைய குறைகள் உள்ளன. உங்களி லுள்ள இடைவெளிகள் யாவும் சரியானபடி அடைக்கப் பட்டிருக்குமானால், அப்பொழுது அவர் உங்களை உங்களது மீட்பின் நாள் வரைக்கிலும் இருக்கும்படியாக பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுகிறார். அவருக்குள்ளாக நீங்கள் அறிக்கை யிட்ட அந்த விசுவாசத்தை அவர் ஏற்றுக் கொண்டதற்குரிய தேவனுடைய உறுதிப்படுத்துதலாக நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப் படுதல் இருக்கிறது. ஆபிரகாம் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டான். தேவன், ''நான் உன் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக இப்பொழுது உனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன்'' என்று கூறினார். அவர் அவனுக்கு விருத்தசேதனமாகிய ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். இப்பொழுது கிறிஸ்துவை உங்களது சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவரை விசுவாசிக்கும் பொழுதும், மேலும் உங்கள் வாழ்க்கையை சுத்தமாக்கும்படி நீங்கள் அவரைக் கேட்கும்பொழுதும், அதன்பேரில் அவர் பரிசுத்த ஆவியானவருடன் திரும்ப வந்து உங்களுக்கு பரிசுத்த ஆவியாகிய அடையாளத்தைக் கொடுக்கையில், அப்பொழுது, நீங்கள் உங்க ளுடைய மீட்பு உண்டாகிற நாள் வரையிலும் முத்திரையிடப் படுகிறீர்கள். 17இங்கே இந்த சரக்கு ஏற்றிச் செல்லும் இரயில் பெட்டியைப் பற்றிப் பார்த்தோம். அதில் ஏதாவது இடைவெளிகள், சந்துகள் இருந்தால்... அந்த இடைவெளிகளெல்லாம் நீக்கும்படி சரியான படி அந்த பெட்டி, சரக்குகள் இட்டு நிரப்பி ஒன்று சேர்த்து அசையாதபடி உறுதிப்படுத்தப்பட்டு, அதன் பிறகு அதனுடைய கதவு மூடப்பட்டு, அது போய்ச் சேர வேண்டிய இடம் மட்டும் இருக்கும்படி ஒரு முத்திரை அதற்கு போடப்படுகிறது. அந்த முத்திரையை நீங்கள் உடைத்தால், அதற்காக இரயில் போக்கு வரத்து நிறுவனம் ஆயுட்கால சிறைத்தண்டனை உங்களுக்கு கிடைக்கும்படி செய்து விடும். அம்முத்திரைகளை உடைக்க முடியாது. அது போய்ச் சேர வேண்டிய இடமட்டும் இருக்கும்படி அம்முத்திரை போடப்பட்டுள்ளது. சரக்கு இரயில் பெட்டி ஒவ்வொரு ஊரிலும் வழிகளில் நிறுத்தப்பட்டு, முத்திரையை உடைத்து, திறந்து சோதித்துப் பார்க்கவும், ஏதாவது சாமான்களை உள்ளே போடவுமாக, அவ்வாறாக ஊருக்கு ஊர் அந்தப் பெட்டி திறக்கப்படமாட்டாது. அவ்வாறு செய்யப்பட முடியாது. குறிப்பிட்ட இன்ன சபை, “அந்த கோட்பாடு, அது சரி யல்ல, இது சரியல்ல” என்று கூறலாம். தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளிக்கும் பொழுது அத்துடன் அது முடிவு பெறு கிறது! அப்பொழுது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்றும், என்ன நேரிட்டுள்ளது என்றும் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் மீட்பின் நாள் வரைக்கிலும் இருக்கும்படியாக, அந்தக் காலம் வரைக்கிலுமாக முத்திரையிடப்படுகிறீர்கள். இப்புவி யாத்திரை யின் முடிவு பரியந்தமும் அம்முத்திரை தொடர்ந்து உங்கள் வாழ்க்கைப் பாதையெல்லாம் நீடித்து இருந்து வருகிறது. ஓ, என்னே! இப்படிப்பட்ட விஷயம், எந்தவொரு நபரையும், விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளவும், தேவனை விசுவாசிக்கவும், பரிசுத்த ஆவியின் வல்லமையில் எழும்பவும் செய்ய வேண்டும். 18இப்பொழுது, இக்கன்னியர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாதவர்களாயிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்த ஒரே குறை தங்களுடைய விளக்குகளில் எண்ணெய் இல்லாமலிருந்ததே. அது சரியா? “எண்ணெய்'' என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கும் என்று வேதாகமம் உரைக் கிறது. எனவே தான் வியாதியஸ்தர்கள் மேல் எண்ணெய் பூசி ஜெபிக்கிறோம், ஏனெனில் அது பரிசுத்த ஆவிக்கு அடையாளமாக உள்ளது. பரிசுத்த ஆவியானவர் அப்பொழுதும் இப்பொழுதும் அவர்கள் மேல் வரவில்லை என்றால், அவர்கள் அதைப் பெற்றிருக்க வில்லை. மணவாளன் வந்தபொழுது, தங்கள் விளக்குகளில் எண்ணெயைப் பெற்றிருந்த கன்னியர்களிடம் அவர்கள் கூறினார்கள். அவர்கள் சபையின் காலத்தில் இருந்தார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் சிலர் நல்லவர்களாயிருந்தனர். ஆனால் அவர்கள் நட்சத்திர ஒளியில் இருக்கவில்லை. அதாவது, அவர்களின் திரிகள் எண்ணெயில் மூழ்கியிருக்கவில்லை. அவர்கள் புறம்பாகப் போய்விட்டனர், அவர்கள் தங்களை பிரித்துக் கொண்டுவிட்டனர். ''விசுவாசமில்லாமல் அவர்கள் நம்மைவிட்டுப் போய் விட் டார்கள்'' என்று பவுல் தன் நாளில் கூறினான். அவர்கள் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும்படிக்கே நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். இவ்வாறு இக்காரியம் முதலாவதாக எபேசு சபைக் காலத்தில் சம்பவிக்க ஆரம்பித்து, அதேவிதமாக இக்காலம் முடிய தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அந்த காரியம் அந்த ஒவ்வொரு காலங்களிலும் நடை பெற்று வந்துள்ளது. அந்த காரியம் அந்த ஒவ்வொரு காலங்களிலும் நடைபெற்று, அடுத்து வந்த காலங்களிலும் தொடர்ந்து சம்பவித்து, கடைசியில் இக்காலத்திற்கும் அதே சம்பவம் வந்து விட்டது. சிறிது நேரத்தில் இதைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்கப் போகிறோம். இப்பொழுது கவனியுங்கள், இவர்கள் கறைபடாத கன்னி யராயிருந்த போதிலும், அவள் அழுகையும், புலம்பலும், பற் கடிப்பும் உள்ள ஸ்தலத்திற்குப் போகிறாள். 19எனது விலையேறப்பெற்ற பிரிய நண்பரே, நான் இப்பொழுது இதைச் சொல்லட்டும்: இங்கே இந்த சபையிலே நான் வருகையில், சுகமளிக்கும் ஆராதனையை நடத்த வியாதியஸ் தருக்காக ஜெபித்து, பிறகு வெளியிடங்களுக்கும் செல்வதுண்டு. ஆனால் இந்தக் குறிப்பிட்ட வேளை, நான் உங்களிடம் நீண்ட காலமாக கூறிக் கொண்டு வந்திருக்கிறேன், உங்களுடைய மனச் சாட்சியை சரியானபடி செயல்படவிடுங்கள். நாம் தானே இப்பொழுது ஒருவருக்கொருவர் உத்தமத்தோடும் உண்மை யோடும் இருக்க விரும்புகிறோம்; ஏனெனில் நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். பரிசுத்தமாகுதல் என்ற உபதேசத்தைக் கொண்டிருக்கிற விலையேறப் பெற்ற நசரேய சபைக்காரர்கள்'' மற்றும் ''யாத்திரீக பரிசுத்தர் சபையார்'' ஆகிய நீங்கள் அங்கேதான் தவறு செய்து விட்டீர்கள். யூதாஸ்காரியோத் அந்தக் கட்டம் வரைக்கிலும் சரியாக ஜீவித்தான் என்பதை நீங்கள் அறிந்துள் ளீர்களா? யூதாஸ் கர்த்தராகிய இயேசுவில் இரட்சகராக விசுவாசம் கொண்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டும் இருந்தான். யோவான் 17:17ல் “... பிதாவே உம்முடைய சத்தியத்தினால் அவர்களை பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்'' என்று இயேசு கூறியபொழுது, அவனும் (யூதாஸும்) பரிசுத்தமாக்கப்பட்டானே. இயேசுவே வார்த்தையாக இருக்கிறார். சரி. மத்தேயு 10ம் அதிகாரத்தில் சீஷர்களுக்கு வியாதியஸ்தரைக் குணமாக்கவும், மரித்தோரை எழுப்பும் பிசாசுகளைத்துரத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தேசத்தின் எல்லாப் பாகங்களிலும் சென்று, பிசாசுகளைத் துரத்தி விட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனைத் துதித்து ஆர்ப்பரித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள். இயேசு அவர்களிடம் “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற் காக சந்தோஷப்படுங்கள்'' என்றார். அது சரியா? யூதாஸும் அவர்களில் ஒருவனாக இருந்தான். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது யூதாஸும் அவர்களோடு இருந்தான். 20பிறகு பெந்தெகொஸ்தே நாளில், யூதாஸ் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பாக, அவன் யார் என்ற தன்னுடைய உண்மை யான நிறத்தை காண்பித்தான். அவன் இயேசுவை மறுதலித்து, அவரைக் காட்டிக் கொடுத்த துரோகியாக மாறினான். அப்படியே தான் அங்கே அந்த ஆவியானது வருகின்றது. லூத்தர், வெஸ்லி ஆகியோரின் காலங்கள் வழியாக சபையானது பரிசுத்தமாகுதல் வரைக்கிலும் வந்த பிறகு, அது கறைபடாத கன்னியர் வாழ்வை கொண்டு வந்தது. நீங்கள் சந்தித்தவர்களிலேயே மிகவும் சுத்தமான; தெளிவான, பரிசுத்தமான, அருமையானவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். அதுவரைக்கிலும் வந்தவர்கள், பின்பு, அந்நிய பாஷைகளில் பேசுதலும், பரிசுத்த ஆவியைப் பெறுதலையும் பற்றி வரும்பொழுது, 'நசரேய சபைக்காரர்களும் ''யாத்திரீக பரிசுத்தர்'' சபைக்காரர்களும் ஃப்ரீ மெத்தோடிஸ்டு களும், 'அது பிசாசினால் உண்டாயிருக்கிறது'' என்று கூறிவிடு கின்றனர். அவ்வாறு சொல்லுகையிலேயே அவர்கள் பரிசுத்த ஆவிக்கெதிராக தூஷணம் பேசி, தங்களையே நித்தியமாக புறம்பாக்கிக் கொள்கின்றனர். ஏனெனில், ''எவனாகிலும் மனுஷ குமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை''. 21சீஷர்கள் அனைவரும் அந்நிய பாஷைகளில் பேசினார்கள். இயேசுவும் சிலுவையில் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே மரித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் அவர்களோடு இடைபட முடியவில்லையெனில், அவர்களோடு நட்புக் கொள்ள இயலவில்லையெனில், அங்கே எப்படியிருக்கப் போகிறது? இங்கே இவர்கள் அந்நிய பாஷையில் பேசினால் அது பிசாசு என்று நீங்கள் கூறுவீர்களானால், அவர்களும் அப்படியே. எனவே அவர்கள் தாங்கள் இன்ன நிறத்தையுடைவர்கள் என்பதை காண்பிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். மற்ற ஐவருக் கிருந்தது போல எண்ணெய் இல்லாத ஐந்து கன்னியரும் பரிசுத்த வாழ்வையுடைவர்களாயிருந்தனர். பழமை நாகரீகம் கொண்ட அந்த நசரேய சபை, மற்றும் யாத்திரீக பரிசுத்தர் சபையினரையும் நான் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு எதிராக உங்களுடைய விரலைக் கூட நீங்கள் நீட்ட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் சுத்தமானவர்களாக இருக் கின்றனர். நாமும் அதைப் போலத்தான் ஜீவிக்க வேண்டும். அவ்வாறு தான் நீங்களும் வாழ வேண்டும். 22இப்பொழுது, விசுவாசிகளைப் போல நடிக்கிற அநேகமான பெந்தெகொஸ்தேயினரை நமக்கும் தெரியும். அது உண்மைதான். ஆனால் நீங்கள் ஒரு கள்ள டாலர் நோட்டைக் காண்கையில், அக் கள்ள டாலரானது ஒரு உண்மையான டாலரைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உண்மை. அங்கே உண்மையான பரிசுத்த ஆவி, அந்நிய பாஷையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் காட்டுகிற வராகிய உண்மையானவர் இருக்கிறார், அது பெந்தெகொஸ்தே நாள் முதல் இது வரைக்கிலும் இருந்து வந்திருக்கிறது. எனவே, உண்மையைப் போல நடித்துக் காட்டும் போலியானவனும் நமக்கு இருக்க வேண்டும். ஒரு உண்மையான ஸ்திரீ இருக்கிறாள் என்பதைக் காட்டும்படி, அதற்கு நேரெதிராக பொல்லாங்கான ஸ்திரீயும் இருக்க வேண்டும். சூரிய ஒளி மகிமை பொருந்தியது என்று எடுத்துக்காட்ட, நமக்கு கருமையான இருளான இரவு நேரமும் இருக்க வேண்டும். அது உண்மை . நல்ல ஆரோக்கியம் எப்படி என நாம் அனுபவித்திட, நீங்கள் வியாதிப்பட வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமுரிய பிரமாணமாக அது இருக்கிறது. அவ்வாறே அது காலமெல்லாம் இருந்து வந்திருக்கிறது. காலம், அல்லது வேளை என்று ஒன்று இருக்கும் வரையிலும், அது அவ்வாறே இருந்து வரும். 23சபையானது அந்த இடத்திற்கு நகர்ந்து வந்துள்ளது. மத்தேயு 24ல், கடைசி நாட்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக...'' என்ற அளவுக்கு இரு ஆவிகளும் ஒன்றையொன்று ஒத்திருப்பதுபோல் காணப்படும் என்ற அர்த்தத்தில் இயேசு நமக்கு கூறவில்லையா? உலகத் தோற்றத்திற்கு முன்னே தெரிந்து கொள்ளப்பட்டவன் எவனோ, அவனுக்குள் நித்திய ஜீவன் உண்டு. நித்திய ஜீவன் உங்களுக்குள் இருந்தால் அதை விட்டு உங்களால் விலகி ஓட முடியாது. தேவனைப் போல் நித்திய ஜீவனும் நித்தியமாயுள்ளது. தேவன் எப்படி முடிந்து போனவராக இருக்க முடியாதோ, அவ்வாறே நித்திய ஜீவனைப் பெற்ற எவரும் முடிந்து போக முடியாது. அது உண்மை . நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருக் கிறபடியால், நீங்கள் தேவனுடைய புத்திரனும், புத்திரியுமாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை அதினால் மாற்றம் பெற்றுள்ளது, நீங்கள் தேவனின் ஒரு பாகமாக இருந்து நித்திய ஜீவனைப் பெற்றுள்ளீர்கள். ஓ நான் தேவனை நேசிக்கிறேன், நீங்களும் அவரை நேசிக்கிறீர்களா? 24இப்பொழுது இன்னொருவர் ஒரு சிறு கேள்வியைக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பதிலளிக்க நாம் அதிக நேரம் எடுக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு சிறு கேள்வியைக் கொடுக்கும் போதெல்லாம், அதற்குரிய பதிலை அளிக்க நான் என்னால் முடிந்த அளவு செய்வேன். ஆனால் மேற்கூறிய கேள்வி ஒரு முக்கியமான தொரு கேள்வியாகும். “சபையில் பெண்கள் சாட்சிக் கொடுப்பதோ, பாடுவதோ, அந்நிய பாஷையில் செய்தி கொடுப்பதோ, செய்திகளை வியாக்கியானம் செய்வதோ, தீர்க்கதரிசனம் சொல்லுவதோ தவறாகுமா” என்பதை அறிய விரும்பி ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறார். ஒழுங்கின்படி அது இருக்கும் வரையிலும், அது தவறல்ல. சபையானது ஒழுங்குக்குள் இருக்கிறது. ஒழுங்கை விட்டு விலகும் போது மாத்திரமே... பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் நிகழ்த்தப்படும் முன்னர் தான் அந்நிய பாஷைகளில் பேசுதலும் அவைகளை வியாக்கியானம் செய்வித்தலும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான வழியாகும். பிரசங்கம் நடக்கும் போது அந்நிய பாஷைகள் பேசுதலும், வியாக்கியானம் செய்தலும் இருக்கக் கூடாது. ஏனெனில் பவுல் கூறிய வண்ணமாக, ஆவியானவர் ஒரு சமயத்தில் ஒரு இடத்திலிருந்து தான் கிரியை செய்கிறார். பெண்கள், தீர்க்கதரிசனம் உரைக்கவும், அந்நிய பாஷைகளில் பேசவும், வியாக்கியானம் செய்யவும் வர மளிக்கப்பட்டுள்ளனர்; ஆயினும் பிரசங்கிகளாக இருக்க அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் பிரசங்கிகளாக இருத்தல் கூடாது. சபைகளில் பிரசங்கிக்க அவர்கள் தடை செய்யப் பட்டுள்ளனர் என்பது சரிதான். சபையில் பெண்கள் முதன்மை ஸ்தானத்தை வகிக்கவும், போதகர்களாயிருக்கவும் தடை செய்யப் பட்டுள்ளனர். ஆனால் எல்லா வரங்களைப் பொருத்தமட்டில், பெண்களுக்கு, 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தின்படி, எல்லா வரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்; ஒன்றோ அல்லது ஒன்பது வரங்களில் எதையாகிலும் பெற்றுக் கொள்ளவோ இயலும். அவளுடைய வரங்கள் உரிய நேரத்தில் உரிய ஸ்தானத்தில் அதற்குரிய செய்தியைத் தெரிவிக்கக் கூடாதபடிக்கு அவளுக்கு கட்டு ஏதும் இல்லை. ஒவ்வொரு செய்தியும் அதனதன் வேளைக்காக காத்திருக்கிறது. அதாவது அந்தந்த வேளையில் உரிய செய்தி யானது வருகிறது. 25சபையில் அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஒருவனுண்டா யிருந்தால், பாஷையை வியாக்கியானம் செய்கிறவன் அங்கே இல்லையெனில், அவன் பேசும் பாஷையை வியாக்கியானம் செய்பவன் ஒருவன் இருக்கிற வரையிலும், பாஷையில் மட்டும் பேசுபவன் அமைதியாக இருக்கக்கடவன். இந்த செய்திகள் ஆராதனையில் பிரசங்கத்திற்கு முன்பாக வந்துவிட வேண்டும். அதன்பிறகு தீர்க்கதரிசியானவள்... அதாவது பிரசங்கியார், பிரசங்கியார் தான் புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாக இருக்கிறான், அவன் பிரசங்கிக்க வருகையில் தேவன் அவன் மூலமாக கிரியை செய்ய ஆரம்பிக்கிறார் என்பதைப் பாருங்கள். ஆகவே பிரசங்கம் துவங்குவதற்கு முன்பாக, அந்நிய பாஷைகளில் பேசுதலும், வியாக்கியானம் செய்தலும் உண்டாயிருக்கிறது. அதற்குப் பிறகு செய்திகள் அளிக்கப்படுதல் உண்டாகிறது. எப்பொழுதும் இவ்வாறான ஒழுங்குகள் யாவும் நடைபெற வேண்டும். ஆனால் ஒரு பெண்ணுக்கு வரங்களைப் பெற்றுக் கொள்ள உரிமையுண்டு. 26இதற்குப் பதிலளிக்க நான் சிறிது நேரம் எடுத்துக் கொள் கையில், அடுத்ததாக, பின்வரும் தலைப்புச் செய்தியை, செய்தித் தாளிலிருந்து நான் வாசிக்கப் போகிறேன். “மூன்று மாதங்களில் ஒருங்கிணைந்த ஒரே வேதாகமத்தின் மொழி பெயர்ப்பு ஆரம்பமாகிறது. அக்டோபர் 15 : கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள், மற்றும் யூத மத அறிஞர்கள் ஒரு குழுவாக இயங்கி, நீண்ட காலமாக எதிர்பார்க் கப்பட்ட, ஆதார வேதப் புத்தகம் என அழைக்கப்படும் வேத வாக்கியங்களின் புதிய மொழி பெயர்ப்புக்காக கூட்டாகச் சேர்ந்து வேலை ஆரம்பித்துள்ளார்கள். இதைப் பற்றி நான் அறிவிப்புச் செய்யும் முன்னர், சில விஷயங்களை பற்றி நான் இன்னும் கொஞ்சம் இங்கே ஆராய விரும்புகிறேன. அதாவது, நாம் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அவைகள் இந்நாட்களில் நடக்கும் என்று சரியாக வேதவாக்கியங்கள் முன்னுரைத்துள்ளன. இவைகள் யாவும் ஒருங்கிணைந்து, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. அது அப்படியே இருக்கிறது. அவர்கள் அதை முயன்றிருக்கிறார்கள், அதற்காக அவர்கள் கிரியை செய்து கொண்டிருக்கிறார்கள், அதை இந்த வேளையில் முன்னிலைப்படுத்துவதற்கு வேறு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது அவர்களுக்கு சரியான தருணம் வாய்த்துள்ளது. ஏனெனில் அது அவர்கள் கையில் தயாராக இருந்து கொண்டிருக்கிறது. இதுவே ஏற்ற வேளை என்று நான் கருதுகிற படியால் தான், இந்த தீர்க்கதரிசன செய்திகளை நான் இங்கே கொண்டு வருகிறேன். 27ஒவ்வொரு இரவிலும் திரும்பி வருகிறவர்கள் யாராகிலும் இருந்தால், சீக்கிரமாக ஆரம்பித்து, சீக்கிரமாகவே கூட்டத்தை முடித்துவிடுவோம். நான் எடுத்துக் கொண்ட பொருளில் உள்ள செய்தியை நான் அந்தந்தக் கூட்டத்தில் முடிக்காவிடில், அடுத்த நாள் காலையில் நான் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் 9ம் வசனம் முதல் 20ம் வசனம் முடிய உள்ள வசனங்களை நாம் இன்றிரவில் முடிக்க இயலாமற் போனால், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆரம்பிப்போம். நாம் எவ்வாறு தொடரப் போகிறோம் என்பதை ஒவ்வொரு ஆராதனையின் முடிவிலும் முன்கூட்டியே அறிவித்து விடுவோம். நாளை இரவு எபேசு சபையில் துவங்கி; ஏழு இரவுகள் எபேசு சபைக் காலம், சிமிர்னா சபைக் காலம், பெர்கமு சபைக்காலம், தீயத்தீரா சபைக்காலம், சர்தை சபைக்காலம், பிலதெல்பியா சபைக்காலம், மற்றும் அடுத்த ஞாயிறன்று, லவோதிக்கேயா சபைக்காலம் என்று வரிசையாக பிரசங் கிக்கப்படும். 28நமது பாதையில் கிடக்கின்ற இந்த மகத்தான விலையுயர்ந்த ஆபரணங்களைப் போன்று இருக்கின்ற இச்செய்திகளை நாம் அறிந்திருக்கையில், உரிய வேளை வருகின்ற வரையிலும், அதைப் பற்றி பேசாமலிருக்க என்னால் முடியாது. இந்த மகத்தான செய்திகளை நான் கண்டு, ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் போஷிப்பதை உணரும்போது, அவைகளைப் பற்றி, விரைவாக ஆவியில் குதித்தெழும்பி பிரசங்கித்துவிட வேண்டும் என்று விழைகிறேன். ஆயினும், அந்தந்த காலத்தை அதினதின் காலத்திலும், வேளையிலும் பொருத்தி வைக்க வேண்டியுள்ளது. எனவே, இரவு ஆராதனைக்கு நீங்கள் வர இயலாது போனால், ஒலிநாடாக்கள் மூலமாவது அல்லது வேறெந்த வகையிலாகிலும் இச்செய்தி எங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விழைகிறேன். பரிசுத்தாவியானவரால் நடத்தப்பட்டபடியினால் நான் இதை பிரசங்கித்திருக்கிறேன். அதினால் நான் இதை பிரசங்கித்துள்ளேன். சபைக்கு இது உதவியாக இருக்காது என்று நான் நினைத் தேயானால்... மேலும் இந்நாளிலே, நினைவில் கொள்ளுங்கள், இம்மாதிரியான கூட்டங்களை நாம் நடத்த முடியாதபடி அப்படிப்பட்ட வேளையானது விரைவில் வரும். எனவே, இக்கூட்டங்களை நடத்துவதற்குரிய வேளையானது நமக்குக் கிடைத்திருக்கையில் அதை நடத்தியாக வேண்டும். எப்பொழுது அவர்கள் இக் கூட்டங்களைத் தடை செய்வார்கள் என்பது நமக்குத் தெரியாது. 29எனவே, சபைகள் யாவும் ஒன்று கூடும், அவ்வாறு ஒன்றிணைந்து, சபைகளின் சம்மேளனத்தின் தலைமையை உருவாக்குவார்கள். ஏற்கனவே பெரிய ஐ.நா. சபை ஸ்தாபனம் உள்ளது, அதில் எல்லா சபைகளும் அங்கம் வகிக்கின்றன. அதில் உள்ள சபைகளிலொன்றில் நீங்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்; அப்படி இருக்க மறுத்தால், நீங்கள் வெளியே தள்ளப்படுவீர்கள். அந்த வேளையில்தான் நாம் நமது நிறங்களை (நாம் யார் என்பதை) காட்ட வேண்டியவர்களாக இருப்போம். நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. அது அனுமானத்தினால் அறிந்து கொள்ள வல்லது அல்ல. அந்த சிறிய சபையானது, எப்பொழுதுமே சிறுபான்மையாகத்தான் இருந்து வந்துள்ளது. அது மிகவும் சிறிய ஒரு குழுவாகும்... வேதாகமத்தை சுற்றி நிற்கும் சிறிய சிவப்பு நூலைப் போல அது உள்ளது. எப்பொழுதும் அதுவே அந்த உண்மையான சபையாக இருந்து வருகிறது. நாம் அதை நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். 30மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னர், ஒரு சிறிய கருத்துரையைக் கூற விரும்புகிறேன். இன்று காலையில் இயேசு கிறிஸ்துவே அந்த உன்னதமான தெய்வம் என்பதை பற்றிய வெளிப்பாட்டை எடுத்துக் கொண்டோம். அவரைத் தேவன் நமக்கு இன்று காலை வெளிப்படுத்தினார். மகத்தான இருக்கிறேன் என்பவர் அவர். (இருந்தேன் அல்லது இருப்பேன் என்று அல்ல) அவர் எப்பொழுதும் இருக்கிறேன் என்பதாகவே இருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் வெளிப்படுத் தலைப் பற்றிப் பார்க்கிறோம். யாரைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல் அது. முதலாவதாக அவர் தன்னைப் பற்றி என்ன வெளிப்பாட்டைத் தருகிறார்? அவர் பரலோகத்தின் தேவன் என்பதாக வெளிப் படுத்துகிறார். தன்னை திரித்துவக் கடவுள் என்று அவர் வெளிப் படுத்தவில்லை, தன்னை ஒரே தேவனாகவே வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் துவக்கத்திலேயே அவர் தன்னை ஒரே தேவன் என்று தான் வெளிப்படுத்துகிறார். முதலாம் அதிகாரத்தில் அந்த வெளிப்பாட்டை அவர் நான்கு தடவைகள் உரைக்கிறார், ஏனெனில் அதைப் பற்றி ஒரு தவறான கருத்தும் இருக்கக் கூடாது என்பதினால்தான். முதலாவதாக நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில்; அவர் வெறும் தீர்க்கதரிசியல்ல, அவர் ஒரு இளைய தேவன் அல்ல, அவர் இரண்டாவது தெய்வம் அல்ல, அவர் தேவனே! அவர் தேவனாக இருக்கிறார். எனவே தான், வெளிப்படுத்துதலானது வந்தது. நாம் அந்த வெளிப் படுத்துதலோடு இன்றிரவிலும் தொடர்ந்து, அவரது ஏழு விதமான மகிமையான தோற்றங்களை பெறுகிற வரையிலும் அதனுடன் செல்கிறோம். 31இந்த வார்த்தைகளை நாம் போதிக்கையில் தேவன் நமக்கு உதவி செய்வாராக. நான் இவைகளின் வரலாற்றுப் பூர்வ அடிப்படையை ஆராய்ந்துள்ளேன். ஆயினும், நான் பிரசங்க பீடத்திற்கு வந்து ஆவியின் ஏவுதலைப் பெறுகிற வரையிலும் காத் திருக்க வேண்டும். ஏனெனில் நாம் யாவரும் ஒருமித்து கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் வீற்றிருக்கிறோம் என்பதை உணரு கிறேன். உங்களிலுள்ள உங்களுடைய பாகமான ஆவியானது, அந்த அக்கினிமயமான நாவானது (பரிசுத்து ஆவியானவர்) உங்களிலிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது, அவரிலிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது; இப்படியாக மகத்தான தேவனு டைய சரீரம் முழுவதுக்கும் பரவி, அதை அக்கினிமயமாக்குகிறது, அங்கேதான் வெளிப்படுத்துதல் உண்டாகிறது. 32''ஸ்திரீகள் இன்னின்ன காரியங்களை சபையிலே செய்ய லாமா'' என்பதான கேள்வியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந் தோம். அந்தக் காரியம் தான் சபையை ஆதியில் அதினுடைய குழப்பத்தில் ஆழ்த்த ஆரம்பித்தது. பரிசுத்தமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் எடுத்துப் போட்டு, பிரசங்க பீடத்தில் தகாத காரியத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆனால் தேவனோ தான் பேசுகிறதைக் கேட்கிறவர்களாகிய சபையின் தேவனாயிருக்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் அவர் கிரியை செய்கிறார். தேவன் வசிப்பதற்கு இடம் கொடுக்கும் எந்த இதயத்திலும் அவர் ஜீவிக்கிறார். வரம்பெற்ற மக்களை அவர் கண்டு, அவர்கள் மூலம் கிரியை செய்கிறார். பிசாசினால் அவர்களை எந்தவொரு காரியத்திலும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை யெனில், அப்பொழுது அவன் வந்து ஒன்றுக்கும் உதவாத காரியத்தின் மேல் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி, அதினால் மக்களை விலகி ஓடிப் போகப் பண்ணுவான். '... சபையாரெல் லாரும் ஏகமாய் கூடி வந்து, எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக் கொள்ளும் போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசி களாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?'' என்று பவுல் கூறியது போல, சிலர் அந்நிய பாஷைகளில் அப்படியும், இப்படியுமாக தாறுமாறாக பேசிக் கொண்டிருந்தால் அது ஒன்றுக்கும் உதவாது. ஆனால் பவுல் கூறினான்; '.... யாராவது தீர்க்கதரிசனம் சொல்லி இருதயத்தின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டால், அப்பொழுது, அவர்கள், “மெய்யாகவே தேவன் உங்களுக்குள் இருக்கிறார்'' என்று கூறுவார்கள். ஆனால் ஒருவர் அந்நிய பாஷைகளில் வெளிப்படுத்துதலினால் பேசி, சபையை பக்தி விருத்தியடைச் செய்யும்படி அதனுடைய வியாக்கியானத்தைக் கொடுக்கும் பொழுது, முழு சபையும் அதினால் பக்திவிருத்தி யடைகிறது. நாம் அறியாத பாஷைகளில் தேவன் பேசுதல் யாராவது ஒருவர் மூலம் உண்டாகி, அதனுடைய வியாக்கியான மானது இன்னொருவருக்குக் கொடுக்கப்பட்டு, அவ்வாறு உரைக்கப்பட்டு, அவ்வாறு உரைக்கப்பட்ட காரியம் உரைத்த வண்ணமாக சம்பவிக்கும் போது, அப்பொழுது, உங்கள் நடுவில் கர்த்தருடைய ஆவியானவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. அவ்விதமான காரியத்திற்காக நாம் முயற்சி செய்வோமாக, நண்பர்களே, அந்த அக்கினியானது நம்மில் பற்றியெரியச் செய்வோமாக. 33மகத்தான பிரமாணமாகிய வேத வாக்கியங்களை வாசிக்க நாம் நிற்கும் முன்பாக, சில நிமிடங்கள் நாம் யாவரும் எழுந்து நின்று, நமது நிலைகளை சற்று மாற்றிக் கொண்டு, ஜெபம் பண்ணு வோமாக. அது நமக்கு கஷ்டமான காரியமல்ல என்று எண்ணு கிறேன். கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, இந்த 1900 ஆண்டுகள் கழித்து இன்னமும் எங்களுக்கு பிழையேதுமில்லாத பரலோகத்தின் தேவனாக அவரை அளித்த சர்வ வல்லமையுள்ள தேவனே, இதற்காக நாங்கள் நன்றி செலுத்துகி றோம். அவரது பிரசன்னம் எங்களோடு, தினந்தோறும், எங்களது அன்றாட வாழ்க்கையில் இருக்கிறதற்காகவும் நன்றி செலுத்துகி றோம். இந்த குழப்பமான வேளையில் உலகமானது செய்வதறியாது திகைத்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பூமிக்கடியில் பதுங்கு குழிகளையும், காங்க்ரீட்டினால் ஆன பாதுகாப்பரண்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிருக்கையில், ஓ, தேவனே! தேவனு டைய கோபத்தினின்று அவர்களால் தப்பமுடியாது. ஆனால் ஒரேயொரு நிவாரணம் மட்டுமே உண்டு. அதை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்ததற்காக மகிழ்ச்சியா யிருக்கிறோம்: ''... இரத்தத்தை நான் காண்கையில் உங்களை நான் கடந்து செல்வேன்...''. இந்த இராத்திரியிலே, எவ் வகையிலும் போதுமானதாயிருக்கிற தேவ ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் உண்டான பாதுகாப்புக்காக நாங்கள் எவ்வளவு சந்தோஷ மாயிருக்கிறோம்! அந்த மகாபிரதான ஆசாரியர் இன்று இரவிலே, மகிமையில் நின்று கொண்டு, நமது அறிக்கையின் பேரில் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். நமது மத்தியில் இன்றிரவில், அந்த மகத்தான பேச்சாளரை, மகத்தான பரிசுத்த ஆவியானவரை, மகத்தான அபிஷேகத்தை தருபவரை, மகத்தான ஜீவனை அளிப்பவரை, நாம் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்பொழுதும், தேவனாகிய கர்த்தாவே! இன்றிரவில் இக்கூரையின் கீழே இந்த ஜனங்களை நான் எந்த மனிதனின் பேரிலுமாக அழைத்திருக்கவில்லை; ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்களை அழைத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தையும் அவரது சிந்தையையும் ஆண்டு கொண்டிருந்ததும், அவரை நிரப்பி ஆண்டு கொண்டிருந்ததுமான அந்த ஆவியானவர் இன்றிரவில் எங்களுக்குள் வந்து, தேவ வசனத்தை வியாக்கியானித்து, அதை அவருக்காக காத்திருக்கிற தான எங்களுடைய பசியுள்ள இருதயங்களுக்கு பிரசங்கித்து, அளிப்பாராக. அவருடைய நாமத்தினால் அவருடைய மகிமைக் காக இதைக் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 34வேதாகமத்தை வைத்திருக்கிற நீங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, அதில் 9ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போமாக. நான் பிரசங்கித்துக் கொண்டே போகையில், சில தேதிகளை நான் கொடுப்பேன். அவைகளை நீங்கள் உங்களுடைய காகிதங்களில் எழுதுகோல்களைக் கொண்டு குறித்துக் கொள்ளலாம். இப்பொழுது, இது உண்மையிலேயே... இன்று காலையில் உள்ள செய்தி அதிகமும் பிரசங்க நடையில் இருந்தது, கிறிஸ்துவில் தேவன் வெளிப்படுத்தலாகிய தெய்வத்துவத்தைப் பற்றிய வெளிப்பாட்டிற்குரிய அஸ்திபாரத்தைப் போடுகிறதாக இருந்தது. அதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? கிறிஸ்துவில் தேவன் வெளிப்பட்டார், யேகோவா கிறிஸ்துவில் வெளிப் பட்டார். தேவன் இப்பொழுது எங்கே வெளிப்பட வேண்டும்? அவர் தன்னுடைய சபையில், அவரது ஜனங்களுக்குள், நம்மில் வெளிப்பட வேண்டும். அதே ஆவியானவர், அதே கிரியைகள், அதேவிதமான பிரத்தியட்சப்படுதல், அதே அன்பு, அதே மன்னிக்கும் தன்மை, அதே நீடிய பொறுமை, நற்குணம், அதே பொறுமை, சமாதானம், இரக்கம் ஆகிய இவை முதலானவை கிறிஸ்துவில் இருக்கிறவை, இப்பொழுது அவரது சபையில் காணப்படுகிறது. நினைவில் கொள்ளுங்கள், இதை சிந்தையில் வையுங்கள், தேவனுடைய தன்மை யாவும் அப்படியே கிறிஸ்துவில் ஊற்றப்பட்டது (சரீரப் பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் அவருக்குள் வாசமாயிருந்தது). கிறிஸ்துவின் தன்மை யாவும் அப்படியே சபையில் ஊற்றப்பட்டது. தேவன் நமக்கு மேலாகவும், தேவன் நம்முடனும், தேவன் நமக்குள்ளும் இருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய இம்மூன்றும் ஒரு சேர தன்னகத்தே கொண்டுள்ள ஒரே தேவன், இம்மூன்று வித்தியாசமான விதங்களில் பிரத்தியட்சமானார். 35வெளிப்படுத்துதலானது, அவர் மூன்று தேவர்கள் அல்ல வென்றும், அவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவரும் அல்ல என்பதையும் காண்பித்தது. அவர் ஒரே தேவன் தான். பிதாத்துவத்தின் நாட்களில் இருக்கிற தேவனும் அவரே, குமாரத்துவத்தின் நாட்களில் உள்ள தேவனும் அவரே, அதேதேவன் தான். மூன்று வித்தியாசமான நபர்கள் அல்ல, மூன்று நபர்கள் அல்ல, மூன்று தனித்தனி ஆள்தத்துவம் உள்ளவருமல்ல. அவர் ஒரே நபர்தான், ஒரே ஆள்தத்துவமுள்ளவர் தான் நீங்கள் ஒரு ஆளாக இருந்தால்தான் உங்களுக்குள் ஆள் தன்மை (அல்லது ஆள் தத்துவம்) இருக்க முடியும். சிலர், “அவர் மூன்று நபர் களல்ல, ஆனால் அவர் மூன்று ஆள் தத்துவங்களைக் கொண்டவராக இருக்கிறார்'' என்று கூறுகின்றனர். நீங்கள் ஆள், ஆள் தத்துவம் என்பனவற்றை வெவ்வேறாக பிரிக்க முடியாது. ஏனெனில், அவர் ஒரு ஆள் தத்துவமுடையவராக இருக்கிறாரென்றால், அப்பொழுது அவர் ஒரு ஆளாக இருக்கிறார். ஒரு ஆளாக இருந்தால் தான் ஆள் தத்துவத்தைக் கொண்டிருக்க முடியும். எனவே, அவர் ஒரு நபர் (ஆள்) தான், ஒரு ஆள் தத்துவத்தையுடைவர் தான். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், அல்பா, ஒமெகாவாக இருக்கிறார். இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர். ஓ! அவரே எல்லாமுமாயிருக்கிறார். அதை நான் நேசிக்கிறேன். 36அவருடைய தன்மையையும், அவர் ஜீவியத்தையும், அவருடைய கிரியைகளையும் கவனியுங்கள். அவைகள் அவரு டைய நாளில் இருந்தது போலவே, இங்கே இப்பொழுதே இந்தக் கூடாரத்திலும் பிரத்தியட்சமாக வேண்டும். (இதை நான் விருப்பு வெறுப்பின்றி உள் நோக்கமில்லாமல் கூறுகிறேன், தேவன் அதை அறிவார்). இங்கு மட்டுமல்ல, உலகம் பூராவிலும் அவ்வாறே பிரத்தியட்சமாக வேண்டும். அவ்வாறே காரியமானது உள்ள படியால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அப்பொழுது நாம் எங்கே நிற்கிறோம் என்பதை அறிகிறோம், ஏனெனில், அதே ஆவியான வரை நாம் கொண்டிருக்கிறோம், அவர் நம்மோடு அசைவாடி, தாம் அங்கே இருக்கிறதை காண்பித்துக் கொண்டு இருக்கிறார். நாம் இவைகளைச் செய்யவில்லை, அவர் தான் கிரியை செய்கிறார், நம்மால் அவைகளை செய்ய முடியாது. அது தேவன் தான். அது மட்டுமல்லாமல், இந்த விஞ்ஞான உலகில் அவருடைய புகைப் படத்தை எடுக்க அவர் அனுமதித்துள்ளார். அவர் நம்மோடு, நம்மில் இருந்து, நமக்கு மேல் இருந்து, நம் மூலமாகவும், நம்மில் உள்ளிலும் புறம்பிலும் கிரியை செய்து வருகிறார். ஓ! இது எவ்வளவு அருமையாயிருக்கிறது. இந்தச் சிறிய பாடலை அவர்கள் பாடுவது வழக்கம். எரியும் முட்செடியிலிருந்து மோசேயுடன் பேசி இருக்கிறவர் நான் தானே ஆபிரகாமோடு பேசினவரும், விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறவர் நான்தானே சாரோனின் ரோஜாவாய் இருக்கிறவர் நான்தானே ஓ! நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நீ உரைத்தாயா என் பிதாவை நீ அறிவாயா? அல்லது அவரது நாமத்தை உன்னால் கூற முடியுமா? ஓ!நான் யார் என்பதை நீ கூறுவாயா? அல்லது நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நீ கூற முடியுமா? என் பிதாவை நீ அறிவாயா அல்லது அவரது நாமத்தை நீ கூற முடியுமா? நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும், அந்த முமாயிருக்கிறேன், சர்வ சிருஷ்டியும் நானே, இயேசு என்பது எனது நாமமாகும். 37ஓ! வெளிப்படுத்துதலானது எத்தனை ஆச்சரியமாயிருக்கிறது. ஒருக்காலும் வேதபண்டிதர்கள் மூலமாக உங்களுக்கு கிட்டாது, அந்தவிதமாக அது வராது என்பதை நீங்கள் இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு வெளிப்படுத்துதலாகத் தான் வரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படுகிற தண்ணீர் ஞானஸ்நானம், வெளிப்படுத்தல் மூலமாக மட்டுமே நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இயேசுவும் தேவனும் ஒரே நபர்தான் என்பது வெளிப்படுத்துதல் மூலமாகத் தான் அறிந்து கொள்ள முடியும். முழு வேதாகமும் வெளிப்படுத்தல் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. மத்தேயு 17ல் '... நான் உனக்குச் சொல்லு கிறேன்.... இந்தக் கல்லின் மேல் (ஆவிக்குரிய வெளிப்பாடு) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை'' என்று கூறப்பட்டுள்ளது. கத்தோலிக்க சபையைத் தவிர, மார்ட்டின் லூத்தர் காலம் வரையிலும் அதன் பிறகு பிராடெஸ்டெண்ட் சபையிலும் தவிர ஆதியில் எப்பொழு தாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எவருக்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா என்பதை வரலாற்றுப் பூர்வமாகவும் வேத பூர்வமாகவும் யாராவது நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று நாங்கள் சவால் விடுக்கிறோம். 38மேலும் ஒவ்வொரு தீய காரியமும்.... சபைக் காலங்களைக் குறித்து நாம் படிக்கையில், நீங்கள் கவனியுங்கள். முதல் சபையில் காணப்பட்ட ஒவ்வொரு தீதான காரியமும், அப்படியே தனக் கடுத்ததான சபையின் காலத்திற்குள்ளும் கடந்து சென்றது. இவ்வாறு அது தொடர்ந்து ஒவ்வொரு சபைக் காலத்திற்குள்ளும் வளர்ந்து கொண்டே போய், முடிவில் கடைசிக் காலத்தில் அது ஒரு விசுவாசத் துரோகமாக முடிவடையும் அளவுக்கு வந்திருக் கிறது. ஒவ்வொரு தீமையும் இவ்வாறு அடுத்தடுத்து வந்த சபைக் காலத்திற்குள்ளும் நீண்டு கொண்டே வந்துள்ளது. ஒவ்வொரு தவறான போதகமும் ஆரம்பித்து, அடுத்தடுத்து வந்த காலங்களுக் குள்ளும் தொடர்ந்தது. ஆதியாகமத்தில் உள்ளது போல, அந்த கள்ள திராட்சச் செடியானது வளர ஆரம்பித்து, பின்பு, சபைக் காலத்திற்குள்ளாக படர்ந்து கொண்டே போய் இந்தக் கடைசி நாட்களில் புறப்பட்டு வெளியே வருகிறது. 'அந்த நாளுக்குத் தப்புகிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று வேதம் கூறியது ஒன்றும் ஆச்சரியமல்லவே. ஆம், இவற்றினின்று அது தப்பித்துக் கொள்கிறது. 39இப்பொழுது, தேவனிடம் கேளுங்கள்... வெளிப் படுத்தலைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கையில், இதைப் பற்றிய வெளிப்பாட்டை உங்களுக்கு அளிக்கும்படி அவரிடம் கேளுங்கள். ஏனெனில் இது வெளிப்பாட்டினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நீங்களும் வெளிப்படுத்துதலினால் தான் இரட்சிக்கப் பட முடியும். அதைப் பற்றிய ஒரு அறிவு உங்களுக்கு மூளையின் அறிவினால் உண்டாயிருந்தாலும், அது வெளிப் படுத்தப்பட வில்லையெனில், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. “பரிசுத்த ஆவியினாலேயன்றி, ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது''. வேதம் அவ்வாறுதான் கூறுகிறது. ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே, இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியும். ”போதகர் அவ்வாறு கூறினார், வேதம் அவ்வாறு கூறுகிறது'' என்று அவர் கூறலாம். அவர்கள் சொன்னது உண்மைதான். “சபை அவ்வாறு கூறுகிறது'' எனலாம். அது உண்மைதான். ஆனால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அதை வெளிப்படுத்தி அவர் உங்களில் வாசம் செய்கிற வரைக்கிலும், நீங்களாக அதை அறிய மாட்டீர்கள். ”பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவர் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது''. அறிவினாலல்ல, விவேகத்தினாலல்ல. 40பகலும் இரவும் எவ்வாறு ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருக்கிறதோ, அவ்வாறே, தங்களுக்குள் ஒரு வகையிலும் பொருந்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ள யூதர்கள், கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள் ஆகிய இவர்கள் மூவருக்கும் பொருந்தும்படியான ஒரு வேதாகமத்தை அவர்கள் எவ்வாறு உருவாக்கப் போகிறார்கள்? யூதர்கள் அதை விட சரியாக அறிந்துள்ளார்கள் என்றே நான் நினைத்தேன். இவ்வாறு உருவாவதற்குரிய வேளை இதுவே என்று நான் அனுமானிக் கிறேன். அங்கே தான் அந்த பெரிய விசுவாசத் துரோகத்திற்குள் யாவும் ஒன்றுபட வேண்டும். ஆகவே யாவும்... அவ்வாறு அது உருவாவதை நம்மால் தடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் நம்மால் செய்யக் கூடியது என்னவெனில், அங்கே நாம் ஒளியை வீசச் செய்ய வேண்டும், அதற்காக நாம் நம்மையே இரத்த சாட்சியாக கொடுக்க வேண்டியதிருக்கலாம். அவ்வாறு செய்து அதை விட்டு நாம் கடந்து செல்லலாம். அவ்வாறுதான் நாம் செய்ய முடியும். ஆனால் அநேகர் அதைச் செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த விதத்தில்தான் வேதமானது அமைக்கப்பட்டுள்ளது, நாம் ஈடுபட வேண்டிய காரியங்களும் அமைந்துள்ளது. நான் அதை கவனிக்காவிடில், நான் அதற்குள் போய்விடுவேன். 41இப்பொழுது இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் முதலாவது காரியமானது என்னவெனில், இயேசு கிறிஸ்து யார் என்பதைப் பற்றி காண்பிக்கும், இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்பாடாக அது முதலாவதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவனாவார். அதை நாம் அறிவோம். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர் ''ஆமென்'' என்று கூறு கின்றனர் -ஆசி). அவர் சர்வ வல்லமையுள்ள தேவன், அவருக்கு ஒரே நாமம் (பெயர்) மட்டுமே உண்டு. இயேசு கிறிஸ்து என்பதே அந்த நாமம். வானத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்த ஒரே நாமத்தினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். தண்ணீரண்டை வருகையில் மட்டும் அவர்கள் ஏன் அதற்குப் பயப்படுகிறார்கள் என்பதைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாருங்கள்? ஏனெனில், சிமிர்னா சபையின் காலத்தில் அந்த ஆவியானது உள்ளே நுழைந்து, பிறகு, அது அந்தப் பெரிய இருள் காலத்திற்குள்ளும் படர்ந்து, இலங்கி, பின்பு அது உபதேசமாக ஆக்கப்பட்டு, இப்பொழுது இந்தக் கடைசி காலத்திற்குள்ளும் பரந்து விரிந்து நிற்கின்றது. இப்பொழுது இந்த வாரத்தில் நாம் வேதத்தையும், வரலாற்றையும் ஆராய்கையில், எவ்வாறு அந்த தவறான உபதேசமானது புறப்பட்டு வந்தது என்பதை கவனியுங்கள். 42அடுத்த காரியத்தைப் பார்ப்போம். அது கிறிஸ்துவினால் யோவானுக்கு ஒரு தூதன் மூலமாக, அவருடைய (என்ன?) சபைகளுக்கு கொடுக்கப்படும்படியாக, அதை அவருடைய சபை களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கும்படியாக கொடுக்கப்பட்டது. அவருடைய கரத்திலிருக்கும் அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளுக்குரிய ஏழு தூதர்களாவர். அந்தச் செய்தியை பெற்றிருக்கிறவன் எவனோ, அவன் அதைப் பெற்றுக் கொள்ளு வான்; அச்செய்தியானது ஆதியில் ஆரம்பித்து அதே உண்மையான செய்தியாகவே இருக்கும். நாளை, தேவன் எவ்வாறு இக்காரியங்களை அசைத்தார் என்பதைக் காணும்படி, நாம் அந்த ஆழமான இடங்களில் இறங்குகையில், அது ஆச்சரியமாக இருக்கும், உங்களை அது ஆர்ப்பரிக்கச் செய்யும். நான் இதைப் பற்றி படிக்கையில், அதைப் படித்துவிட்டு, பின்பு சற்று சுற்றிலும் நடந்து, சப்தமிட்டு, திரும்ப வந்து உட்கார்ந்து, பின்பு மீண்டும் சற்று நடந்தேன். அதைப் பற்றி அறிந்ததினால் இவ்வாறு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். நாம் வாழ்கிற இக்காலத்தில் அதைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்படி அருளியதற்கு தேவன் எவ்வளவாய் நம்மேல் இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார்! ஏன்? 'ஒரு விலையேறப் பெற்ற முத்தைக் கண்டு, போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக்கொள்ளுகிறான்'' என்று இயேசு சொன்னதற்கு ஒப்பாக அது இருக்கிறது. இந்த மகத்தானதை அடையத்தக்கதாக, நீங்கள் உலகின் காரியங்கள் யாவையும் உலகுக்கே விற்றுவிடுகிறீர்கள். அது உண்மை . உங்களுடைய முழு நங்கூரத்தையும் அந்த மகத் தானதின் மேல் பாய்ச்சி விடுங்கள். அவருடைய வார்த்தையைப் பற்றிய அவருடைய வெளிப்பாட்டைப் பார்க்க உதவும் ஆத்தும நங்கூரமாயுள்ளது அது. 43இதை வாசிக்கிற எவனும் பாக்கியவான். அது சரிதானே? இன்று காலையில் நாம் கூறினோம். உங்களால் இதை வாசிக்க முடியவில்லையெனில், அதை வாசிக்கக் கேட்டால் பாக்கிய வான்கள் என்று. இப்பொழுது, இது, அமர்ந்து வாசிக்கக் கேட்கிற வர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறி துவங்குகிறது. இதோடு எதை யாவது எவனாவது கூட்டினாலோ, அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டாலோ, அவன் மேல் சாபத்தை உரைத்து முடிகிறது. இயேசுவே சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதாக வேதாகமம் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறதென்றால், அதை வேதத்தி லிருந்து எடுத்துப் போடுகிறவன் எவனோ அவனுக்கு ஐயோ! ஆம், அது வெளிப்படுத்துதலாக இருக்கிறது. இதோடு எந்த ஒன்றையும் கூட்டுகிற எவனும்... அது வெளிப்படுத்துதலின் முழு பிரமாண மாக உள்ளது. அது தேவனுடைய கடைசிப் புத்தகமாக உள்ளது. அவருடைய கடைசி வசனங்கள்... அவருடைய கடைசி... அதற்கு முரண்பட்டதாக வரும் எந்தவொரு வெளிப்பாடும் கள்ளத் தீர்க்க தரிசனமாக இருக்கிறது, அது தேவனல்ல. ஏனெனில் இதுவே சத்தியமாயிருக்கிறது. வேதம் முழுவதிலும், கிறிஸ்து தாமே அங்கீகாரத்தைத் தந்து உறுதிப்படுத்தும் ஒரே புத்தகம் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அவரைப் பற்றிய வெளிப்பாட்டைத் தருகிற ஒரே புத்தகம். அவர் தனது முத்திரையைப் பதித்திருக்கிற ஒரே புத்தகம் இது, அவருடைய ஆசீர்வாதங்கள், அவருடைய சாபங்கள் இரண்டையும் இதில் வைத்திருக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளு கிறவர்களுக்கு ஆசீர்வாதங்களும், ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு சாபங்களும் கிடைக்கப் பெறும். 44இப்பொழுது, நாம் துவக்கமாக, பத்மு தீவுக்குப் போவோம். 9ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். முதலாவதாக, இச்செய்திக்கு நாம் “பத்மு தீவு தரிசனம்'' என்று தலைப்புக் கொடுப்போமாக. கி.பி.95 முதல் கி.பி.96 முடிய உள்ள காலத்தில் இது சம்பவித்தது. பத்மு என்னும் தீவு தான் இது நடந்த ஸ்தலம். இத்தீவு இருந்த இடம். ஏஜியன் கடலில், எபேசு சபை இருந்த பட்டிணத்திற்கு எதிரே கடலில், ஆசியா மைனரின் கடற்கரைக்கு மேற்கே 30 மைல்கள் அப்பாலும், மத்திய தரைக் கடலை எல்லையாகக் கொண்டும் இருக்கிறது. அந்த ஸ்தானத்தில் தான் அத்தீவு உள்ளது. எண்ணிப் பாருங்கள்! பத்மு என்னும் இத்தீவானது, ஏஜியன் கடலில், ஆசியா மைனர் கடற்கரைக்கு அப்பால் 30 மைல்கள் தூரத்திலுள்ளதாகும். முதல் செய்தி கொடுக்கப்பட்டதும், அச் சமயத்தில் யோவான் மேய்ப்பனாக இருந்ததுமான எபேசு சபை இருந்த எபேசு பட்டிணத்திற்கு எதிர்திசையில் இத்தீவு அமைந் திருந்தது. அதாவது, யோவான் பத்மு தீவில் இருந்து கொண்டு கிழக்கு நோக்கி, தன்னுடைய சபையை நேராக நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான். முதல் செய்தியானது அவனது சபைக்குரிய தாக இருந்தது, அச்சபை, ஒரு சபைக் காலத்திற்கு முன்னடை யாளமாக இருந்தது. அது சரியே. அவ்வேளையில், எபேசு சபைக்கு மேய்ப்பனாக இருந்த திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவானுக்கு தரிசனமாக அருளப்பட்டது. 45என்னவிதமான நிலையில், அந்த வேளையானது இருந்தது? அத்தீவு எங்கே இருந்தது, என்ன நிலையில் அது இருந்தது? சரி, வரலாற்றிலிருந்து அத்தீவு, பாறைகளால் நிறைந்ததொரு தீவு என்றும், அங்கே விஷ ஜந்துக்களான சர்ப்பங்களும், தேள்களும், பல்லிகளும் நிறைந்ததுமான தீவு என்றும் அறியப்படுகிறது. அது 30 மைல்கள் சுற்றளவு உள்ளதாகும். முழுவதும் பாறைகளால் நிறைந்திருந்தது. யோவானின் நாட்களில் அது அல்கேட்ராஸைப் போல் உபயோகிக்கப்பட்டது (Alcartraz). அல்கேட்ராஸ் என்பது, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் உள்ள பெலிக்கன் தீவில் அமைந்திருந்த ஒரு சிறைச்சாலை இருந்த ஸ்தலத் திற்குப் பெயர் ஆகும். ரோமச் சக்கர வர்த்தியின் அரசானது, சாதாரண சிறைச் சாலைகளில் வைக்க முடியாத மிகக் கொடுங்குற்றவாளிகளை பத்மு தீவுக்கே நாடு கடத்தினார்கள். அத்தீவுக்கு நாடு கடத்தி, அக் குற்றவாளிகள் அங்கேயே மரிக்கட்டும் என்று விட்டு வந்தார்கள். 46யோவான் ஏன் அங்கே அனுப்பப்பட்டான் என்று கேள்வி எழும்புகிறது தேவபக்தியுள்ள ஒரு மனிதன் அவன், நீதியுள்ள மனிதன், நல்ல கீர்த்தியுள்ள மனிதன், நல்ல குணமுடையவன், ஒருபோதும் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதவன், இப்படிப்பட்ட மனிதன் ஏன் இங்கே இருந்தான்? “தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்'' யோவான் பத்மு என்னும் தீவில் இருந்தான் என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது நமக்கு காட்சியமைப்பு கிடைத்துவிட்டது. ஏஜியன் கடலில், கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 30 மைல்கள் தூரத்தில், பத்மு என்னும் தீவு அமைந்துள்ளது, அங்கே முழுவதும் பாறைகள் நிறைந்திருந்தது. முழுவதும் பல்லி, தேள்கள் மற்றும் இன்னபிற விஷ ஜந்துக்கள் நிறைந்தவையாயிருந்தது. அல்கேட்ராஸைப் போல அது ஒரு சிறைச்சாலையாயிருந்தது. அல்கேட்ராஸ் என்ற இடத்தில், சிறைச்சாலையில் வைக்க முடியாத அளவுக்கு உள்ள மிகக் கொடுங் குற்றவாளிகளைக் கொண்டு போய் போட்டு விடுவார்கள். 47அவர்கள் இந்த திவ்விய வாசகனாகிய பரிசுத்த யோவான் என்ற இந்த சீஷனை இங்கே கொண்டு வந்து போட்டு விட்டார்கள். சீஷர்களிலேயே கடைசியாக மரணமடைந்த சீஷன் யோவானே. அவன் இயற்கை மரணமெய்தினான். யோவான் இந்த தீவில் கொண்டு போடப்படும் முன்னதாக, ஒரு “பில்லி சூனியக்காரன்'' என்று குற்றஞ்சாட்டப்பட்டான். அவனை அவர்கள் ஒரு கொதிக்கிற எண்ணெய் கொப்பரையில் போட்டு 24 மணி நேரம் கொதிக்க வைத்தார்கள். ஆனால் அந்தக் கொதிக்கிற எண்ணெய் அவனை சுட்டுப் பொசுக்கி அழித்துவிடவில்லை. ஒரு நபருக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியை உங்களால் வேக வைக்க முடியாது. அது தேவன் தாமே. அவனை எண்ணெய் நிறைந்த கொப்பரையில் போட்டு இருபத்தி நான்கு மணி நேரம் கொதிக்க வைத்தார்கள். ஆனால் அவனுக்கு எத்தீங்கும் அணுகவில்லை. இவ்வாறு யோவான் கொதிக்கிற எண்ணெயில் போடப்பட்டும் அவனுக்கு தீங் கொன்றும் அணுகாததைக் கண்ட ரோமானியர்கள், ”யோவான் சூனியக்காரனானதினால், எண்ணெய்க்கு மந்திரம் போட்டு விட்டான்'' என்ற காரணத்தைக் கூறினார்கள். மாம்ச சிந்தை என்ன விதமாக அதைப் பற்றி சிந்திக்கிறது பாருங்கள்! அவ்வாறே அவர்கள் “மனோவசியத்தின் மூலம் சிந்தையைப் படிக்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்கள் மற்றும் பெயல்செபூல்'' என்று நம்மைக் குறித்தும் அவர்கள் கூறுகையில், எங்கிருந்து அந்த பழைய ஆவி யானது வந்துள்ளது என்பதைப் பார்த்தீர்களா? ஆனால் அந்த உண்மையான ஆவியானது எங்கிருந்து வந்துள்ளது என்பதைக் கண்டீர்களா? அது சபைக் காலங்களிலிருந்து வந்தது. பாருங்கள்? தள தள என்று கொதிக்கும் எண்ணெயில் இருபத்து நான்கு மணி நேரம் போட்டு அவனைக் கொதிக்க வைத்தும், அது அவனை தொடவேயில்லை. ஓ! எவ்வளவாய் தேவன் அவருடைய பரிசுத்த ஆவியானவரை அரணாக வைத்து அவனைப் பாதுகாத்தார்! அவனுடைய வேலை இன்னமும் முடியவில்லை. 48பின்பு அவனை அவர்கள் அத்தீவில் இரண்டு ஆண்டுகள் போட்டிருந்தார்கள். இவ்வாறு அவன் தேவனுக்கென்று தேவனால் தனிமைப்படுத்தப்பட்ட போது, கர்த்தருடைய தூதன் வெளிப் படுத்திய பிரகாரம், அவன் இந்த வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எழுதினான். அது முடிந்தவுடன், தன் சொந்த நாட் டிற்கு வந்து, எபேசுவில் இருந்த சபைக்கு அவன் மேய்ப்பனானான். திவ்விய வாசகனாகிய யோவான் எபேசுவில் மரித்து, அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டான். இப்பொழுது ஓ! என்னே ஒரு அருமையான காட்சியமைப்பு உள்ளது! யோவான் 9ம் வசனத்தில், அப்பொழுது உள்ள சபையானது உபத்திரவத்தில் இருந்து வந்துள்ளதாக எழுதியிருக்கிறான். “உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்து வைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்”. வெளி.1:9 அதாவது அவன் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அது தேவனுடைய வார்த்தை தான் என்பதை நிரூபித்து கொண் டிருந்தான். கிறிஸ்துவும் அவன் மூலமாக திரும்பி வந்து அவன் சொல்வது சரியே என்பதை சாட்சியிட்டார். தேவனுடைய வார்த்தை யோவானில் பிரத்தியட்சமாகி, அவன் தேவனுடைய ஊழியக்காரன் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களால் அதை மறுக்க முடியவில்லை. எனவே அவர்கள் வேறு காரணம் கூற முடியாமல், அவனை ஒரு “சூனியக் காரன்'' என அழைத்தார்கள். 'அவன் எண்ணெயை மந்திரம் செய்து விட்டான், அது அவனுக்கு ஒரு கெடுதியும் செய்யவில்லை. மக்களை அவன் சூனிய சக்தியினால் மயக்கிப் போட்டான், அவர்கள் சுகமடையவில்லை, அவன் குறி சொல்லுகிறவனாயிருந் தான், அதனால் முடியவில்லை...'' என்று இவ்வாறெல்லாம் அவனைக் குறித்து கூறினார்கள். ”ஒருவிதமான தீய ஆள் அவன், கெட்ட, வஞ்சக ஆவியைப் பெற்றவன்'' என்றெல்லாம் அவனைக் குறித்துக் கூறியிருப்பார்கள். அவன் மக்கள் சமுதாயத்துக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவன் எனக் கருதி அவனைக் கொண்டு போய் இத்தீவில் போட்டுவிட்டார்கள். ஆனால் அவனோ, இத்தீவில் போடப்பட்டதில் தேவனுடைய சித்தத்தை நிறை வேற்றுகிற வனாகவே இருந்தான். அந்த மோசமான நிலையிலும் யோவானைப் பற்றி தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது. 49அவனுக்கு உபத்திரவங்களும் மற்றும் வேறு காரியங்களும் இருந்தன. தேவனால் அங்கே அவனை உபயோகிக்க முடிய வில்லை. ஏனெனில் பரிசுத்தவான்கள் அவனிடம் வந்து கொண் டிருந்தார்கள். அவர்கள் அவனிடம், “ஓ! சகோதரன் யோவானே! இதைப் பற்றி நாம் என்ன செய்யலாம், நாம் என்ன செய்யலாம்?'' என்று வினவிக் கொண்டிருந்தார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்பதை நாம் அறிவோம். எனவே அவர்கள் அவனிடம் வந்து இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே தான் தேவன் ரோம சாம்ராஜ்யத்தைக் கொண்டு அவனை எடுத்து அந்த தீவில் போடச் செய்தார். அவர் அவனிடம், “யோவானே வா, நான் சம்பவிக்கப் போகிற ஒரு காரியத்தை காண்பிக்கப் போகிறேன்'' என்றார். இதை எழுதுவதற்கு அப்பொழுது அப்போஸ்தலர்களில் யோவானைத் தவிர வேறு யாரும் உயிரோடிருக்கவில்லை. எனவே அவர்கள் அவனை கி.பி.95 முதல் 96 முடிய பத்மு தீவில் போட்டு வைத் திருந்தார்கள். அவன் அதை எழுதி இவ்வாறு கூறுகிறான். “.... உங்கள் சகோதரனும் உபத்திரவத்தில் உங்கள் உடன் பங்களானுமாயிருக்கிற...'' இப்பொழுது இங்கே யோவான் மகா உபத்திரவத்தைக் குறித்து பேசவில்லை. யோவான் கூறுகிற உபத்திரவம் மகா உபத்திரவ காலம் அல்ல, அது சபைக்கு நேரிடாது. மகா உபத் திரவம் யூதருக்குத் தான் நேரிடப் போகிறது; அது சபைக்கு நேரிடப் போகிறதில்லை. எனவே, எனவே அது மகா உபத்திரவ மல்ல, உபத்திரவம் மட்டுமே. 50இப்பொழுது 10ம் வசனம்: “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்” “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்...'' நீங்கள் முதலாவதாக ஆவிக்குள்ளாகாமல் உங்களால் நன் மையானதொன்றையும் செய்ய முடியாது. தேவனால் அது வரைக்கிலும் உங்களை உபயோகிக்க முடியாது. ஆவிக்குள்ளாக நீங்கள் முதலில் எதையும் செய்யும் வரையிலும், உங்கள் முயற்சிகளெல்லாம் வீணாக இருக்கிறது. ''நான் பாடினால் ஆவிக்குள்ளாகப் பாடுவேன், நான் ஜெபித்தால் ஆவிக்குள் ஜெபிப்பேன்'' என்று பவுல் கூறினான். நன்மையான எந்தவொன்றும் உங்கள் மூலமாக வருகிறதென்றால், அது எனக்கு ஆவியால் வெளிப் படுத்தப்பட்டு, (வார்த்தையினால் உண்டாகிற விளைவுகளினால் வார்த்தை பிரத்தியட்சமாகி), வார்த்தையினால் அது உறுதிப்படுத் தப்பட வேண்டும். 51இதையே இன்னொரு விதமாகக் கூறுவோமெனில், “இயேசு கிறிஸ்து தன் வார்த்தையில், நான் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவேனெனில், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவேன்'' என்று வாக்களித்துள்ளார் என்று நான் கூறுவேனாகில், அப்பொழுது, நான் செய்ய வேண்டிய முதல் காரியமென்னவெனில், நான் மனந்திரும்ப வேண்டும். அது உண்மையானது தான் என்பது எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். அப்பொழுது ஏற்படும் விளைவு என்னவெனில், நான் பரிசுத்த ஆவியைப் பெறுதலேயாகும். நான் சுகவீனமாயிருக்கிறேனென்றால், எனக்கு அவர் செய்துள்ள வாக்குத்தத்தம் என்னவெனில், நான் விசுவாசித்து, சபையின் மூப்பர்களை வரவழைத்து, அவர்கள் எனக்கு எண்ணெய் பூசி ஜெபித்தால், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்பதேயாகும். “கர்த்தாவே, நான் உம்முடைய கட்டளையைப் பின்பற்றுகிறேன், மூப்பன் ஒருவன் எனக்காக எண்ணெய் பூசி ஜெபிக்கட்டும்'' என்று நீங்கள் கூறுவீர்களானால், அப்பொழுது அதுவே போதுமானதாயிருக்கிறது, தொடர்ந்து அவ்வாறு செல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும். 52நீங்கள் ஒருவேளை, 'ஓ! எவ்விதத்திலும் ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை'' என்று கூறலாம். தேவ ஆட்டுக்குட்டி யாகிய இயேசுவை தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னரே பலியிட்டு விட்டார். தேவனுடைய சிந்தையில் இயேசு பலியிடப் படுவது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. நானோ அல்லது நீங்களோ அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் தேவனுடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எப்பொழுதா கிலும் இடம் பெற்றிருந்திருக்குமானால், அது உலகத்தோற்றத்திற்கு முன்னரே இடம் பெறும்படி செய்யப்பட்டு விட்டது. தேவன் எதையாகிலும் உரைக்கிற பொழுது, அது சம்பவித்தாக வேண்டும். ஆகவே, தேவன் விதிக்கிற யோக்கிய தாம்சங்களை நீங்கள் பூர்த்தி செய்வீரென்றால், தேவன் தாமே பிரத்தியட்சமாகி, மீதமுள்ளதை அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்களோ, அது முடிந்து போன ஒரு கிரியை என்று முன்னேறிச் செல்லலாம். ஓ! இது அற்புதமாக இல்லையா? ஓ, என்னே! எண்ணிப் பாருங்கள்! தேவனிடம் கூறுங்கள்... தேவன் கூறினார், ''நீங்கள் இன்னின்னதைச் செய்யுங்கள், நான் இதைச் செய்வேன்'' என்று. நல்லது, நான் போய் இதைச் செய்தால், தேவனும் அதைச் செய்தாக வேண்டும். 53இப்பொழுது பிசாசு கூறுகிறான், “பார்த்தாயா, அவர் தாமதிக்கிறாரே'' என்று. அது எந்த வித வித்தியாசத்தையும் ஏற்படுத்தி விடப் போகிறதில்லை. தானியேல் ஒரு தடவை ஜெபித்த பொழுது, தூதன் அவனிடம் வந்து சேருவதற்கு 21 நாட்கள் தாமதமாயிற்று. ஆயினும் தானியேலோ மனம் தளர்ந்துவிடவில்லை. எப்படியும் அவர் வருவார் என்று அவன் அறிந்திருந்தபடியினால், அவன் அவர் வருகிற வரையிலும் காத்திருந்தான். அது உண்மை . ஓ! அப்பொழுது தான் நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டிருக் கிறீர்கள். இதை நாம் பெற்றுக் கொண்டால், உடனே சுகமளித்தல் ஆராதனை வைத்துக் கொள்வோமல்லவா? அது விசுவாசத்தினால் உண்டானது. ஆனால் நமக்கு ஆத்துமாவை குணமாக்கும் ஆராதனை, உள்ளான மனிதன் குணமடைவதற்காக தேவையா யிருக்கிறது. ஏனெனில், அதுதான் நிலைத்திருக்கப் போகிறது. நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள், நித்திய ஜீவனானது மறைந்து போவதில்லை, அது முதுமை அடைவதும் இல்லை. அது மாறாமல் நிலைத்திருக்கிறது. 54எதுவும் சம்பவிக்கும் முன்பு யோவான் ஆவிக்குள்ளானான். முதலாவது அவன் செய்ததென்னவென்றால், அவன் பத்மு என்னும் தீவில் இருந்தான். (அவன் செய்ததெல்லாம் இது தான்) “நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்'' என்று கூறினான். மற்றும் ஏனைய காரியங்களை அவன் செய்தான். ஆனால் எதுவும் சம்ப விக்கும் முன்பாக அவன் முதலில் ஆவிக்குள்ளானான். உங்களு டைய வேதாகமத்தில் நீங்கள் கவனிப்பீர்களானால், ஆவி (ஆங்கில வேதாகமத்தில் Spirit என்பது கொட்டை எழுத்துக் களில் உள்ளது - மொழி பெயர்ப்பாளர்) என்பது பெரிய எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது - பரிசுத்த ஆவியானவர். ஆமென்! அவன் ஆவிக் குள்ளானான். ஓ! அது அற்புதமானது என்று கருதுகிறேன். '... கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்...' எந்த நாளில்? கர்த்தருடைய நாளில், இப்பொழுது, ஒரு பெரிய விவாதம் இதைப் பற்றி உள்ளது? ஒரு நிமிடம் நாம் அதை வாயடைப்போம். இன்று காலையில் நாம் கூறியபடி, சிலர் மத்தேயு சுவிசேஷம் 16ம் அதிகாரத்தின் வெளிப்பாடு “பேதுரு'' என்பதாகும் என்று கூறுகிறார்கள். கத்தோலிக்க சபையானது, ''அவர் தன் சபையை பேதுருவின் மேல் கட்டினார்; பேதுரு தான் முதலாவது போப் ஆவார்'' என்று கூறுகிறது. பேதுரு போப்பாக இருந்து கொண்டு எவ்வாறு திருமணம் செய்தவராக இருக்க முடியும்? பார்த்தீர்களா? ''பேதுரு ரோமாபுரிக்குச் சென்று, அங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்'' என்றும் கூறுகிறார்கள். வரலாற்றிலோ அல்லது வேறு எதிலோ பேதுரு ரோமாபுரிக்குச் சென்றான் என்பதை நிரூபிக்கும் சான்று ஒன்றை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். பேதுரு ரோமாபுரிக்கு செல்லவில்லை, பவுல் தான் சென்றான். அது தான் சரி. 55எனவே இந்த எல்லா தவறான போதகங்களும் உள்ளே நுழைந்தவைகளாகும். பாருங்கள்? ஆனால் இன்றைக்கு ஜனங்கள்... நீங்கள் போகிற இடமெங்கும் அவர்கள்... ஏதோ ஒரு சபையானது, அவருடைய கையில் கடாவப்பட்டிருந்த ஆணிகளில் ஒன்று தன்னிடம் இருப்பதாக கூறிக் கொள்ளுகிறது. இவ்வாறான ஆணிகள் எத்தனை தங்களிடம் உள்ளன என்று அவர்கள் இன்று கூறிக் கொள்ளுகிறார்கள்? பத்தொன்பது ஆணிகள். அவர்களிடம் எலும்புகள் உள்ளன. அவருடைய அங்கியின் துண்டுகள் தங்களிடம் உள்ளன என்று கூறுகிறார்கள். அவைகளெல்லாம் நம்மிடம் இல்லை. நமக்கு அவைகள் தேவையுமில்லை. கிறிஸ்து உயிரோடிருக்கிறார்! அவர் நமக்குள் இருக்கிறார். அவர் ஒன்றும் ஏதோ ஒரு ஆணியிலோ, ஒரு துண்டுத் துணியிலோ, அல்லது அவருடைய எலும்பு என்று அவர்கள் உரிமைப் பாராட்டும் ஒரு எலும்புத் துண்டிலோ இருக்கவில்லை. அவர் ஜீவிக்கிற தேவனானவர், அவர் இப்பொழுது நமக்குள் ஜீவித்து, தம்மை பிரத்தியட்சப்படுத்திக் கொண்டிருக்கிறார். நினைவுச் சின்னமாக நம்மிடையே ஒரேயொன்று தான் உள்ளது, அதுவே அவருடைய மரணத்தை நினைவு கூருதலுக்காக உள்ள கர்த்தருடைய இராப்போஜனமாகும். ஆனால் கிறிஸ்துவைப் பொருத்தமட்டில், அவர் நம்முடன் இருக்கிறார், அவர் நமக்குள் இருக்கிறார். அதைத் தான் நாம் உலகுக்கு (பரிசுத்த ஆவியானவரின் மகிமை) அசை வாட்டிக் காண்பிக்க விரும்புகிறோம். ஒளியானது மறைந்து போகிற வரையிலும் அதை அசைவாட்டிக் கொண்டிருங்கள். அது சரிதான். 56எனவே, நாம் சாலையின் வேறு பக்கத்தை எடுத்துக் கொண் டோம் என்பதை நீங்கள் பாருங்கள். இவ்வாறே இருக்க நான் எப்பொழுதும் முயன்றதுண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்த்தர் எப்பொழுதும் அதை எனக்கு வெளிப்படுத்தியே இருக் கிறார். சாலையின் தீவிர வலது ஓரமும், தீவிர இடது ஓரமும் உள்ளன. ஆனால் சாலையின் நடுவில் சத்தியமானது இருக்கின்றது. பெருவழி ஒன்று உண்டாயிருக்கும் என்பதாக அவர் கூறியதைப் பற்றி ஏசாயாவில் நீங்கள் கவனித்தீர்களா? அது ஏசாயா 35ல் உள்ளது. ''பரிசுத்தத்தின் பெருவழிப்பாதை, பரிசுத்தத்தின் பெரு வழிப்பாதை“ என்ற பாடலை நமது மதிப்பிற்குரிய நசரேய சபைச் சகோதரர்கள் பாடுவது உங்களுக்கு ஞாபகமிருக்கும். சரியானபடி உங்கள் வேதத்தை நீங்கள் வாசிப்பீர்களானால், அங்கே, பரிசுத்தத்தின் பெருவழி'' (Highway of holiness) என்று சொல்லப் படவேயில்லை. வேதம் கூறுகிறது: ''... இங்கே பெருவழி ஒன்று உண்டாயிருக்கும், ஒரு வழியும் உண்டாயிருக்கும்; அது (அது ”பரிசுத்தத்தின் பெருவழி'' என்னப்படும் என்றில்லாமல்) பரிசுத்த வழி என்னப்படும்'' பெரு வழி உண்டாயிருக்கும் என்ற வார்த்தைக்குப் பிறகு கூட்டிடைச் சொல் வந்து அந்த வார்த்தை முடிவடைகிறது. அதற்கு பிறகு, “ஒரு வழி'' என்பது வருகிறது. 'அங்கே பெருவழி ஒன்று உண்டாயிருக்கும்; ஒரு வழியும் உண்டாயிருக்கும், அது பரிசுத்த வழி என்னப்படும்...''. அது பரிசுத்தத்தின் பெருவழி என்று கூறப்படவேயில்லை. ஒரு வழியானது, ஒரு சாலையானது போடப்படுகிறது. .... ஒரு நல்ல சாலையானது உருவாக்கப்படுகிறது. அச்சாலையின் உயர்ந்த பாகமானது அதின் நடுவில் தான் உள்ளது. ஏனெனில், அது எல்லா குப்பை கூளங்களும் கழுவப்பட்டு சாலையில் இரு ஓரங்களுக்கும் போய்விடும்படி செய்துவிடுகிறது. அது மனிதன் உண்மையி லேயே கிறிஸ்துவண்டை வருகையில், அவன் தனது கண்கள் கிறிஸ்துவில் மாத்திரம் மையம் கொள்ளும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் சற்று உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தால், அவன் ஒரு மூடபக்தியுள்ளவனாக ஆகிவிடுகிறான். அவனோ சற்று குளிர்ந்து போன நிலையில் இருப்பானென்றால், சாலையின் இன்னொரு ஓரத்திற்கு போய்விடுவான், அவன் குளிர்ச்சியான ஒரு வெள்ளரிக்காயாக ஆகிவிடுவான், சாலையின் மற்ற ஓரத்திற்குப் போய்விடுவான். அவனது லௌகீக ஞானம், பாருங்கள். ஆனால் பிரதானமான காரியமானது சாலையின் நடுமையத்தில் உள்ளது, அங்கே, உங்களை அனலுள்ளவர்களாய் வைத்து அசையச் செய்ய போதுமான அளவுக்கு உங்களுக்குள் ஆவியானது உள்ளது. ஆமென்! அது தானே ஆவியானவரின் கீழ்ப்படிதலுக்குள் உங்களை நீங்கள் வைத்துக் கொள்ள போதுமானபடி அறிந்து கொள்ளச் செய்கிறது, அவர் ஆவியானவர் அசைகிறபடி நீங்கள் அசையும்படி செய்கிறார். அவர் அசைவாடப் போகும் வரையிலும் அல்ல, அல்லது அதற்குப் பிறகு அல்ல, ஆவியானவர் அசைகிறபடி நீங்களும் அப்பொழுது அசைவதற்காக. 57கத்தோலிக்க சபையானது, “வெளிப்பாடானது பேதுரு வாகும்'' என்று கூறியது. பிராடெஸ்டெண்ட் சபை, 'அது கிறிஸ்துவாயிருக்கிறது'' என்று கூறியது ஆனால் வேதமோ, 'தேவன் கிறிஸ்துவைப் பற்றி அளிக்கும் வெளிப்பாட்டின் மேல் அது கட்டப்பட்டுள்ளது'' என்று உபதேசிக்கிறது. ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து“. “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஒரு மனிதனோ, ஒரு வேதக்கல்லூரியோ, அல்லது ஒரு குரு மடமோ அல்லது வேறு எதுவுமோ இதை உனக்குப் போதிக்கவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் படுத்தினார். நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை”. 58இரண்டு வித்தியாசமான கருத்துக்கள் ஏற்படுகிற இன் னொரு இடத்திற்கு நாம் வருகிறோம். நான் ஒருவேளை தவறாயிருக்க லாம். நான் தவறாயிருந்தால் தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால் நான் ஏழாம் நாள் சபைக்காரர்களோடு கருத்தொருமித்துப் போகவில்லை. அச்சபையார் ''கர்த்தருடைய நாளில் என்று யோவான் கூறியது வாரத்தின் ஏழாம் நாளைக் குறிக்கிறது'' என்று கூறுகிறார்கள். யோவான் கர்த்தருடைய நாளில் என்று குறிப் பிடுவது ஓய்வு நாளைக் குறித்துத்தான் என்று ஏழாம் நாள் சபைச் சகோதரர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த அநேகரும் கூறுகிறார்கள். கிறிஸ்தவ சபையானது, “வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமை'' தான் கர்த்தருடைய நாள் என்று கூறுகிறார்கள். பிராடெஸ் டெண்டு சபையினர், இன்றளவும், ஞாயிற்றுக் கிழமையைத் தான் கர்த்தருடைய நாள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை நாம் அநேக தடவைகளில் கவனித்திருக்கிறோம். அவ்வாறு கூறுவதெல்லாம் வேதபூர்வமானதல்ல. வேதத்தின்படி, ஞாயிற்றுக்கிழமையானது வாரத்தில் முதல் நாள் தான், அது கர்த்தருடைய நாளல்ல. அது ஏழாம் நாளாகிய ஓய்வு நாளுமல்ல. கர்த்தருடைய நாள் என்பது ஞாயிறு அல்லது சனி ஆகிய இவ்விரண்டு நாட்களில் ஒன்றாக இருப்பது கூடாத காரியம். ஏனெனில் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷித்தப் புத்தகத்தை எழுத இரண்டு ஆண்டுகள் பிடித்தது. ஏழாம்நாளோ அல்லது வாரத்தின் முதல் நாளோ என்று இருக்குமானால், அக்காலக் கட்டத்திற்குள் அநேகமான ஏழாம் நாட்களும், வாரத்தின் முதல் நாட்களும் வந்து போயிற்றே. 59வேதத்தின் வெளிப்படுத்தின விசேஷமானது கி.பி. 95 முதல் 96 முடிய உள்ள இரண்டாண்டுக் காலத்தில் எழுதப்பட்டது. அது தான் கர்த்தருடைய நாளாகும். கர்த்தருடைய நாள் என்பது வசனம் என்ன கூறுகிறதோ அதின்படியேயாகும். அது அப்படியேதான் இருக்க வேண்டும். யோவானானவன் கர்த்தருடைய நாளுக்குள் ஆவியில் கொண்டு செல்லப்பட்டான். இது மனிதனின் நாளாகும். ஆனால் கர்த்தருடைய நாளானது இனி வருகிறதாயிருக்கிறது. வேத வாக்கியங்களை படிக்கையில், அவன் கர்த்தருடைய நாளில் இருந்தான் என்றும், அவன் ஆவியில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான் என்பதாகப் பார்க்கிறோம். ஆமென்! அது சரியே. அவன் கர்த்தருடைய நாளில் இருந்தான் என்பதைப் பாருங்கள். வேதமானது கர்த்தருடைய நாளைப் பற்றி பேசுகிறது. அது சம்மந்தமான அநேக வாக்கியங்களை நாம் சிறிது பார்க்கலாம். 60முதலாவதாக, ஓய்வு நாளானது, நாம் அதைப் பற்றி பேசுகையில், ஒரு குறிப்பிட்ட நாளை ஒய்வு நாளாக ஆசரித்தல் அல்ல என்று பார்க்கிறோம். சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆசரிக்க நமக்கு கட்டளையேதுமில்லை. புதிய ஏற்பாட்டில், வாரத் தின் முதலாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிக்க நமக்கு கட்டளையேது மில்லை. எபிரேயர் நிரூபம் 4ம் அதிகாரத்தில், வேதமானது, “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பிறகு அவர் வேறொரு நாளைக் குறித்து சொல்லியிருக்க மாட் டாரே'' என்று கூறுகிறது. அது சரிதான். தேவனுடைய ஜனங் களுக்கு இளைப்பாறுதல் அல்லது ஓய்வு ஆசரித்தல் காலம் இனி வருகிறதாயிருக்கிறது. விசுவாசித்த நாமும் கூட அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்து, யோவான் செய்தது போல, நம்முடைய கிரியைகளிலிருந்து ஓய்ந்திருக்கிறோம். கவனியுங்கள்! ஓ, கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். நான் மிகவும் குதூகலமான உணர்வைப் பெறுகிறேன். 61ஓய்வு நாளைக் குறித்து கவனியுங்கள். அவர் பூமியை ஆறு நாட்களுக்குள் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதன் பிறகு ஒருபோதும் அவர் இனிமேலும் பூமியில் கட்டி உண்டாக்க அவர் திரும்பி வரவேயில்லை. பின்பு அவர் மக்களிடம் ஒரு நினைவு கூருதலாக அதை அளித்தார். இப்பொழுது அதை நீங்கள் ஆசரிக்க முடியாது. ஏனெனில், இங்கே நீங்கள் அதை ஆசரிக்கையில், பூமியின் மறு பக்கத்தில் அப்பொழுது ஞாயிற்றுக்கிழமையாகி விடுகிறது. பாருங்கள்? இஸ்ரவேல் என்ற ஒரு தேசத்திற்குள், ஒரே பிர தேசத்திற்குள், ஒரே மணி வேளையில் இருந்த மக்களுக்கே அது அளிக்கப்பட்டது என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. “விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத் தோற்ற முதல் முடிந்திருந்தும்... (நான் இங்கே எபிரேயர் 4ம் அதிகாரத் திலிருந்து குறிப்பிடுகிறேன்). “...ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்”. “... தாவீதின் சங்கீதத்திலே.... பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்....'' (குறித்துக் கொள்கிறவர்கள் எபிரேயர் 4 குறிக்கவும்) இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகு காலத்திற்குப் பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்“. “யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே” “... இளைப்பாறுகிற (ஓய்வு நாளை ஆசரித்தல்) காலம் இனி வருகிறதாயிருக்கிறது.” 62“இளைப்பாறுதல்' என்ற வார்த்தை . ”சாபத்'' (Sabbath) நமக்கு ஒரு விசித்திரமான வார்த்தையாயிருக்கிறது, அதற்கு, “ஒய்வு'' என்று அர்த்தம்; அது எபிரெய பதமாகும், அதற்கு ”ஓய்வு'' நாள் என்பதாகும். ஒரு சாபத் நாள், வேலைச் செய்யாமல், ஓய்வு கொள்ளுதல். யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே“ தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 63நாம் இளைப்பாறுதலில் பிரவேசித்து விடுகிறோம். எனவே, நாம் மீண்டும் வாரத்தின் முதல் நாளுக்கு திரும்பிச் சென்று, மீண்டும் நமது கிரியைகளை ஆரம்பிக்கிறதில்லை. இயேசுவும் மலைப் பிரசங்கத்தில், ''கொலை செய்யாதிருப்பாயாக என்று பூர்வத் தாருக்கு உரைக்கப்பட்டது, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லு கிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் அவனை ஏற்கனவே கொலை செய்து விட்டான். விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப் பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்''. ஓ, அது கட்டளையா யிருக்கிறது. ''நான் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்கிறார். அது சரியல்லவா? 64எனவே ஓய்வு நாள் போன்றதெல்லாம் நினைவு கூருதலான காரியங்கள் ஆகும். அவைகள் யாவும் அடையாளங்களுக்காக இருந்தவை, உண்மையானது வருவதற்காக காத்துக் கொண்டிருக் கிறது. இயேசுவும் மலைப்பிரசங்கத்தை முடித்துவிட்டு, மத்தேயு 11ம் அதிகாரத்தில் இவ்வாறு கூறுகிறார். “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (அது உண்மைதானே). மத். 11:28-29 ''வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல் லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு ஆத்துமாவில் இளைப்பாறுதல் தருவேன்'' (ஒரு நாள் அல்லது பத்து நாட்கள், அல்லது ஐந்து ஆண்டுகள், 35 ஆண்டுகள் அல்லது 50 ஆண்டுகள், அல்லது 90 ஆண்டுகள் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்திருந்தால், அதினால் நீங்கள் களைப்படைந்து சோர்ந்து போயிருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். பாவ பாரங்கள் யாவையும் நான் உங்களை விட்டு அகற்றி விடுவேன். நான் உங்களில் பிரவேசித்து, உங்களுக்கு பரிபூரண இளைப்பாறுதலையும், திருப்தியையும் தருவேன்'' என்கிறார்). அந்த இளைப்பாறுதலானது அல்லது ஓய்வானது என்ன? இது என்ன என்பதைப் பற்றி நாம் சிறிது தீர்மானிப்போமாக. சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்; “ஏன்? நீங்கள் போய் ஒரு சபையில் சேர்ந்து கொள்ளுங்களேன்'' என்கிறார்கள். அது சரியல்ல. சிலர், ”உன் பெயரை சபையின் புத்தகத்தில் பதிவு செய்து கொள்'' என்கிறார்கள். அதுவும் சரியல்ல. ''நல்லது, ஒரு குறிப்பிட்ட விதமான தண்ணீர் ஞானஸ்நானத்தை எடுத்துக் கொள்'' என்கிறார்கள். அதுவும் சரியல்ல. எனவே நாம் முதலில் இது என்ன என்பதைப் பற்றி தீர்மானிப்போமாக. நாம் இங்கே காத்திருக் கையில் சற்று இதைப் பற்றி இங்கேயே பார்த்து விடுவோமா? யோவான் எங்கே சென்றான் என்பதைப் பற்றி பார்ப்போம். எந்த விதமான நாளுக்குள் அவன் சென்றிருந்தான்? 65பூமியில் இயேசு மரித்த பொழுது, பூமியில் அவரது கிரியைகள் முடிவுற்ற பொழுது, அவர் எங்கே பிரவேசித்தார். நாம் இப்பொழுது ஏசாயா 28ம் அதிகாரம் 8ம் வசனத்திற்குப் போவோம். அது ஏசாயா 28:8 என்று நான் நம்புகிறேன். தீர்க்கதரிசி 28ம் அதிகாரத்தில் கூறியுள்ளவைகளைப் பற்றி படிப்போம். அதில் எழுதியுள்ள காரியம் சம்பவிக்கிறதற்கு 720 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி இவைகளை முன்னுரைத்தான். உண்மையான ஓய்வு நாள் அல்லது இளைப்பாறுதலானது என்ன என்பதைப் பற்றி எத்தனை பேர் அறிய விரும்புவீர்கள்? இங்கே அது உள்ளது. இங்கே தான் தீர்க்கதரிசி அதைப் பற்றி பேசியுள்ளான், அது எங்கே நிறைவேறிற்று என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். கவனியுங்கள், ஏசாயா 28:8. ''.... எல்லாம்... (தீர்க்கதரிசி இந்நாட்களைப் பற்றி தீர்க்க தரிசனமாக கூறுகிறான்) “போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத் தினாலும் (புகைக்கிறவர்களும், மது அருந்துகிறவர்களும், பொய் சொல்லுகிறவர்களும், திருடுகிறவர்களும் கர்த்தருடைய இராப்போஜனத்தை எடுக்கிறார்கள்) நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. ”அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்?“ இந்நாளில் நீங்கள் யாருக்கு அறிவைப் போதிப்பீர்கள்? 66இன்று எத்தனைப் பேர் பில்லி கிரகாமின் பிரசங்கத்தைக் கேட்டீர்கள்? அவர் அருமையானதொரு பிரசங்கத்தைச் செய்தார். எவ்வாறு மக்கள் ஒரு பொய்யை விசுவாசித்து, அப்பொய்யிலேயே தொடர்ந்து நிலைத்திருந்து, தாங்கள் செய்வது சரியானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதைப் பற்றித்தான் அவர் பிரசங்கித்தார். அமெரிக்காவில் சிகரெட்டைப் பற்றி, ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, புகைப்பிடிக்கும் மனிதனின் சிகரெட்'' என்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது; இது பிசாசின் பொய்களில் ஒன்றாக இருக்கிறது, இதை அமெரிக்க மக்கள் நம்பி, அதனால் அவர்கள் மடையராகி, தங்கள் நுரையீரலைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்று பில்லி கிரகாம் பிரசங்கித்தார். அப்படிப்பட்ட மனிதன் ஒரு மடையன். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி என்று ஒன்றும் இருக்கவில்லை. ஒரு சிந்திக்கும் மனிதன் அப்படிப் பட்டவைகளை உபயோகிப்பதில்லை. “ஓயர்டெல்'ஸ் 92க்கு வெளியே ஜீவன் இல்லை என்று ஒரு மதுவைக் குறித்துக் கூறுகிறார்கள். கிறிஸ்துவுக்கு வெளியே ஜீவன் இல்லவே இல்லை, அதுவே உண்மையான ஜீவனாக உள்ளது. ஆடவரும், பெண்டிரும் அதை அருந்தத்தக்கதாக அவர்களை தூண்டுவது எது? ஏனெனில், தேவனால் தாகந்தீர்த்துக் கொள்ளத் தக்கதாக, தேவனைப் பற்றிய தாகத்தை தேவன் அவர்களுக்குள் வைத்திருக்கிறார், ஆனால் அவர்களோ, அத் தாகத்தை உலகத் துக்குரிய காரியங்களினால் தீர்த்துக் கொள்ள முயலுகிறார்கள். எனவே தான் நமக்கு அவ்வகையான காரியங்கள் உள்ளன. அவர்களில் காணப்படும் தேவனுக்காக உள்ள தாகத்தை, அவர்கள் தவறான வழிகளில் தீர்த்துக் கொள்ள முனைவதால், அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள், பிசாசும் அவர்களுக்கு ஜீவனுக்குப் பதிலாக மரணத்தையே கொடுக்கிறான். ....போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது.... 67மதகுருமார்களும் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனையோரும், அதைப் பற்றி பேசி, “மனமகிழ்வுக்காக சிறிதளவு சுத்தமான வேடிக்கை விளையாட்டு நமக்கு இருக்கலாம்” என்று கூறுகிறார்கள். அவ்வாறான ஒரு காரியம் இருக்கலாகாது. “அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும், மூலை மறக்கப் பண்ணப்பட்டவர்களுக்குமே (நாம் இனி குழந்தைகளல்ல) கற்பனையின் மேல் கற்பனையும், கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப் பாறுதல்; (எது? ஓய்வு நாள் ஆசரித்தல்!) (வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்...) இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். எப்பொழுது அது சம்பவித்தது? இது உரைக்கப்பட்டு 720 ஆண்டுகள் கழித்து, பெந்தெகொஸ்தே என்னும் நாளில், மக்கள் மேல் பரியாச உதடுகள் வந்தமைந்து, அவர்கள் யாவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷைகளில் பேசிய பொழுது, பரிசுத்த ஆவியானவர் அவர்களது ஜீவியங்களை ஆட்கொண்ட போது, அவர்கள் லௌகீக கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்தார்கள். பவுல் எபிரெயர் 4ம் அதிகாரத்தில் “தேவன் தனது சிருஷ்டிப்பின் கிரியை முடிந்த பிறகு தனது ஓய்வில் பிரவேசித்தது போல, நாமும் லௌகீக கிரியைகளிலிருந்து விடுபட்டு அவரது ஓய்வுக்குள் பிரவேசித்திருக்கிறோம்'' என்று கூறியுள்ளான். அங்கே தான் உங்களுடைய உண்மையான சரியான ஓய்வு நாளானது உள்ளது. 68எனவே பவுல் கூட அந்த இளைப்பாறுதலின் ஆவிக்குள்ளாக பிரவேசித்தான். அவன் பரிசுத்த ஆவியினாலே கர்த்தருடைய நாளுக்குள்ளாக எடுத்துச் செல்லப்பட்டான். நமக்கு ஏன் யுத்தங்கள் உண்டாயின? நமக்கு ஏன் தொல்லைகள் உண்டாயின? ஜாதிக்கு விரோதமாக ஜாதி ஏன் இருக்கின்றன? ஜீவாதிபதியாக இயேசு வருகிறார், அவர்கள் அவரைக் கொன்றனர். இங்கே சில வாரங்களுக்கு பிறகு, ஏன் இப்பொழுதும் கூட, அங்கே ரெயின்டீர்களும் (ஒரு வகை மான் - மொழி பெயர்ப் பாளர்) சாண்டா கிளாஸ்களும், ஜிங்கிள் பெல்ஸும் மற்றும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கிற ஏனைய காரியங்களும் உள்ளன, அவைகள் அஞ்ஞானப் பண்டிகையாகும். அது கத்தோலிக்க சபையின் கோட்பாடுகளில் ஒன்றாகும். மக்கள் பெரிய விலைகள் கொடுத்து, அன்பளிப்புகளை வாங்கி, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுக்கிறார்கள். அவ்விதமான காரியங்கள் அஞ்ஞான கொள்கையாகும். கிறிஸ்துமஸ் என்பது உண்மையில் ஒரு தொழுகையின் நாளாகும். இப்படியாக, கிறிஸ்துவானவர் டிசம்பர் 25ம் தேதியில் பிறக்கவில்லை. அந்நாளில் அவர் பிறந்திருக்க முடியாது. யூதேயா வுக்கு நீங்கள் எப்பொழுதாவது போனால், அங்கேயுள்ள மலைகள் (டிசம்பர் மாதத்தில்) இந்நாட்டில் உள்ளதை விட மிக மோசமான அளவில், முழுவதும் பனியினால் நிறைந்திருக்கும். இயேசு, இயற்கையானது பூத்துக் குலுங்கும் ஏப்ரல் மாதத்தில் தான் பிறந்தார். 69ஆனால் அது அவர்களுடைய சடங்காச்சாரமாக உள்ளது. நாம் ஏன் இக்காரியங்களைச் செய்கிறோம்? ஏனெனில், நாம் தேவனுடைய கற்பனைகளை விட்டுவிட்டு மனுஷனுடைய பாரம் பரியங்களை பின்பற்றுகிறோம். அப்பொழுது அவ்விதமான ஒரு காரியம் பொருட்டாக இருக்கிறதில்லை. ஆனால் அவர்கள் அப்பண்டிகை நாளை ஒரு வியாபார ரீதியிலான நாளாக ஆக்கிவிட்டார்கள். அவ்விதமானதொரு காரியத்தைச் செய்வது அவர்களுக்கே அவமானகரமானதாகவும், வெட்கக் கேடான தாகவும் உள்ளது. அது ஒரு அஞ்ஞானப் பண்டிகை! சாண்டா கிளாஸுக்கும் இயேசுவுக்கும் என்ன சம்மந்தம்? ஈஸ்டர் முயலுக்கும், அல்லது ஒருவிதமான மை அல்லது ஏதோ ஒன்று பூசப்பட்ட கோழிக்கும், அல்லது ஒரு சிறிய வெள்ளை முயலுக்கும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன சம்மந்தம்? எவ்வாறு வியாபார உலகமானது உள்ளது என்பதை பார்த்தீர்களா? எனவேதான், அவர்கள் இந்த பழைய ராக் அண்டு ரோல் புத்தகங்களையும், அசிங்கமான ஆபாசமான படங்களையும் விற் கிறார்கள். ஏனெனில் மக்களின் சுபாவமானது அவ்விதமான மூடத்தனமான காரியங்களுக்காக இச்சிக்கிறது. அவர்களுடைய உள்ளங்களில் ஏதோ தவறு இருக்கிறது, அவர்கள் ஒரு பொழுதும் தேவனோடு அந்த இளைப்பாறுதலில் பிரவேசித்து இவை களிலிருந்து ஓய்ந்திருக்கவில்லை. அவர்கள் அதற்குள் பிரவேசித்து, பரிசுத்த ஆவியைப் பெறும்போது, உலகத்தோடுள்ள சம்மந்தம் முடிவடைந்து, உலகிற்குரிய காரியங்களிலிருந்து பந்தமற்றுப் போகிறார்கள். 70தேவன் அவனை மாற்றினார் (transmitted). பவுலைப் போல அவன் மூன்றாம் வானத் திற்குள் எடுக்கப்பட்டு அங்கேயுள்ள வைகளை அவன் கண்டான் என்று நான் நினைக்கவில்லை. விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியானவர் சில வாரங்களுக்கு முன்பாக நாம் காணும்படியாக செய்ததை... அதாவது, நான் மரணத்தைப் பற்றி பயங்கொண்டிருந்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கே எடுத்துக் கொண்டு போய் அது என்ன என்பதை காண்பித்தார். அதைக் குறித்த சாட்சியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பின்பு நான் திரும்பி வந்தபோது, ''மரணமே உன் கூர் எங்கே?'' திரைக்கப்பால் என்ன இருக்கிறது என்பதைக் காண எடுத்துக் கொள்ளப்பட்டேன். திரைக்கப்பால் நாம் அங்கே வெறும் ஆவிகளாகவோ, அல்லது பூதங்களாகவோ இருக்கிற தில்லை; திரைக்கப்பால் ஒருபோதும் மரிக்காத, ஒருபோதும் வியாதிப்படாத இளமையான ஆண்களும், பெண்களுமாகவே இருப்போம் என்பதை கண்டு உங்களுக்குச் சொல்ல வேண்டி தேவன் என்னை திரும்பி வரப் பண்ணினார். அவ்விடத்திற்குள் நீங்கள் இழுத்துக் கொள்ளப்படுவீர்கள். மரணம் இனிமேல் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. 71யோவான் பத்மு என்னும் தீவிலிருந்து, ஆவியினால் கர்த் தருடைய நாளுக்குள் எடுத்துச் செல்லப்பட்டான். இது மனிதனின் நாளாகும். இந்நாளில் மனிதன் சண்டையிடுகிறான், ஆனால் கர்த்தருடைய நாளானது வரப்போகிறது. அப்பொழுது, இந்த இராஜ்யங்களெல்லாம், கர்த்தருடையதும், அவருடைய கிறிஸ்துவுடையதுமான இராஜ்யமாகிவிடும். அப்பொழுது அந்த மகத்தான ஆயிரமாண்டு அரசாட்சி உண்டாயிருக்கும். கர்த்தருடைய நாள், அவருடைய வருகையின் நாள், அவருடைய நியாயத் தீர்ப்பு, அது கர்த்தருடைய நாளாயிருக்கும். இது மனிதனுடைய நாளாயிருக்கிறது, எனவே தான் அவர்கள் உங்களை கடுமையாகக் கண்டனம் செய்து, தாங்கள் விரும்புகிறபடியெல்லாம் உங்களுக்குச் செய்து கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஒருவேளையானது வரப்போகிறது, அப்பொழுது .... இப்பொழுது அவர்கள் உங்களை உருளும் பரிசுத்தர் என்றும், மதவெறி பிடித்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் ஒரு வேளையானது வருகிறது. அப்பொழுது அவர்கள் உங்களை அப்படியெல்லாம் கூப்பிடமாட்டார்கள். அவர்கள் அலறி, புலம்பி, உங்கள் பாதங்களில் விழுவார்கள். வேதத்தில் மல்கியா 4ம் அதிகாரத்தில், நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், துன்மார்க்கர் எரிக்கப்பட்ட பிறகு உண்டாகும் அவர்களுடைய சாம்பலின் மேல் நடப்பீர்கள் என்றும், அந்த நாள் அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்றும் கூறப் பட்டுள்ளது. “நீதிமான்கள் வெளியே புறப்பட்டுப் போய் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள்'' என்று வேதம் சரியாகவே கூறுகிறது. அது அவ்விதமாகத்தான் இருக்கிறது. திரும்பி அவர்கள் முளைத்தெழும்பாதபடி, அவர்களுக்கு அந்நாள் வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும். அவர்களுக்கு அவ்வாறு நிச்சயமாக சம்பவிக்கும். இப்பொழுது, இது மனிதனின் நாளாயுள்ளது (மனிதனின் செயல்கள், மனிதனின் கிரியைகள், மனிதனின் சபை, மனிதனின் யோசனைகள்). ஆனால் கர்த்தருடைய நாளானது வருகிறது. 72யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள் இருந்தான். கர்த்தருடைய நாளில் அவன் ஆவிக்குள்ளாகியிருந்த போது, முதலாவதாக அவன் ஒரு சப்தத்தைக் கேட்டான். இப்பொழுது 10ம் வசனத்தை பார்ப்போம். “....கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்.... எக்காள சத்தம் போல பெரிதான ஒரு சத்தத்தை அவன் கேட்டான்...'' இப்பொழுது நாம் ஒரு உவமையையும் விட்டு விட வேண்டாம். நாளை அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கு மானால், எடுத்துக் கொள்ளலாம், பாருங்கள். நான் அதிகம் தாமதித்து விடாதபடிக்கு, யாராகிலும் ஒருவர் கடிகாரத்தைக் கவனித்துக் கொண்டிருங்கள். நல்லது, இப்பொழுது, “கர்த்தருடைய நாளில் ஆவிக்குள் ளானேன்'' என்பதை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். முதலாவதாக நீங்கள் செய்ய வேண்டிய காரியமானது என்ன? ஆவிக்குள்ளாகுங்கள்! இவ்வெளிப்படுத்து தல்களெல்லாம் உங்களுக்கு எவ்வாறு வரப்போகின்றது? ஆவிக்குள்ளாகுங்கள்! பரிசுத்த ஆவியை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? ஆவிக்குள்ளாகுங்கள், ஆவிக்குள்ளாகுங் கள். நீங்கள் பாவியாயிருந்த போது, நீங்கள் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தால் அங்கு அந்தவிதமான ஆவிக்குள்ளா னீர்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் கைகளைத் தட்ட ஆரம்பித்து, பாதங்களை தரையில் தட்டி, முழங்காலுக்குக் கீழே கைகளால் தொட்டு, உங்கள் தொப்பியை தரையில் எறிந்து, சுற்றி சுற்றி வந்து, அவ்வாறு மூடத்தனமாக நடந்து கொண்டீர்கள். அவ்விதமான ஆவிக்குள்ளாக இருந்தீர்கள். நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிராத ஒருவன் நடன நிகழ்ச்சிக்குப் போய், “நல்லது, உங்கள் யாவருக்கும் அருமையான நல்ல தருணம் உண்டா யிருக்கிறது என நான் கருதுகிறேன்'' எனக் கூறுவதை உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடிகிறதா? 73அவர்கள் அவனைப் பார்த்து, 'நீ ஒரு வால்ஃப்ளவர், இங்கிருந்து வெளியேறு'' என்பார்கள். (வால்ஃப்ளவர் (Wall Flower) என்றால் 'ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு நபர், வெட்கத்தினால் அதில் கலந்து கொள்ள தயங்கி நிற்பது, அல்லது நடனமான ஒரு துணை இல்லாதிருப்பதினால் ஒதுங்கியிருந்தால், அவரை 'வால்ஃப்ளவர்' என்று மேலை நாடுகளில் அழைப்பர்மொழி பெயர்ப்பாளர்). பந்து விளையாட்டுக்குப் போய் சும்மா உட்கார்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்து, அவ்விளையாட்டில் விளையாடுபவர் ஒரு ஓட்டத்தை எடுக்கையில், ''ஓ, அது ஒரு மிகவும் நல்ல ஒன்றுதான் எனக் கருதுகிறேன்'' என்று கூறினால், அந்த நபர் ஒரு பேஸ்பால் விளையாட்டில் ஆர்வம் கொண்டவரல்ல. அது பேஸ்பால் விளையாட்டிற்குரிய ஆவியில் இறங்குதல் அல்ல. யாரோ ஒருவர் பேஸ்பால் களத்தில் மட்டையாளர் எல்லா பேஸ்களையும் தொட்டு ஒரு ஓட்டத்தை எடுக்கும்படி பத்திரமான மட்டையடியைக் கொடுக்கையில், “வ்யூ, என்னே! வெல்க!'' என்று எழும்பி கத்தினால், வேறு ஒருவருடைய தலையில் இருக்கும் தொப்பியை தட்டிக் கீழே தள்ளினால், ஒருவரும் ஒரு வார்த்தையும் அதைப் பற்றி சொல்ல மாட்டார்கள். பின்பு, சபையில், நீங்கள் ஆவிக்குள்ளாகும் போது, எழும்பி நின்று, “மகிமை, அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சப்தமிட்டால், அப்பொழுது உட்கார்ந்திருக்கிற யாரோ ஒருவர், உங்களைப் பார்த்து, ”உருளும் பரிசுத்தர்'' என்று சொல்லுகிறார். 74கர்த்தர் நம் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கப் போகிறேன். நாம் இவ்வாறு செய்கிறபடியினால், உருளும் பரிசுத்தர் எனப்படுவோமானால், அவ்வாறு நம்மை கேலி செய்கிறவர்கள் உருளும் அசுத்தராக இருக்கிறார்கள். உருளும் அசுத்தராக நான் இருப்பதை விட உருளும் பரிசுத்தராக இருப்பதையே நான் விரும்புகிறேன். (நீங்களும் அவ்வாறு இருக்க விரும்பவில்லையா?) நிச்சயமாக அவர்கள் உருளும் அசுத்தர்தான். அவன் ஆவிக்குள்ளாய் இருந்தான். அவன் ஆவிக்குள்ளான போது, காரியங்கள் சம்பவிக்க ஆரம்பித்தது. பிறகு, அவன் அங்கு அடைந்த போது, ஒரு எக்காள சப்தத்தைக் கேட்டான். எப்பொழுதும் எக்காள சப்தமானது, ஏதோ ஒன்று நெருங்கி வருவதை அறிவிப்புச் செய்கிறதாயிருக்கிறது. ஒரு ராஜா வருவதற்கு முன்பாக, அவன் வருவது சமீபித்து விட்டால், அப்பொழுது எக்காளம் ஊதி அதை அறிவிப்பார். இயேசு நெருங்கி வருகையில் அவர் எக்காள சப்தமிடுவார். அது சரிதானே, யோசேப்பு புறப் பட்டுச் சென்ற போது, அவர்கள் அதற்கு முன்பாக எக்காள சப்தமிட்டார்கள். இப்பொழுது ஏதோ ஒன்று முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. யோவான் ஆவிக்குள்ளான போது, ஒரு எக்காளம் சப்தமிடுவதைக் கேட்டான். அவன் ஆவிக்குள்ளான பிறகு, எக்காள சப்தத்தை கேட்டபோது தனக்குப் பின்னாக கேட்டிருந்த சப்தம் என்ன என்று பார்க்கும்படி யோவான் திரும்பிப் பார்த்தான். 75ஒருவேளை அவன் அந்த தீவைச் சுற்றி ஓடி, நடனமாடி, குதித்திருப்பான். அவன் ஆவிக்குள்ளாக இருந்தபடியினால் அவனுக்கு ஒரு நல்லவேளை உண்டாயிருந்தது. அவ்வாறு கூறுவது அவபக்தியான காரியம் போல் தோன்றக்கூடும். ஆனால் நான் அவ்வாறு உள்ள அர்த்தத்தில் கூறவில்லை. அவ்வாறு அவன் செய் திருக்கக் கூடும். ஆம், அவன் அவ்வாறு செய்து கொண்டிருந் திருக்கக் கூடும். அவனுக்கு ஆவிக்குள்ளாக ஒரு அருமையான வேளை உண்டாயிருந்ததென்றும், அதினால் அவன் தேவனைத் துதித்துக் கொண்டிருந்திருப்பான் என்றும் நான் நம்புகிறேன். ஏனெனில், ஆதியில் அவர்கள் மேல் ஆவியானது வந்திறங்கிய போது, அதே விதமாகத் தான் சம்பவித்தது. பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தபோது, குடித்தவர்களைப் போல், ஆணும் பெண்ணும் தள்ளாடினர். குடித்தவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டு பேசினர். அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்து கொண் டிருந்தனர். அவர்களைப் பார்த்து, ஜனங்கள், “இவர்கள் மது பானத் தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். ஆதியில் அவர்கள் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். எனவே ஆவி யானவர் மீண்டும் வருகையில், அவனும் (யோவானும்)கூட அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கக் கூடும். இது புதியது ஒன்றுமில்லை, இது பழங்காலத்து மார்க்கமாகும். ஆம். 76“கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளாதல்''. இப்பொழுது நாம் அதைக் கேட்கிறோம். இப்பொழுது என்ன? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் இப்பொழுது அத்தீவி லிருந்து ஆவிக்குள்ளாக மாற்றப்பட்டு கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான். கர்த்தருடைய நாளுக்குள் அவன் சென்றவுடன், அவன் ஒரு எக்காள சப்தத்தை கேட்டான். அது என்னவாக இருக்கிறது? யாரோ நெருங்கி வந்து கொண்டிருக் கிறார்கள். மகத்தான ஒருவர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். எக்காளம் முழங்கினால், யாரோ வந்து கொண்டிருக்கிறார் என்பதாகும். அவன் பார்த்தான், அல்லேலூயா! எக்காள சப்தம். “அது: நான் அல்பாவும், ஓமெகாவும், முந்தினவரும், பிந்தினவரு மாயிருக்கிறேன்.... (இரண்டாவது நபரைப் பற்றியோ, அல்லது மூன்றாவது நபரைப் பற்றியோ உள்ள அறிவிப்பல்ல இது, ஒரே நபரைப் பற்றியதான அறிவிப்பு தான் இது)... நான் அல்பாவும் ஒமெகாவு மாயிருக்கிறேன் (''நான் எதையாகிலும் உங்களுக்கு காண்பிக்கும் முன்னர், நான் யார் என்பதை நீங்கள் அறியும்படி விரும்புகிறேன்'') வெளிப்பாடுகள் எல்லாவற்றிலும் மகத்தானது தேவத் துவத்தைப் பற்றியதாகும். அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினுடைய உன்னத தேவத்துவத்தைப் பற்றிய தேயாகும். அதை நீங்கள் விசுவாசிக்காமல் முதலாவதான தளத்திற்குச் செல்ல முடியாது. அதைத்தான் பேதுருவும், “மனந்திரும்பி, தேவத்துவத் தைப் பற்றி பாருங்கள்'' என்றான். ''பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள் ளுங்கள், அப்பொழுது ஆவிக்குள்ளாகப் போவதற்கு நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்கள்'. கிறிஸ்துவின் தேவத்துவத்தைப் பற்றி நீங்கள் முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும். ”நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்.'' ''A'' முதல் 'Z'' வரை யாவும் நானே. என்னைத் தவிர, வேறு தேவன் இல்லை. நான் ஆதியில் இருக்கிறேன். முடிவிலும் நானே இருக்கிறேன். இருக் கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமை யுள்ளவர்.'' அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அதைத்தான் அந்த எக்காளம் கூறியது. 77கவனமாக இரு, யோவானே! நீ ஆவிக்குள்ளாகி விட்டாய், உனக்கு ஒன்று வெளிப்படுத்தப்படப் போகிறது. அது என்ன? எக்காளம் முதலாவதாக கூறியது என்னவெனில், ''நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்'' என்பதே. எல்லா வெளிப்படுத்து தல்களிலும் முதன்மையானது இது. (ஓ! பாவியே, நேரமானது கடந்து செல்லுமுன்னர், தலைவணங்கி மனந்திரும்பு) “நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன்.'' அவர் யார் என்பதை முதலாவதாக யோவான் அறிந்து கொள்ளும்படி செய்தார். (யார் இப்பொழுது விரைந்து வந்து கொண்டிருக்கிறார்? அது இயேசு இராஜாவா? தேவனாகிய இராஜாவா? பரிசுத்த ஆவியாகிய இராஜாவா?) ”நான் எல்லாமுமாயிருக்கிறேன். “A'' முதல் 'Z'' முடிய யாவும் நானே. நான் ஆதியும் அந்தமுமாயிருக் கிறேன். நான் அழியாமையுள்ளவரும் நித்தியமானவருமானவர்!'' சற்று நேரத்திற்குப் பின்பு நாம் அவரை, அவரது ஏழு விதமான தோற்றங்களில் அவர் என்னவாயிருக்கிறார் என்பதை கவனிப்போம். “நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறேன். நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். முந்தையது என்ற ஒன்று ஏற்படும் முன்னரே நான் இருக்கிறேன், கடைசி என்ற ஒன்று இல்லை என்பதற்குப் பிறகும் இருக்கிறவர் நானே. அதாவது ”முந்தின வரும், பிந்தினவருமாயிருக்கிறேன்''. “...நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங் களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.'' 78சரி, வெளிப்படுத்துதல்களிலெல்லாம், முதன்மையானது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உன்னதமான தேவத்துவத்தைப் பற்றியதேயாகும். அந்த சப்தத்தை நீங்கள் கேட்கையில் அவர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சீனாய் மலையின் மேல் பேசிய அதே சப்தம்தான், மறுரூப மலையிலும் பேசியது. அவரேதான், “மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப் பானவர்'' அடுத்த வசனத்தை கவனியுங்கள். “நான் திரும்பினேன்” (12ம் வசனம்) ஒரு நிமிடம் நாம் இந்த சபைகளை விட்டு விட்டு, கடந்து செல்லப் போகிறோம், ஏனெனில் இந்த வாரம் முழுவதும் இந்த சபைகளைப் பற்றித்தான் படிக்கப் போகிறோம். அவர் கூறினார், “நான் உனக்கு காண்பிக்கப் போகிற இச் செய்தியை நீ அனுப்பும்படி உனக்குச் சொல்லப் போகிறேன்.'' அவர் யார்? ”நானே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நானே எல்லாரிலும் பெரியவர். நானே சர்வவல்லமையுள்ளவர். ஏழு சபைகளுக்குக் கொடுக்கும்படியான ஒரு செய்தியை நான் கொடுக்க வந்துள்ளேன். நீ அதை எழுதி ஆயத்தம் செய்யும்படி விரும்புகிறேன். அவைகளை ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்ப வேண்டும்''. அக்காலத்தில் அப்பிரதேசத்தில் இருந்த அந்த ஏழு சபைகளின் தன்மையானது வரவிருக்கும் ஏழு சபைக்காலத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. 79''அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத்திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு மெழுகுவர்த்தி விளக்குத்தண்டுகள் கண்டேன்“ “ஏழு மெழுகுவர்த்தி விளக்குத்தண்டுகள்'' (Seven Candle sticks) (இவ்வாறு ஆங்கில வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் ஏழு குத்து விளக்குகள் என்று எழுதப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்). உங்களிடம் ஒருவேளை ஜேம்ஸ் மன்னனின் பதிப்போ, அல்லது ஸ்கோஃபீல்ட் வேதாகமமோ அல்லது தாம்ப்ஸன்ஸ் செயின் ரெபரன்ஸ் வேதாகமமோ இருக்கக்கூடும். அங்கே அவ்வாறு எழுதப்பட்டுள்ளது தவறானதாகும். மூல வேதத்தில், மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகள் என்று கூறப்பட வேயில்லை. அது ”விளக்குத் தண்டுகள்“ என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மூல மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ள இதுவே சரியானது என நான் விசுவாசிக்கிறேன். ஏழு பொன் குத்து விளக்குகள் என்றால் ஏழு சபைகளாகும். 20ம் வசனத்தில், ''நீ கண்ட ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளும் ஏழு சபைகளாம்'' என்று கூறுகிறார். எனவே, அது (ஆங்கில வேதாகமத்தில் உள்ளது போல்- மொழி பெயர்ப்பாளர்) ஒரு மெழுகுவர்த்தி என்று இருக்குமானால், ஒரு மெழுகுவர்த்தியானது விரைவாக எரிந்து அழிந்து விடும். ஆனால் அது மெழுகு வர்த்தியல்லவேயல்ல. அது ஒரு விளக்குத் தண்டு. விளக்குத் தண்டு என்று தான் அது கூறுகிறது. ''திரும்பின போது... அந்த ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே... மனுஷகுமாரனுக் கொப்பானவரையுங்கண்டேன்.'' 80இப்பொழுது பாருங்கள். ஒரு மெழுகுவர்த்தியானது சில மணிநேரங்களுக்குள் விரைவாக எரிந்து முற்றிலும் ஒன்று மில்லாமற் போய்விடும். ஆனால் ஒரு விளக்குத் தண்டோ , ஒரு விளக்குத் தண்டு இவ்வாறு உள்ளது... ஒரு வேதவாக்கியத்தை நாம் இங்கே எடுத்துக்கொள்வோம். சகரியா 4ம் அதிகாரம் 1ம் வசனத்தைப் பார்ப்போம். சகரியாவின் புத்தகத்தில் நமக்கு தேவையானதை நாம் எடுத்துக்கொள்ள முடியும். சகரியா 4:1 நமக்கு தேவைப்படுவதை இங்கிருந்து நாம் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒன்று சேர்க்க முடியும் என்று நம்புகிறேன். சகரியாவை செப்பனியாவில் என்னால் காண முடியாது. அல்லவா? சரி, சரி. எனது பழைய வேதாகமம் கிழிந்து போயுள்ளது. சகரியா 4:1ல் மிகவும் அழகானதொரு காட்சியைப் பார்க்கிறோம். அந்த தூதன்... கிறிஸ்துவுக்கு 519 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தீர்க்கதரிசி இருந்தான். “என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து: நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவது போல் என்னை எழுப்பி: (இப்பொழுது இந்த தீர்க்கதரிசி ஒரு தரிசனம் காண்கிறான்). நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி விளக்குத் தண்டை காண்கிறேன். (இப்பொழுது இதே வார்த்தைதான் விளக்குத் தண்டு என்று மூல வேதத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) அதின் உச்சியில் அதின் கிண்ணமும் அதின்மேல் அதின் ஏழு அகல்களும், (அதுவே விளக்காயிருக்கிறது) அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப் போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. (அதே சபைக்காலங்கள் வந்து கொண் டிருக்கிறதை இப்பொழுது பாருங்கள்). அதின் அருகில் கிண்ணத்திற்கு வலது புறமாக ஒன்றும், அதற்கு இடது புறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். (வேதாகம நாட்களில் என்ன விதமான எண்ணெயை அவர்கள் எரித்தார்கள்? யாருக்காவது தெரியுமா? என்ன எண் ணெய்? ஒலிவ எண்ணெயை உபயோகித்தார்கள்). இரண்டு ஒலிவ மரங்கள்.... (அது என்ன? புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் அதின் இருபுறமும் நின்று கொண்டிருக் கின்றன). நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்ன தென்று உனக்குத் தெரியாதா என்றார். ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிர மத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனை களின் கர்த்தர் சொல்லுகிறார்“. (அவர் எருசலேமை மீட்டுத்தருவார்). சகரியா 4:1-6. 81இப்பொழுது இந்த மெழுகுவர்த்தி தண்டு என்பது என்ன? அது விளக்குத் தண்டு ஆகும். இங்கே இது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அவன் பார்க்கும்படி திரும்பிய போது, வரவிருக்கும் ஏழு காலங்களை அர்த்தப்படுத்தும் அந்த ஏழு விளக்குத் தண்டுகளின் நடுவில், மனுஷக்குமாரனுக் கொப்பானவரைக் கண்டான். ஒவ்வொரு விளக்குத் தண்டும் பிரதான பெரிய எண்ணெய் ஊற்றிவைக்கும் கலசத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணெயில், வினோதமான அமைப்புக் கொண்ட விளக்கிலிருந்து தொங்கும் திரியானது மூழ்கி இருக்கும். அவர்கள் எண்ணெயை பிரதான குழாயின் வழியாக ஊற்றுவார்கள், பிரதான தண்டிலிருந்து பிரிந்து செல்லும் கிளை தண்டுகளின் வழியாக எண்ணெயானது பரவிச் செல்லும். திரியோடு கூடிய விளக்கானது எண்ணெயில் மூழ்கிய நிலையில் இருந்து கொண்டு, இரவும் பகலும் எரிந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அதை எரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அது அணைந்தே போகாது. பிரதான குழாயில் அவர்கள் எப்பொழுதும் எண்ணெயை ஊற்றிக் கொண்டேயிருப்பார்கள் இந்த விளக்குத் தண்டுகள் இவ்வாறு ஒவ்வொன்றும் வெளியே வந்து, அவைகள் மேலே விளக்கைக் கொண்டதாக இருக்கும். விளக்கில் உள்ள திரியானது எண்ணெயில் மூழ்கின நிலையில் இருக்கும். இங்கிருந்து அது தனது ஜீவனைப் பெற்றுக் கொள்கிறது. எனவே, இதிலிருந்து, ஒரு மெழுகுவர்த்திக்கும் இதற்கும் உள்ள பெரிய வேறுபாட்டைப் பார்க்கிறோம். எவ்வளவு வித்தியாசமாக இது உள்ளது! அது ஒரு விளக்குத் தண்டுதான், அது எண்ணெயை இழுத்துக் கொண் டிருக்கிறது. 82இப்பொழுது இந்த விளக்குத் தண்டுகளிலிருந்த நெருப் பானது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் எப்படியிருந்ததென்றால்: அவர்கள் ஒரு விளக்கைக் கொளுத்துகையில், அடுத்ததைக் கொளுத்த தங்கள் கையிலிருந்த நெருப்பைக் கொண்டு கொளுத்த முடியாது. ஒரு விளக்கைக் கொளுத்தி, அதிலிருந்த நெருப்பைத் கொண்டுதான் அடுத்த விளக்கை அவர்கள் கொளுத்த வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்துள்ள விளக்குகளை முதலில் கொளுத்தப் பட்ட விளக்கின் அதே முதல் நெருப்பைக்கொண்டு தான் கொளுத்த வேண்டும். நான் உங்களைப் புரிய வைத்துள்ளேன் என்று நம்புகிறேன். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. பரிசுத்த ஆவியாகிய அதே அக்கினி, காலங்கள் தோறும் ஒவ்வொரு சபையையும் எரிய வைத்தது. 83யோவான் 15:5ல் இயேசு, “நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்'' என்று கூறவில்லையா? அவரே பிரதான திராட்சைச் செடி, நாம் கொடிகளாயிருக்கிறோம். கொடிகள் தானாக கனி கொடுப்பதில்லை. (ஒலிநாடாவில் காலி இடம் -ஆசி). ஆரஞ்சைப் போல உள்ள எலுமிச்சை வகையைச் சேர்ந்த ஒரு செடியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஆரஞ்சு செடியில் சிறிது பிளந்து, அதில் ஒரு கிரேப் ஃப்ரூட்செடியை (Grapefruit Tree) ஒட்டுச் சேருங்கள், அந்த செடியும் வளரும். எலுமிச்சை கிளையை வெட்டி இந்த ஆரஞ்சுச் செடியோடு ஒட்டுச் சேருங்கள். அதுவும் வளரும். அல்லது ஒரு மாதுளைக் கிளையை எடுத்து அதனோடு ஒட்டுங்கள். அல்லது எந்தவொரு எலுமிச்சை வகை மரக்கிளையையோ அல்லது டாஞ்ஜெரீன் என்னப்படும் ஒரு வகை ஆரஞ்சு கிளையையோ, இந்த மரத்தோடு ஒட்டுப் போடுங்கள். இவைகள் யாவும் அந்த ஆரஞ்சு மரத்தின் ஜீவனைக் கொண்டு செழித்து வளரும். ஆனால் அது ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்காது. அது கிரேப் ஃப்ரூட் பழங்களைக் கொடுக்கும். ஒரு வகை ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்கும், எலுமிச்சையானது தனது கனியைக் கொடுக்கும். ஆனால் இவைகள் யாவும் உண்மையான செடியின் ஜீவனைக் கொண்டே வாழ்கின்றன. ஆனால் அந்த உண்மையான செடியானது தன்னுடைய சொந்தக்கிளை இன்னொன்றை படரவிடுமானால், அதிலுள்ள அதே ஜீவனைக் கொண்டதாகவே அது இருக்கும். அது ஆரஞ்சுப் பழத்தையே கொடுக்கும். ஏனெனில், ஆதியில், அதனுடைய வேரில் அது ஆரஞ்சு மரத்தின் ஜீவனாக உள்ளது. ஆனால் ஒட்டுப் போடப்படும் ஏனைய மரக்கிளைகள், ஆரஞ்சு மரத்தின் ஜீவனைக் கொண்டு ஜீவித்துக்கொண்டு இருக்க முடியும். ஆனால் அது தன்மையில் சிட்ரஸ் மரத்தின் தன்மையையே கொண்டிருக்கும். ஆனால் மூல மரமாகிய ஆரஞ்சு மரத்தின் கனியை சிட்ரஸ் மரத்தினால் கொடுக்க முடியாது. ஏனெனில் மூல மரத்தின் தன்மையை அது கொண்டிருக்கவில்லை. 84அவ்விதமாகத்தான் சபையும் இருக்கிறது. அவர்கள் மெய்யான திராட்சைச் செடியோடு பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றும் இன்ன பிறவற்றை ஒட்டுச் சேர்த்து விட் டார்கள். பாப்டிஸ்டு, பாப்டிஸ்டு கனியையும், பிரஸ்பிடேரியன் சபை, பிரஸ்பிடேரியன் கனியையும், மெத்தோடிஸ்டு சபை யானது, மெத்தோடிஸ்ட் கனியையும் கொடுத்துக் கொண்டிருக் கிறது. ஆனால் எப்பொழுதாகிலும் அந்த மூலச் செடியானது தன்னுடைய இன்னொரு கிளையை படரவிடுமானால், அது அதே மரமாகத்தான் இருக்கும், அது பெந்தெகொஸ்தே நாளில் கொண்டு வந்த அதே கொடியை தான் மீண்டும் கொண்டு வரும். அதுவே மெய்யான மூல திராட்சைச் செடியாயிருக்கிறது. அது அந்நிய பாஷைகளில் பேசும், அதனிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையும் அடையாளமும் உண்டாயிருக்கும். ஏன்? ஏனெனில், அது தன்னுடைய சுபாவ சக்தியிலிருந்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. வாஸ்தவமாக அந்தக் கிளை மூலச் செடியோடு ஒட்டப்படவில்லை. அது மூலச் செடியிலிருந்தே பிறந்ததாக இருக் கிறது. ஓ என்னே! அப்பொழுது இந்த ஒன்றைப் பற்றி சிந்திக்க வில்லை . மற்ற கிளைகளோ ஒட்டப்பட்டவைகள் என்பதைப் பாருங்கள். இந்த மரத்தோடு இவைகள் ஒட்டப்பட்டபோது, அவைகள் தங்கள் தங்கள் கனிகளையே கொடுத்தன. அவைகள் மெய்யான மூலச் செடியின் தன்மையை எடுத்துக்கொள்ள இயலாது. மெய்யானதை அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் அந்த மரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஜீவனிலிருந்து பிறந்தவைகளாக அவைகள் இருப்பின், அப்பொழுது அந்தக் கனியைத்தான் அவைகளால் கொடுக்க முடியும். அது மூல மரத்தின் தண்டிலிருந்து புறப்பட்டு வரும் ஜீவனாகும். 85இந்த ஏழு விளக்குத் தண்டுகளும் ஒரு பெரிய கலசத்தோடு பொருந்துகிறதாயிருக்கும்.இந்த ஒரு பெரிய கலசத்திலிருந்துதான் இந்த ஏழு விளக்குத்தண்டுகளும் புறப்பட்டு வரும். அவ்வேழு விளக்குகளும் ஒவ்வொன்றும் பிரதான கலசத்திலிருந்து தான் தங்களுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும். பிரதான எண்ணெய் கலசத்தில் ஒவ்வொரு விளக்கின் திரியும் எண்ணெயில் மூழ்கி இருப்பதினால், அவை ஒவ்வொன்றும் எரிகின்றன. அவ்வேழு நட்சத்திரங்களில் ஒவ்வொன்றும் பரிசுத்த ஆவியாகிய அக்கினியோடு உள்ளதாக உள்ள இக்காட்சி எவ்வளவு அழகாயிருக்கிறது! விசுவாசத்தினால் அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டு எரிந்து கொண்டிருக்கிறான். அவனுடைய ஜீவியமானது ஒரு மெழுகு வர்த்தியாக இருக்கிறது... இல்லை, மெழுகுவர்த்தி அல்ல, கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவிக்குள் மூழ்கிக்கிடக்கிற விளக்குத் திரியாக இருக்கிறது. அத்திரியின் மூலமாக தேவனுடைய ஜீவனாகிய எண்ணையை உறிஞ்சி, அதின் மூலம் தன்னுடைய சபைக்கு ஒளியைக் கொடுக்கத்தக்கதாக அவன் இருக்கிறான். ஓ! ஒரு உண்மையான விசுவாசியின் சித்திரமானது எவ்வாறு உள்ளது! என்னவிதமான ஒளியை அவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்? முதல் விளக்கில் இருக்கும் அதே ஒளியைத் தான் கொடுக்கிறான். முதல் சபைக் காலமானது ஆரம்பித்தபோது, அது எபேசு சபைக்காலமாயிருந்தது. ஏழு நட்சத்திரங்களில் ஒன்றானவனான பவுலே அச்சபைக்குரிய தூதனாயிருந்தான். இவ்வேழு நட்சத்திரங் களும் ஏழு தூதர்கள் என்று அர்த்தமாகும். அவர்கள் ஏழு “செய்தியாளர்களாவர்.'' இவ்வாரத்தில் நான் வேதவாக்கியங் களைக் கொண்டும், வரலாற்றைக் கொண்டும், குறிப்பிட்ட ஒவ்வொரு மனிதர்தான் அந்த ஒவ்வொரு சபைக் காலத்திற்கும் உரிய உண்மையான தூதன் என்றும், அவர்கள் ஒவ்வொருவரிலும் ஒரே ஒளி தான் இருந்தது என்பதையும் நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது அவ்வாறு தான் உள்ளது. இந்த சபை காலங்களில் மத்தியில் தான் அந்த மகத்தானவர் வரவேண்டும். 86கவனியுங்கள், ஒவ்வொரு விளக்கும் இந்த பிரதான எண் ணெய் குழாயிலிருந்து தான் தங்களுக்குத் தேவையான எண் ணெயை, அதாவது ஒளியை, கிறிஸ்துவில் மூழ்கி இருப்பதன் மூலம் எடுத்துக் கொள்கின்றன. நீங்கள் மரித்தவர்களாயிருக் கிறீர்கள். உங்கள் ஜீவனானது கிறிஸ்துவில் மறைந்திருக்கிறது, அல்லது தேவனுக்குள் கிறிஸ்துவின் மூலமாக மறைந்திருந்து பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து விலகி யிருக்க உங்களுக்கு எந்தவிதமான வழியும் இல்லை. எவ்வாறு நீங்கள் அதைச் செய்ய முடியும்? யாரும் உங்களை வழி விலகச் செய்ய எதுவும் உங்களுக்குள் ஊடுருவ முடியாது. உங்கள் ஜீவனின் இந்த நுனி வரையும் பரிசுத்த ஆவியினால் எரிந்து கொண்டிருக்கிறது, ஒளி கொடுத்து எரிந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஜீவனின் மற்றைய நுனியானது எங்கே மூழ்கிக் கிடக்கிறது? கிறிஸ்துவில் மூழ்கிக் கிடக்கிறது. நீங்கள் அவருக்குள் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவர் பிசாசு உங்களைத் தொட முடியாதபடி அவனுக்கு வழியை அடைத்துக் கொண்டிருக்கிறார். ஆமென்! அவன் உங்களுக்கெதிராக சப்தமெழுப்பக் கூடும், மரணம் கூட உங்களைத் தொட முடியாது. ''மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'. 87இந்த வசனத்தின் கடைசியை வாசிப்போம். திரும்பினபோது ஏழு பொன் மெழுகுவர்த்தி விளக்குத்... அந்த ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளையும் மத்தியிலே... மனுஷகுமாரனுக் கொப்பான வரையுங் கண்டேன். என்னே ! நட்சத்திரங்கள், விளக்குத்தண்டுகள், விளக்குகள்! இவைகளைக் கவனித்தீர்களா? அவைகளுடைய அர்த்தம் தான் என்ன? நாம் வாழ்கிற கால நியமமானது இரவுக் காலமாக உள்ளது. விளக்குத் தண்டுகள், விளக்குகள், நட்சத்திரங்கள் ஆகிய இவைகள் யாவும் இரவு நேரத்திற்குரியவைகளானதால், இது இரவு வேளை என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நட்சத்திரமானது என்ன செய்கிறது? சூரியனானது திரும்பி வருகிற வரையிலும், இரவில் சூரியனின் ஒளியை பிரதிபலிப்பதாக நட்சத்திரம் இருக்கிறது. கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக! தேவனு டைய ஒரு உண்மையான ஊழியக்காரனானவன் ஏதோ ஒரு எரிகின்ற ஒளிவிளக்குகளின் ஒளியையோ, அல்லது ஒரு நெருப்புக் குச்சியின் வெளிச்சத்தையோ அல்லது பதரை எரித்து அதின் ஒளியையோ பிரதிபலிக்காமல், கிறிஸ்துவின் பொன்னிற கதிர் ஒளியையே சபைக்கு பிரதிபலித்து, “அவர் மாறாதவர், அவர் ஜீவிக்கிறார், அவர் என் மேல் பிரகாசிக்கிறார்'' என்பதை எடுத்துக் காட்டுகிறான். ஆமென்! அவ்வொளியைத் தான் அவன் பிரதி பலிக்கிறான். நட்சத்திரமானது சூரியனின் ஒளியையே பிரதிபலிக் கிறது. பாருங்கள், எனவே நாமும் தேவனுடைய குமாரனுடைய ஒளியையே பிரதிபலிக்கிறோம். அவர் ஒளி கொடுப்பது போலவே நாமும் செய்கிறோம். என்னவிதமான ஒளியைக் கொடுக்கிறோம்? அவர்களுக்கு சுவிசேஷ ஒளியைக் கொடுக்கிறோம். 88அவரை நாம் இன்னும் கூடுதவாக கவனிப்போம். அதற்காக நாம் 13ம் வசனத்தின் எஞ்சிய பகுதியையும் பார்ப்போம். “அந்த ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளையும் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக் கொப்பானவரையுங் கண்டேன். கர்த்தருடைய நாளைப் பற்றிய இந்த உபதேசம் சரியானது தான் என்பதை காண்பிக்கும்; இன்னும் கூடுதலான அத்தாட்சி இப்பொழுது இங்கே இருக்கிறது. அவரை நீங்கள் கவனித்தீர்களா? இந்த வேளையில் அவர் ஒரு ஆசாரியனாக இல்லை, அல்லது அவர் ஒரு ராஜாவாகவும் இல்லை. அவர் ஒரு நியாயாதிபதியாக இருக்கிறார். ஒரு ஆசாரியன், ஒரு பிரதான ஆசாரியன், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனைக்காக ஊழியம் செய்ய உள்ளே பிரவேசிக் கையில், அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு கச்சையைக் கட்டிக் கொள்வான். அவனுடைய இடுப்பைச் சுற்றி ஒரு கச்சையைக் கட்டியிருக்கிறான் என்றால், அவன் இன்னமும் ஊழியம் செய்து கொண்டிருக்கிறான் என்று பொருள். அவ்வாறு ஊழியம் செய்கையில் அவன் ஒருபோதும் அதை தோளில் கட்டியிருக்க மாட்டான். இங்கோ அவர் மார்பருகே பொற்கச்சை கட்டி யவராக, அதாவது இடுப்பிலே அல்ல, இடுப்புக்கு மேலே தோளிலே மார்பருகே இருக்குமாறு கச்சையைக் கட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டு வருகிறார். பொற்கச்சையை மார்பருகே கட்டியிருக் கிறார் . இது என்ன? ஒரு வழக்குறைஞர், ஒரு நீதிபதி. ஒரு நீதிபதியானவர், ஆசாரியனைப் போல் இடுப்பில் கச்சையைக் கட்டுகிறதில்லை, மார்பருகே தோளைச் சுற்றி அக்கச்சையைக் கட்டிக் கொள்கிறார். எனவே, அவர் இந்தக் காட்சியில் இப்பொழுது தனது ஆசாரிய ஊழியத்தில் நீடித்திருக்க வில்லை என்றும், யோவான் அவர் நியாயாதிபதியாக வருகிற கர்த்தருடைய நாளுக்குள்ளாகத் தான் எடுத்துக் செல்லப்பட்டான் என்பதையும் காண்பிக்கிறது. 89நீங்கள் அவர் ஒரு நியாயாதிபதி என்பதை விசுவாசிக் கிறீர்களா? யோவான் 5:22ஐ விரைவாக வாசிப்போம். அங்கே அவர் ஒரு நியாயாதிபதியா இல்லையா என்பதைப் பார்ப்போம். யோவான் 5:22. “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார்.” அது சரிதானே? அவர் நீதிபதி, உன்னதமான நீதிபதி அவர். இங்கே யோவான், இயேசுவானவர் அவரது தீர்க்கதரிசன நாளில் ஒரு தீர்க்கதரிசியாக இன்னமும் இல்லையென்றும், அல்லது அவரது இராஜரீகத்தின் நாட்களில் அவர் இல்லையென்றும், அவர் கர்த்தருடைய நாளில் ஒரு நீதிபதியாக இருக்கிறார் என்பதையே நமக்குக் காண்பிக்கிறான். இப்பொழுது எத்தனை பேருக்கு, ஆசாரியன் தன் இடுப்பிலே கச்சையைக் கட்டியிருக்கக் காண்கையில், அவன் தன் ஊழிய வேளையில் தான் இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது என்பதை அறிந்திருக்கிறீர்கள்? பழைய ஏற்பாட்டை வாசித்திருக்கிறவர்கள் அதை அறிவார்கள். ஒரு ஆசாரியனானவன் தன் இடுப்பிலே கச்சையைக் கட்டியிருந்தால், அப்பொழுது அவன் ஒரு ஊழியக்காரனாக, தனது ஊழியத்தில் இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது. ஆனால் ஆண்டவரோ இடுப்பில் அல்ல, மேலே கச்சையைக்கட்டியிருக்கிறார், எனவே அவர் ஒரு நியாயாதிபதி இப்பொழுது. 90இன்னும் தொடர்ந்து வாசிப்போம். '... மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த...“ மார்பருகே அவர் கச்சையைக் கட்டியிருந்தபடியால் அவர் ஒரு நீதிபதி என்பது சரிதான். இப்பொழுது நாம் அவருடைய ஏழு விதமான மகிமையான தோற்றத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். ஓ, என்னே! இதைப் படிக்கப் போகுமுன்னரே என்னை இது ஆரவாரிக்கச் செய்கிறது. இதைக் கவனியுங்கள். இது இவ்வளவு அருமையானதாக இருக்கிறதே. சற்று கவனியுங்கள். “... அவரது சிரசு...'' அவரைப் பற்றி ஏழு காரியங்களை யோவான் குறிப்பிடு வதைக் கவனியுங்கள். அவரது சிரசு, அவரது தலைமயிர், அவரது கண்கள், அவரது பாதங்கள், அவரது சப்தம்... ஆக ஏழு காரியங்கள் அவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஏழு விதமான மகிமைத் தோற்றம். அதை நான் வாசிக்கட்டும். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும், உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்ததது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண் டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. வெளி.1:14-16 என்னே ஒரு தரிசனம் இது. இங்கே அவன் எதைக் காண்கிறான்? மகிமைப்படுத்தப்பட்ட தேவகுமாரன் மற்றும் ஒரு அடையாளச் சின்னம். இப்பொழுது நாம் சற்று ஆயத்தமாயிருப் போம். 91ஓ என்னே! இப்பொழுது மணி ஒன்பது என்று நினைத்தேன். ஆனால் மணி எட்டுதான் ஆகிறது. இன்னமும் நான் ஆரம்பிக்க வேயில்லை. அது நல்லது. இப்பொழுது... இந்த சகோதரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக வருந்துகிறேன் அவர்கள் நின்று கொண்டிருக்கிறபடியினால் கால் வலிக்கும் என்பது எனக் குத் தெரியும், அது என்னை பதற்றமடையச் செய்கிறது. இதற்காக ஏதாகிலும் செய்யக் கூடுமானால் நான் நிச்சயமாக செய்வேன், சகோதரர்களே! இச்செய்தியை நீங்கள் சரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக நீங்கள் சிறிது நேரம் நிற்பதற்கு தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 92அவரது சிரசும் மயிரும் பஞ்சைப் போல் வெண்மையா யிருந்தது என்ற முதலாவதான காரியத்தை இப்பொழுது கவனி யுங்கள். அவரது சிரசும் மயிரும் பஞ்சைப் போல் வெண்மை யாயிருந்தது. அவரது இத்தகைய தோற்றம், அவர் முதிர் வயதை எய்திவிட்டார் என்பதைக் காட்டவில்லை. இவ்வாறான தோற்றத் தின் காரணம் முதிர்வயது என்பதினால் அல்ல. அவர் முதிர் வயதை எய்திடவில்லை. அவரது அனுபவம், அவரது யோக்கிய தாம்சம், அவரது ஞானம் இவைகளையே இத்தோற்றம் எடுத்துக் காட்டுகிறது. அவர் நித்தியமானவராக இருக்கிறபடியினால், நித்தியருக்கு வயது என்பது கிடையாது. நீங்கள் புரிந்து கொண்டீர் களா? அவரது தோற்றத்தைக் கொண்டு அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நாம் இப்பொழுது முதலாவதாக காண்போமாக. நாம் இப்பொழுது தானியேலின் புத்தகம் 7:9ல் நீண்ட ஆயுசுள்ளவராக அவர் வருவதை, இங்கே உள்ளது போலவே உள்ள அவரது தோற்றத்தை ஒரு நிமிடம் பார்ப்போம். எந்த வேதபண்டிதரும் நாம் இப்பொழுது என்ன விஷயத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை சரியாக அறிவர். தானியேல் 7:8. நான் 8ம் வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும் பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப் பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமை யானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.“ நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். பின்னால் இருப்ப வர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? அப்படியாயின் ''ஆமென்'' என்று சொல்ல முடியுமானால் சொல்லுங்கள். பின்னால் இருக்கும் என் மனைவியை நான் கேட்டேன். இங்கிருக்கும் இந்த மைக் மிகவும் சரியாகவே வேலை செய்கிறது என்று நான் எண்ணுகிறேன். நான் இதில் சற்று கூடுதலாக சப்த மிடுகிறேன் என்று கருதுகிறேன். 93சரி, இப்பொழுது தானியேல் 7:9. “நான் பார்த்துக் கொண்டிருக்கையில் சிங்காசனங்கள் வைக் கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிர மாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.“ வெண் முடி! பண்டைய காலங்களில் நீதிபதிகள் இவ்வாறு உடுத்தியிருந்தனர் என்பதை யாராவது அறிவீர்களா? ஆங்கிலேய நீதிபதிகள் வெண்பனியைப் போல வெண்மை நிறமுள்ள குல்லாயை அணிவதுண்டு. எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? முன் காலங்களிலுள்ள நீதிபதிகள் அவ்வாறான வெண்மை யான, தலையில் போட்டுக் கொள்ளும் வெண்முடியைப் போல உள்ள தொப்பியை அணிந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள்... இங்கே யோவானுக்கு அவன் கர்த்தருடைய நாளில் நிற்கிறான் என்பதை, இக்காட்சியில் அவர் நீதிபதியாக தோற்ற மளிப்பதன் மூலம் மறுபடியும் காண்பிக்கிறார். ஆமென்! அவர் இங்கே ஒரு ஆசாரியனாக அல்ல, அல்லது ஒரு இராஜாவாக அல்ல, ஒரு தீர்க்கதரிசியாகவும் அல்ல, ஆனால் நீதிபதியாக தோற்றமளிக்கிறார். யோவான் 5:22ல் கூறப்பட்டுள்ள வண்ணமாக, பிதாவானவர் நியாயத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். அவரது சிரசின் மயிர் வெண்பனியைப் போல் வெண்மைாயிருந்தது. தானியேல் அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடம் மட்டும் வருவதைக் காண்கிறான். இவையிரண்டும் ஒன்றாக இணைகிறது. அவரைக் கவனியுங்கள். “.... நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண் டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசின... நான் தவறான வசனத்தை எடுத்துக் கொள்ளவில்லை, அல்லவா?) 94தானியேல் 7:9. இதோ அது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள். நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக் கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினி மித்தம் அந்த மிருகம் கொலை செய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது (ஊ!) மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால் (அதாவது எல்லா புறஜாதி ராஜ்யங்களும் விழுந்து போம்). அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகு மட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங் களுடனே வந்தார்; (இன்று காலையில் அவர் எவ்வாறு வருகிறார் என்று 3ம் வசனத்தில் பார்த்தோம்? வானத்து மேகங்களுடனே மனுஷகுமாரன் வருகிறார்) அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டு வரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரி கமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாதது மாயிருக்கும்.“ தானி. 7:10-14 95வெண்பஞ்சைப் போல் வெண்மையான முடியை உடைய நீண்ட ஆயுசுள்ளவர் இடம் மட்டும் அவர் வருகிறார். இங்கே யோவான் திரும்பிப் பார்த்து மனுஷகுமாரனுக்கொப்பான ஒருவர் ஏழு மெழுகுவர்த்தி விளக்குத் தண்டுகளையும் மத்தியிலே, வெண்மையான முடியை உடைய ஒரு நீதிபதியாக நிற்பதைக் கண்டான். ஒரு ஆசாரியனைப் போல் இடுப்பில் கச்சை கட்டியவராக அவர் அங்கே நிற்கவில்லை, ஆனால் ஒரு நீதிபதி செய்வதைப் போல் இடுப்புக்கு மேலே மார்பருகே கச்சையைக் கட்டினவராக அவர் காணப்படுகிறார். நீதிபதிகள் தோளிலே போட்டுக் கொள்ளும் கச்சையோடு அவர் நிற்கிறார். அவர் பொன்னான, சுத்தமான, பரிசுத்தமான, சுத்தி கரிக்கப்பட்ட, அவருடைய நீதியைக் கொண்டிருந்த கச்சையைக் கட்டினவராக நின்றிருந்தார். அவரை பாதம் வரைக்கிலும் முழுவதும் மூடுகிறதான நிலையங்கியை அவர் தரித்திருந்தார். அவரது ஆள்தத்துவத்தின் மகிமையான ஏழுவித பிரத்தியட்சமாகு தலைக் கவனியுங்கள். 9614ம் வசனம் என்று நம்புகிறேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது. அவருடைய சிரசும் மயிரும்; 'கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது''. அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அந்தக் கண்கள் ஒரு காலத்தில் மனுஷ கண்ணீரால் மங்கிப் போய் விட்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ அக்கினி ஜுவாலையாக ஆகியிருக்கிறது. கோபமான... அங்கே அவர் கோபமுள்ள நீதிபதி யாக நிற்கிறார்! ஏன் அவரை நீ புறக்கணிக்கிறாய்? ஓ பாவியே, இதைப் பற்றி எண்ணிப் பார். இதைப் பற்றி, வெது வெதுப்பான சபை உறுப்பினரே, சிந்தித்துப் பார்! அதைப் பற்றி கத்தோலிக்க, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே சபையினரே, எண்ணிப் பாருங்கள்! கத்தோலிக்கரே, அதைப் பற்றி எண்ணிப் பாரும்! உங்களுடைய கன்னி மரியாளுங்கூட பெந்தெகொஸ்தே யில் சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்று, குடித்த ஒரு பெண் மணியைப் போல தள்ளாட வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் தாயார் கூட பரலோகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படு வதற்கு முன்னர், பரிசுத்த ஆவியைப் பெறுவது அவளுக்கு அவசியமாயிருந்தது. ஸ்திரீகளாகிய நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் எப்படி அங்கே பிரவேசிக்கப் போகிறீர்கள்? மனிதர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். 97அவரது முடியும், ஒரு காலத்தில் அவரது கண்கள் மனுஷீக கண்ணீரினால் மங்கிப் போயிருந்தன. ஆயினும் அவரது கண்களைப் பற்றி நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டு மென நான் விரும்புகிறேன். அவர் பூமியில் இருந்தபொழுது, லாசருவின் கல்லறையில் கண்ணீர்விட்டார், ஒரு மனிதனைப் போல் கண்ணீர் சிந்தியதால் அவரது கண்கள் மங்கலாக இருந்தன. உண்மை ! முழுவதும் இரக்கத்தினால் அவர் நிறைந்திருந்தார், அவர் மனுஷீகத்தினால் போர்த்தப்பட்ட தேவனாயிருந்தார். ஏனெனில் பாவத்தை நீக்க அது தேவையாயிருந்தது. ஆனால், அவர் மனுஷீகத் தன்மையில் இருந்தபோதிலும், அதற்குப் பின்னால், மனுஷ னுடைய இருதயத்திற்குள் பார்க்கவும், அவனைப் பற்றி அறியவும் கூடும் ஒரு காரியம் அவருக்குள் இருந்தது. ஏன்? அவர் அழிவுக் குரிய மாம்சசதையைப் போர்த்தியிருந்தவராக இருந்த போதிலும், அதற்குப் பின்னால் ஏதோ ஒன்று மகத்தானது அவருக்குள் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவர் யார் என்று தெரியவில்லை. “நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்'' என்று இயேசு கூறினார். அது உண்மை . 'என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசி யாதிருந்தாலும், அந்தக் கிரியைகளை விசு வாசியுங்கள்''. ஓ! அவர் எவ்வளவாக அச்செய்தியை, அந்த வெளிப்பாட்டை, அவர்கள் பெற்றுக் கொள்வதற்காக முயற்சி செய்தார்! அவரால் ஒரு மனிதனின் உள்ளத்திற்குள் ஊடுருவிப் பார்த்து அவனைப் பற்றி யாவும் அறிந்து கொள்ள முடிந்தது. அவரது கண்களைப் பற்றி நான் எவ்வளவாக சிந்திக்கிறேன்! ஓர் சமயம், மலைகளிலிருந்து அழுது கொண்டே இறங்கிய அவரது கண்கள், துன்பப்படுபவரின் முகத்தை பார்த்த கண்கள், ஒரு மனிதனைப் போல் அழ முடிந்த கண்கள், ஆயினும் அம்மனுஷீக பார்வையின் பின்னால் தேவ ஆவியைக் கொண்டு, அவரால் இருப்பவைகளையும், இருந்தவை களையும், இருக்கப்போகிறவைகளையும் ஆகியயாவற்றையும் பார்க்க முடிந்தது. இயேசுவில் இருந்த மனுஷீகக் கண்களுக்குப் பின்னால் இருந்தது தேவனாகையால், துவக்கம் முதல் முடிவு வரையிலும் யாவற்றையும் முன்னுரைக்க அவரால் முடிந்தது. தேவன் தாமே உங்களுடைய ஜீவியத்தில் வருவாராக! அவர் உங்களுடைய ஜீவியத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவாராக! அதின் மூலம் அவர் உங்களுக்கு வரப்போகிறவைகளை காண்பிப்பார். ஏனெனில், அது முதற்கொண்டு இனிமேல் அது நீங்களல்ல, அது உங்களுடைய ஜீவியத்தில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர்தாமே உங்களுடைய மாம்சக் கண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பார்த்துக் கொண்டு காரியங்களை தெளிவுபடுத்து கிறவராயிருக்கிறார். 98ஓ! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! ''நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லு வார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள்''. அல்லேலூயா! சில வேளைகளில் அவர் உங்களை உறக்கத்திலாழ்த்தி, உங்கள் மூலமாக அவர் பார்க்கிறார், ஆனால் அவர் நிச்சயமாக அநேக சமயங்களில் உங்களுக்கு காண்பிப்பார். ''உங்கள் வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்''. ''என்னுடைய உதவிக்காரர்கள் மேலும் என்னுடைய போதகர்கள் மேலும் ஊற்றுவேன்'' என்று சொல்லப்படவில்லை. ''விரும்புகிற எவன் மேலும், மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்'' என்றே கூறியுள்ளார். நான் இதைப் பற்றி ஏன் சப்தமிட்டு கூறுகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் வியக்கிறீர்கள். ஆனால் இவைகள் இந்த சபைக் காலங்களில் வருகின்றன. 99அக்கண்களோடு அவர் இங்கே இருக்கிறார். முன்னொரு நாளிலே அதே கண்கள் கண்ணீரினால் மங்கியதாயிருந்தது. இப்பொழுது அதே கண்கள் தான் நியாயத்தீர்ப்பில் நிற்கும். அவரது கண்கள் அக்கினி ஜுவாலையாக நிறைந்ததாக பூமியெங்கும் உலாவுகிறது. சம்பவிப்பவைகள் யாவும் அவருக்கு தெரிந்தேயிருக் கிறது. ஓ, என்னே ! யாவும் பதிவு பண்ணப் பட்டிருக்கிறது. எல்லா அசைவுகளையும் கண்காணித்து எல்லா யோசனைகளையும் வகை யறுத்து, நீங்கள் செய்யும் யாவற்றையும் அறிந்துகொண்டு, நீங்கள் செய்ய விரும்பும் காரியங்களுக்கான உங்கள் விருப்பங்களையும் அறியத்தக்கதாக அவரது கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது. யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா என்பதை அவர் அறிவார். அவரை சேவிப்பதற்காக உங்கள் விருப்பங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் அவர் அறிவார். அதைப் பற்றிய யாவையும் அவர் அறிவார். அவர் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நிற்கையில், நீங்களும் அங்கே நிற்கையில் அவருக்கு முன்பாக எல்லாப் பாவமும் வெளியரங் கமாகுமே, அது எவ்வாறிருக்கும்! 100தேவனே, அவ்விடத்திலிருந்து என்னை விடுவித்தருளும்! அதை நான் காண விரும்பவில்லை. கோபமடைந்துள்ள தேவன், அவரது கண்களில் அக்கினி ஜுவாலிக்க நீதியோடு, தலையில் நீதிபதிக்குள்ள வெண்முடியோடு நடந்து வரும்போது, அவரது கண்கள் அக்கினி மயமாக ஜுவாலித்ததாயும், உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு சிந்தனையையும் முழுவதும் அறிந்தத தாய், நீங்கள் செய்ய விரும்பினவைகள் யாவையும் அறிந்ததாகவும் இருக்கிறது. ஓ! எனக்காக பிளவுண்ட கன்மலையில் என்னை மறைத்துக் கொள்ளுமே! அந்த முதியவர் இவ்வாறு பாடுவது வழக்கம்; “இவ்வுலகமானது நெருப்புக்கிரையாகுகையில், என்னோடிரும்! என்னோடிரும்! அப்பொழுது உமது மடி எனது தலையணையாய் இருக்கட்டும்! பிளவுண்ட மலையினுள் என்னை மறைத்துக் கொள்ளும்'' தேவனே, உம்முடைய நியாயத் தீர்ப்பானது எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம்... கர்த்தாவே, எனக்குத் தேவையானது உம்முடைய இரக்கமே, உம்முடைய நியாயப் பிரமாணங்களை அல்ல அவைகளில் ஒன்றும் அல்ல... கர்த்தாவே, உம்முடைய இரக்கத்தை மட்டுமே தாரும். அதற்காக மட்டுமே நான் வேண்டுதல் செய்ய முடியும். என் கரங்களில் ஒன்றும் கொண்டு வரவில்லை. (நான் நல்லவன் அல்ல, கணக்கில் எனக்கு ஒன்றுமில்லை) உம்முடைய சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொள்கிறேன். கர்த்தாவே, எனக்குத் தெரிந்ததெல்லாம் அதுவே. என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள ஒருவர் வருகிறார். 101அவரது ஆள் தத்துவத்தின் ஏழுவிதமான ரூபகாரத்தை கவனியுங்கள். அப்பொழுது அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். “அவருடைய சிரசும்... வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது.“ இப்பொழுது கவனியுங்கள். நாம் இப்பொழுது அவர் தலையில் எவ்வாறு மூடியிருந்தார் என்பதைப் பார்த்தோம். இப்பொழுது கவனியுங்கள். அவரது சிரசு, அவரது கண்கள், இப்பொழுது அவரது பாதங்களைக் கவனிக்கையில் அது வெண்கலம் போலிருந்தது. யோவான் இயேசுவைப் பார்த்தபோது இருந்த சாயலுக்கும், தானியேல் இவ்வுலக சாம்ராஜ்யங்களைப் பற்றி விவரிக்கும் பொன் மற்றும் இன்ன பிற உலோகங்களிலான அச்சிலைக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். 193.. இங்கே நிற்கிற இவருடைய பாதங்கள் எவ்வாறிருந்தன என்பதைக் கவனியுங்கள், அவை வெண்கலம் போலிருந்தன. வெண்கலமானது எதைக் குறிக்கிறது? வெண்கலமானது தெய்வீக நியாயத்தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கிறது. வெண்கல மானது, தேவனாயிருக்கிற அவர் இப்பூமிக்கு மாம்சத்தில் வந்து, நமக்காக மரித்து, நியாயத் தீர்ப்பை - தெய்வீக நியாயத் தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டு, உறுதியான, அசையாத தன்மை யுள்ள வெண்கலத்திற்கொப்பானதொரு இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளுகிற அவருடைய நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறதா யிருக்கிறது. வெண்லகத்தைவிட கடினமானது வேறொன்றுமில்லை; அதை கடினப்படுத்த வேறு ஒன்றும் இது வரைக்கிலும் கண்டு பிடிக்கப்படவில்லை. 102நியாயத்தீர்ப்பு! வெண்கலமானது நிறைவேற்றப்பட்ட தெய்வீக நியாயத் தீர்ப்பைப் பற்றி எடுத்துரைக்கிறது. வனாந் தரத்தில் இருந்த அந்த வெண்கல சர்ப்பத்தை பாருங்கள். வெண்கல சர்ப்பமானது எதற்கு அடையாளமாயிருக்கிறது? சர்ப்பமானது பாவத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆனால் வெண்கல சர்ப்பம் என்பது பாவத்தின் மேல் ஏற்கனவே நியாயத்தீர்ப்பானது செலுத்தப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. எலியாவின் நாட்களையும் குறித்து இப்பொழுது கவனி யுங்கள். அவன் நாட்களில் அவனை தீர்க்கதரிசி என்ற முறையில் புறக்கணித்தார்கள். ஆதிகாலத்து சபைக் காலத்திற்குரிய தொடர்ச்சியை அங்கே காணலாம். இந்நாட்களில் ஒன்றில், இஸ்ர வேலுக்கும் ஏழு சபைக் காலங்கள் இருந்தன என்றும், அவையும், இக்காலத்திய சபைக் காலங்களுக்கு முன்னடையாளமாயிருந்தன என்பதையும் நான் உங்களுக்குக் காண்பிப்பேன். அவர்களுடைய சபைக் காலத்தில், எலியாவின் நாட்களில், எலியாவை அவர்கள் புறக்கணித்தார்கள், அப்பொழுது மூன்று வருடம் ஆறு மாத காலத்திற்கு மழையே பெய்யவில்லை. அந்தப் பண்டைய காலத்து தீர்க்கதரிசி, ''ஆகாயம் வெண்கலம் போலிருந்தது'' என்று கூறுகிறான். தேவனைப் புறக்கணித்து, யேசபேலுக்கு செவி கொடுத்த ஜாதிகள் மேல் தெய்வீக நியாயத் தீர்ப்பானது வந்தது. 103பலி மிருகம் பலியிடப்பட்ட பலிபீடத்தில் உள்ள வெண் கலமும் கூட தெய்வீக நியாயத் தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறது. அதின் அஸ்திபாரமே வெண்கலம்தான்; அது நியாயத் தீர்ப்பை காட்டுகிறது. தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்து, நம்மேல் வரவிருந்த நியாயத் தீர்ப்பை தன்மேல் எடுத்துக் கொண்டார். வெளிப்படுத்தின விசேஷம் 19:15க்கு ஒரு நிமிட நேரம் திருப்புங்கள். அங்கே அவர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 19:15ஐ நான் கண்டு பிடிக்க முடிந்தால், நாம் அதை சற்று வாசிக்கலாம். 12ம் வசனத்திலிருந்து பார்ப்போம். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை அல்ல, அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக் கப்பட்டது என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்). அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது. (ஆங்கில வேதாக மத்தில் “அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டது'' என்றுதான் உள்ளது. தமிழலோ ''அவருடைய நாமம் தேவ னுடைய வார்த்தை என்பதே” என்று உள்ளது - மொழி பெயர்ப்பாளர்). பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். வெளி.19:12-15 104அவர் என்ன செய்தார்? நாம் பாவிகளாயிருந்தபடியால், தேவனுடைய கோபம் நம்மேல் இருந்தது. அது சரிதானே? ஒருவரும் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியவில்லை. நம்மால் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. நாம் யாவரும், “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, இவ்வுலகுக்கு பொய் பேசுகிறவர்களாக வந்து சேர்ந்தோம்'. அவர் என்ன செய்தார்? அவர் இவ்வுலகுக்கு வந்து, அல்லேலூயா, தேவ னுடைய உக்கிர கோபமுள்ள மதுவாகிய ஆலையை மிதித்தார்! சர்வ வல்லமையள்ள தேவனுடைய முழு உக்கிர கோபமும் அவர் மேல் ஊற்றப்பட்டது. ''நீர் அடிக்கப்பட்டதினால், ஓ தேவ னுடைய ஆட்டுக்குட்டியானவரே, நீரே பாத்திரராயிருக்கிறீர்'' சர்வ லோகத்தின் பாவங்களையும் அவர் தன்மேல் எடுத்துக் கொண்டு, நமது பாவங்களை அவர் சுமந்தார், தேவன் தன்னுடைய உக்கிர கோபம் யாவற்றையும் அவர் மேல் ஊற்றிவிட்டார். ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்மு டைய அக்கிரமங் களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'' (ஏசா.53:5). அவரைப் போல ஒரு மனிதனும் ஒருக்காலும் மரிக்கவில்லை! அவருடைய சரீரத்தி லிருந்து கடைசிச் சொட்டு இரத்தமும், நீரும் வெளியே சிந்தித் தீருமட்டும் அவர் பாடுபட்டார். “... சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை... 105ஓர் நாளில், அந்த வெண்கலம் போன்ற நீதியின் பாதங்கள், (மகிமை!) அவர் நியாயாதிபதியாக வருகையில், அந்திக் கிறிஸ்து வையும், தம் சத்துருக்கள் அனைவரையும் மிதித்துப் போடுவார். அல்லேலூயா! அவர் பூமி முழுவதும் தன் கரத்தில் இருப்புக் கோலுடன் நடந்து செல்வார். ஆமென்! ஓ! பாவியான நண்பனே! மனந்திரும்புவதற்கு தருணம் இருக்கையில் மனந்திரும்புவாயாக! சொல்லப்படுகிற இவ்விஷயங்கள் யாவும் ஒரு சிறுகதைதான் என்றும், அவைகள் நிறைவேறப் போகிறதில்லையென்றும் எண்ணிக் கொண்டு, மனந்திரும்புவதை தள்ளிப்போட முயற்சித் துக் கொண்டேயிருக்கிறாய். அது நிச்சயம் சம்பவிக்கும். ''எனக்கு அது நேரிடாது!'' என்று சொல்லாதே. உனக்கு அது சம்பவிக்கும். அவரது வெண்கலம் போன்ற பாதங்கள் அவருடைய சத்துருக்களை மிதித்துப் போடும். ஏனெனில் அவர் நமது பாவங் களுக்கு கிரயம் செலுத்தும்படி பாடுபட்டு, நம்மேல் வரவேண்டிய தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை அவர் மிதித்தார். பின்பு நாமோ, குற்றமுள்ளவர்களாயும், தரித்திரராயும், பரிதாபப்படத்தக்கவர்களாயும் புழுக்களைப்போல் இருந்து, நமது சிறிய மூக்கை உயர்த்திக் கொண்டு, ஏதோ நாத்திகவாத புத்தகத்தைப் படித்துவிட்டு, “தேவன் ஒருவர் இல்லை'' என்று எண்ண முயற்சித்தோம். ''அவ்வாறு ஒன்றில்லை, நியாயத்தீர்ப்பு நம்மேல் வரமுடியாது'' என்று கூறினோம். அவர் தன்னுடைய வெண்கலம் போன்ற பாதங்களைக் கொண்டு அவருடைய சத்துருவை உதைத்து எறிந்து விடுவார். அந்தி கிறிஸ்துவின் மேல் பலமாக தன் பாதங் களைக் கொண்டு உதைத்து எறிந்து விடுவார். அவர் அந்த கள்ளச் சபைகளை எடுத்து, காலாகாலங்களாக எரியும் பட்சிக்கும் அக்கினிக் கடலில் வீசியெறிந்துவிடுவார், அங்கே அவள் அந்த பட்சிக்கும் அக்கினியால் முற்றிலும் எரித்து அழிக்கப்பட்டு இல்லாமற் போவாள். அவரும் அவருடைய சபையும் சதாகாலமும் பூமியிலே அரசாளுவார்கள். மகிமை! 106''வெண்பஞ்சைப் போன்று சிரசு வெண்மையாயிருத்தல்'' என்பது நீதி, அனுபவம், நாவன்மை நிறைவையும், ஞானத்தை யும் குறிக்கிறது. வெண்மை ஞானத்தைக் குறிக்கிறது, வயதைக் குறிக்கிறது. அவர் செய்கிறதைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவரே ஞானத்தின் ஊற்று. அவரே அனுபவத்தின் ஊற்று. நன்மை யான யாவற்றுக்கும் உரிய ஊற்று அவரே. எனவே அவர், சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போன்று இருக்கும். முடி தொங்கிக் கொண்டிருப்பவராக மனுஷகுமாரனுக்கொப்பானவரைப் போல் காட்சியளிக்கிறார். தானியேல் அவரை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர், அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, கண்டு, “நீண்ட ஆயுசுள்ளவர்'' என்று கூறினான். மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவர் வல்லமையோடு வந்து, நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து இணைந்தார், நியாய சங்கம் உட்கார்ந்தது” என்று தானியேல் எழுதினான். 107அனலுமின்றி குளிருமின்றி வெது வெதுப்பாயிருக்கும் சபையே, உன்னிடம் நான் பேசுகிறேன், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பத்துக் கன்னியர் கர்த்தரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து பேர்கள் புத்தியில்லாதவர்களுமாயிருந்தனர்; அது ஒட்டுச் சேர்க்கப்பட்ட மரமாயுள்ளது. இன்று காலையில் அதைக் குறித்துப் பார்த்தோம். அவர்கள் தேவனைச் சந்திக்க வெளியே புறப்பட்டுச் செல்கையில், இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்.... இப்பொழுது கவனியுங்கள், புத்தகங்கள் திறக்கப்பட்டன'' என்று வேதம் கூறுகிறது. தானியேல் 7:9ல் 'புஸ்தகங்கள் திறக்கப்பட் டது'''. அது பாவிகளைப் பற்றி கூறும் புத்தகமாகும். “வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது'' அவருடன் வந்தது யார்? எடுத்துக் கொள்ளப்பட்ட அவருடைய சபை வந்தது. ''ஓ! ''ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள், கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்'' அவருடைய மனைவியாகிய மணவாட்டி தான் அது. ஓ, மகிமை! அவருடைய மனைவியாகிய சபை அவரு டன் வந்தாள். நியாய சங்கம் உட்கார்ந்தது. புத்தகங்கள் திறக்கப்பட்டன. வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அது தானே புத்தியில்லாத நித்திரை செய்த கன்னியரைப் பற்றியது, ஒவ்வொரு மனிதனும் அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே நியாயந் தீர்க்கப்பட்டான். நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்கப்படுவீர்கள், அதற்கு பிறகு, என்ன? நீங்கள் இப் பொழுது இதை மிகவும் நன்றாக அறிந்து கொண்டு வீட்டீர்கள். இதற்கு முன்பாக அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் இப்பொழுது அறிவீர்கள். நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பாவியும் பக்தியில்லாதவனும் எங்கே நிற்பார்கள்? புறக்கணிக்கிறவன், இதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டே, அதைப் புறக்கணிக் கிறான். அவர்கள் எங்கே வந்து நிற்பார்கள்? அவரது பாதங்கள் வெண்கலம் போன்று பிரகாசித்தது, அது தெய்வீக நியாயத் தீர்ப்பை எடுத்துரைக்கிறது. 108இந்தப் பக்கத்தின் கடைசிப் பகுதி வரைக்கும் நாம் இப் பொழுது பார்ப்போம். “... அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தது. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது.” ''பெரு வெள்ள த்து இரைச்சல்''' (the sound of many waters) தண்ணீர்கள் எதைக் குறிக்கிறது? இதை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், வெளிப்படுத்தின விசேஷம் 17:15க்கு திருப்புங்கள். அங்கே வேதம் தண்ணீர்கள் என்பது எதற்கு அடையாளமா யிருக்கிறது என்று கூறுவதை நீங்கள் காணலாம். தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்“. ”சப்தம்'' - ஜீவ சமுத்திரத்திலே பாதை தவறுகிற ஆத்துமாவுக்கு அது எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! அவனை வழி நடத்திச் செல்ல ஒரு மாலுமி அவனுக்கு இல்லை; அவனது ஜீவிய படகு அச்சமுத்திரத்தின் கோர அலைகளில் கட்டுப்பாடின்றி மிதந்து, அவன் பெருவெள்ளத்து இரைச்சலைக் கேட்பான். பாதை விலகிச் செல்லும் ஆத்துமாவுக்கு அது எத்தனை பயங்கரமாயிருக்கிறது! 'பெருவெள்ளத்துச் இரைச்சல்'. அவரு டைய சப்தமானது என்ன? அது நியாயத் தீர்ப்பாயிருக்கிறது; பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ ஊழியக்காரர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஜனங்களை நோக்கி சப்தமிட்டு கூறிய வைகள் அங்கே நின்று கொண்டிருக்கின்றன. திரளான ஜனங்கள் மத்தியிலே அதிகமான தண்ணீர்களின் சப்தம் புறப்பட்டுச் சென்றது. அவருடைய கரத்திலிருக்கிற ஏழு நட்சத்திரங்களாகிய ஏழு தூதர்கள் ஒவ்வொரு சபைக் காலத்திலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்தும், இயேசுவின் நாமத்தில் உள்ள ஞானஸ்நானத்தைக் குறித்தும், தேவனுடைய வல்லமை யினால் அந்நிய பாஷைகளில் பேசுதலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலைப் பற்றியும், இரண்டாம் வருகையைப் பற்றியும், தெய்வீக நீயாயத்தீர்ப்பைப் பற்றியும் சப்தமிட்ட அவர்களுடைய சப்தமது. மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பானவரிடத்தி லிருந்து பெருவெள்ளத்து இரைச்சலைப் போல சப்தமானது புறப் பட்டு வந்தது. 109நீங்கள் கூட்டங்களில் உட்கார்ந்து, தேவனோடு நீங்கள் உங்களை ஒப்புரவாக்கி கொள்ள வேண்டும் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டு அறிந்து கொள்வது எப்படியாயிருக்கிறது? நீங்கள் உட்கார்ந்திருக்கிற அதே கூட்டத்தில், பாதை தவறிச் செல்லுகிற ஒரு ஆத்துமா அதே சப்தத்தை தன்னோடு பேசக் கேட்டும், தேவனுடைய நியாயத் தீர்ப்புகளைப் பற்றி பேசக் கேட்டும், அதை நிராகரிப்பது அவ்வாத்துமாவுக்கு எப்படியிருக்கும்! உனக்கு சற்றுக் கீழாக அந்த பயங்கரமான பெருவெள்ளமானது இருந்து கொண்டிருக்கிறது, அது உன்னை நித்திய அழிவுக்கு நேராக கொண்டு செல்லும்! பெருவெள்ளத்து இரைச்சல் என்பது அவரது நான்காவதான தோற்றமாயிருக்கிறது. பெருவெள்ளத்து இரைச்சல். மகிமையில் இந்த இராத்திரியிலே இந்த சப்தமானது பதிவு செய்யப் படுகையில், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய சப்தமானது பதிவு செய்யப்படுகிறது. உங்களுடைய எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது. ''ஒரு மனிதன் எண்ணுகிறது போலத் தான் அவனும் இருக்கிறான்.'' பூமியில் உங்கள் நினைவுகளைவிட உங்கள் சப்தமானது அதிகம் கேட்கிறது. ஆனால் பரலோகத்திலோ உங்கள் சப்தத்தைவிட உங்கள் நினைவுகளே அதிகமாக உரத்து ஒலிக்கிறது என்பதைக் கவனியுங்கள். நிச்சயமாக அவ்வாறுதான் உள்ளது. உங்கள் எண்ணங்களையும் இருதயத்து விருப்பங்களை யும் தேவன் அறிவார். அவை யாவற்றையும் பற்றி அவர் அறிகிறார். அவர் பரிசேயரிடம், “மாய்மாலக்காரரே, நீங்கள் பொல் லாதவர்களாயிருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்'' என்று கூறினார். ''என்னை நல்ல போதகரே என்று நீங்கள் அழைத்தாலும், உங்கள் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து, நீங்கள் மாய்மாலக்காரர் என்றே நான் காண்கிறேன், நீங்கள் மனப்பூர்வமாக என்னை அவ்வாறு அழைக்கவில்லை'' என்று அவர்களிடம் கூறினார். 110அநேக சபைக் காலங்களினூடே ஒலித்த அந்த சப்தங்கள் ஒன்று சேர்ந்து அந்நாளில் இடிமுழக்கம் போல் முழக்கமிடும் போது அது எவ்வாறு இருக்கும்? இப்பொழுது நான் உங்களை சில விஷயங்களைக் குறித்து கேட்கட்டும். இரட்சிக்கப்பட்ட மக்களே! உங்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூறட்டும். இப்பொழுது, பாதை விலகிச் செல்கிற வறிய ஆத்துமாவே, அப்பெருவெள்ளத்திற்குள் அலைந்து செல்கிற ஆத்துமாவே, ஜாக்கிரதையாயிரு. அப்பொழுது உன்னை இரட்சிக்க ஒன்றுமில்லை என்பதை நீ அறிய வரும்போது அது மிகவும் பயங்கரமாயிருக்கப் போகிறது. அப்பொழுது நீ இரட்சிக்கப்பட முடியாது, உனக்கு முன்பாக உன்னுடைய அழிவானது இருக்கிறது என்பதை நீ அப்பொழுது அறிவாய். அதை நீ அறிந்த சில நிமிடங்களுக் குள்ளாகவே, 'அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று, பிசாசுக்காகவும், அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குள் போய் மாளுங்கள்'' என்ற சப்தமானது கேட்கும். இந்த மகத்தானதை விட்டு விலகிச் செல் வதால், அந்நாளில், நீங்கள் இவ்விதமான அநேகக் கூட்டங்களின் சப்தங்களையெல்லாம் ஒருசேர பெரிய நீர்வீழ்ச்சியின் பெரு வெள்ளத்து இரைச்சலைப் போல் கேட்பீர்கள். ஓ, எவ்வளவு பயங்கரமானதாக அது இருக்கப்போகிறது! அது திகில் சூழ்ந்ததாக இருக்கப் போகிறது. அவ்வாறு உங்களுக்கு சம்பவிக்க இடம் கொடுக்க வேண்டாம், ஜனங்களே! மனந்திரும்புங்கள், உங்க ளுக்கு சமயமிருக்கும்போதே, இப்பொழுதே ஒப்புரவாகுங்கள். 111நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். எப்பொழுதும் பசுமையாயிருக்கும் மரத்தின் கீழ் அமர்ந்து, சலசலவென அமைதியாக ஓடிவரும் நீரோடையின் இனிய ஓசையைவிட கேட்பதற்கு இனிமையானது வேறென்ன உண்டு, நங்கூரமிட்ட ஒரு மனிதனுக்கு? அது தேவனுடைய சப்தத்தோடு உன்னதங்களில் வீற்றிருக்கும் அந்த சபைதான், அது அவ்வாறு இனிமையாக அவர்களோடு பேசுகிறதாயிருக்கிறது, அது என்னவென்று கண்டீர்களா? அது பாவிக்கு ஆக்கினையாகவும், இரட்சிக்கப்படு கிறவருக்கு ஆசீர்வாதமாகவும் உள்ளது. கிறிஸ்து இயேசுவாகிய கன்மலையிலே பாதுகாப்பாக தன் படகை நங்கூரமிட்டுக் கொண் டவன் அமர்ந்து செவி கொடுக்கிறான், அவன் இளைப்பாறுகிறான். அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசியுங்கள். தண்ணீர்கள் ஓடி வருகிற இடங்களருகில் செல்ல நான் எவ்வளவாய் விரும்புகிறேன். நாங்கள் மீன் பிடிக்க அல்லது வேறு எதற்காவது சென்றால், நான் வழக்கமாக, இனிமையான சத்தத்தோடு சலசலவென மெதுவாக ஓடிவரும் இடத்தை எனக்கென தெரிந்து கொள்வேன், ஏனெனில் அது உங்களை இளைப் பாறச் செய்கிறது. அது உங்களோடு இரவு முழுவதுமாக பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஓ, என்னே! 112கிறிஸ்துவுக்குள்ளாக உங்கள் ஆத்துமாவை நீங்கள் உண்மை யாகவே நங்கூரமிட்டுக் கொள்வது அழகாக இருக்குமல்லவா? அவ்வாறான இடத்தில் நீங்கள் அவருக்கு முன்பாக அமைதி கொள்ள முடியுமே. அங்கே அவருடைய சத்தம் உங்களோடு “நான் உன் பரிகாரியாகிய கர்த்தர், உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறவர் நானே, நான் உன்னை நேசிக்கிறேன், உலகத்தோற்றத்திற்கு முன்பே உன்னை நான் அறிந்தேன், புத்தகத்தில் உனது பெயரை நான் பதிந்துள்ளேன். நீ என்னுடையவன், பயப் படாதே, நான் தான், பயமடையாதே, நான் உன்னோடு இருக் கிறேன்'' என்று பேசுகிறது? பின்பு நீங்கள் பாடலாம் : இளைப்பாறுதல் ஈந்திடும் துறைமுகத்தில் நான் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளேன் இனி சீறும் கடலினில் பயணம் செய்யேன், கடும்புயற்காற்று கொந்தளிக்கும் ஆழத்தில் வீசினாலும், நான் என் இயேசுவிலே என்றென்றும் பத்திரமாயுள்ளேன். உங்களோடு இனிமையாக பேசும் அதே சத்தம், பாவியை ஆக்கினைக்குள்ளாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோவாவை காப்பாற்றிய அதே ஜலப்பிரளயம், பாவியை அழித்தது. நான் கூறுவதை புரிந்து கொண்டீர்களா? திரளான தண்ணீர்களின் சத்தம். இப்பொழுது கவனியுங்கள்; ''சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போல் இருந்தது, அக்கினி ஜூவாலையைப் போல் பிரகாசிக்கும் கண்கள், வெண்கலம் போன்ற பாதங்கள், அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. “... தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்” 113“ஏழு நட்சத்திரங்கள்''. இங்கே நாம் 20ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத் தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த எழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.'' வெளி.1:20 இதை யோவானுக்கு ஆண்டவரே, அது என்ன என்பதை அவன் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாதபடி, உரிய வியாக் கியானத்தை கொடுக்கிறார். ஒவ்வொரு சபைக் காலத்திற்குமுரிய ஒவ்வொரு தூதன். இவ்வாரத்தில் நாம் அத்தூதர்களைப் பற்றி வரலாற்றில் பின்னால் திரும்பிப் பார்த்து, அவர்களுக்கு எவ்வாறு சரியாக அவரவர்களுக்கு உரிய ஊழியமானது இருந்தது என்பதைக் காணும்போது, அது அழகாக இருக்கப் போகிறது. வேதத்தில் கூறியபடியே அவர்களுக்கு ஊழியமானது இருந்தது என்பதை வரலாற்றில் நாம் காணலாம். அச்சிறிய சபையில் சபைக் காலங்கள் தோறும் ஊழியமானது அவ்வாறு சரியாக இருந்தது. 114சில காலத்திற்கு முன்னர் ஒருவர் கூறினார், “கத்தோலிக்க சபையானது எல்லாக் காலங்களிலும் நிலையாக நிலைத்து நிற்பதால், அதுவே உண்மையான சபை என்னும் ஒரு கூற்று கத்தோலிக்க சபையைக் குறித்து உண்டே , நீர் அறிவீரா?'' என்று. நான் அதற்கு பதிலளிக்கையில், ''அது ஒன்றும் பெரிய இரகசியமல்ல, ஏனெனில் அச்சபைக்கு அரசாங்கமும் மற்றும் யாவும் ஆதரவாக இருந்தபடியால், அது நிலைத்து நின்று, புயல்களை சமாளித்தது. ஆனால் எனக்கு மிகவும் இரகசியமானதாக இருப்ப தென்னவெனில் எவ்வாறு அச்சிறிய சிறுபான்மையினரான சபை யானது வாளால் அறுப்புண்டு, சிங்கங்களுக்கு இரையாக போடப் பட்டு, அக்கினிக்கிரையாக்கப்பட்டு, மற்றும் எல்லாவித உபத்திர வங்களுக்கும் உட்படுத்தப்பட்டபோதிலும், சீறும் புயல்களை யெல்லாம் சமாளித்து பிழைத்து நின்றது என்பதுதான்'' என்று கூறினேன். அவர்களோடு தேவனுடைய கரம் இருந்தது என்பதை அது காட்டுகிறது. அவ்வளவுதான் இன்றும் அவளது வெளிச்ச மானது எரிந்து கொண்டிருக்கிறது. ஆமென்! ஆம் ஐயா! 115“எனது வலது கரத்திலுள்ள ஏழு நட்சத்திரங்கள்'' என்ப தைப் பற்றிப் பார்ப்போம். அவருடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். ஏழு நட்சத்திரங்களும், ஏழு காலங்களிலுள்ள ஏழு ஊழியக்காரர்கள் என்று அர்த்த மாகிறது. ஓ, இது அழகாக உள்ளது. நாம் பின்னால் திரும்பிப் பார்த்து, எபேசு சபைக்கு செய்தியைக் கொண்டு வந்த ஊழியக்காரன் யார் என்பதை தெரிந்து கொண்டு, பிறகு அடுத்து உள்ள சிமிர்னா சபைக்கு உள்ள தூதன் அதே செய்தியை தன் காலத்து சபைக்கு கொண்டு வந்து மரணபரியந்தம் அதில் நிலைத்திருந் தான் என்றும், இவ்வாறு தொடர்ந்து பெர்கமு, தீயத்தீரா சபைக் காலங்கள்தோறும், கடைசியாக இந்தக் காலம் வரையிலும் செய்தியானது தொடர்ந்து வந்து கொண்டேயிருக் கிறது என்பதையும் பார்க்கலாம். அந்த மகத்தான ஒளியைக் கொண்டிருந்த அத்தூதர்கள் அதை தங்கள் காலங்களுக்கு கொண்டு வந்தபோது, அவ்வொளியானது, ஆதியில் இருந்த வண்ணமாகவே மாறாமல் இருந்தது. அதைக் காலங்கள் தோறும் அவர்கள் கொண்டு வந்தார்கள். ''அவர் தமது வலது கரத்திலே இந்நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்''. இதை எண்ணிப் பாருங்கள்! இந்த இடத்தில் வலது கரம் என்பது, அப்படியே தேவனுடைய வலது பாரிசத் திலே கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் என்பதைப் போல அர்த்தம் உடையது அல்ல. தேவனுக்கு ஒரு வலது கரம் உண்டு என்பதாக இதன் மூலம் அர்த்தம் உண்டாகாது. ஏனெனில் தேவன் ஆவியா யிருக்கிறாரே. ஆனால் கிறிஸ்துவோ வல்லமையின் வலது கரமா யிருக்கிறார். உங்களுடைய வலது கரத்தின் மனிதன் ஒருவன் இருக்கிறானென்றால், அப்படிப்பட்டவன் உங்களுக்கு நெருக்க மாக உங்கள் அருகாமையில் இருப்பவன். 116அவருடைய வலது கரத்திலே அவ்வேறு நட்சத்திரங்களும் இருந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக் குரிய மின்னோட்டத்தை, தங்களுக்குரிய ஒளியை அவரிடத்தி லிருந்து கிரகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவருடைய வலது கரத்தில், முழுவதும் அவருடைய ஆளுகைக்குள் உட்பட் டிருந்தார்கள். ஓ! ஒவ்வொரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரனும் அவ்வாறே இருக்கிறான். அவருடைய கரத்தில் இருக்கிறார்கள்... யார் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியும்? யார் தீங்கிழைக்க முடியும்? தூதன் என்றால் “செய்தியாளன்'' என்று பொருள்படும். ”கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?'' என்று பவுல் கூறினான். “வியாதி பிரிக்கக் கூடுமோ? நாசமோசமோ? நிர்வாணமோ, பட்டயமோ, மரணமோ? கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு எதுவும் நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித் திருக்கிறேன்'' என்று பவுல் கூறினான். ஏனெனில் நாம் முழுவதுமாக அவருடைய வலது கரத்திற்குள் அடங்கியிருக்கும்படி ஒப்புக் கொடுத்திருக் கிறோம். சிலர், ''உருளும் பரிசுத்தர், உருளும் பரிசுத்தர்'' எனப் பரிக சிக்கலாம். அது ஒன்றும் அவர்களை சிறிது கூட பாதிப்பதில்லை. “நீ ஒரு மத வெறியன்'' என்று ஏசலாம். ஆனால் அவ்வார்த்தையை அவர்கள் கேட்கக் கூடச் செய்வதில்லை. அவர்கள் முழுவதும் அவருடைய வல்லமையின் வலது கரத்தில் அடங்கியிருந்து, அங்கிருந்து தங்களுடைய ஒளியை கிரகித்துக் கொண்டு, சாந்தத்திலும், தயவிலும், மனத்தாழ்மையிலும், பொறுமையிலும் நடந்து கொண்டு, அவருடைய ஜீவனை அடைந்து கொண்டு, அடையாளங்களையும், அற்புதங்களையும் உடையவர்களாயிருக் கிறார்கள். உலகமானது, ''அது பில்லிசூன்யம்'' என்று வேண்டு மானாலும் அழைக்கட்டும், அது நமக்கு எந்த வேறு பாட்டையும் ஏற்படுத்தாது. ஏனெனில், நாம் அவருடைய வலது கரத்தினுள் அடங்கியிருக்கிறோம் என்பதை அறிவோம். அது அற்புதமல்ல வா? என்னே ! நாங்கள் உங்களை களைப்படையச் செய்ய விரும்பவில்லை, எனவே, நாம் விரைவாகச் செல்லுவோம். ''அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்கள்'' இப்பொழுது ஏழாவதும் கடைசியுமான அவருடைய தோற்றம்: ''.... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது“ (ஓ, இது ஆறாவதான அவரது தோற்றம் என்று தான் நான் கூற விழைந்தேன்). “.... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது.” 117இப்பொழுது, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. அவருடைய வாயிலிருந்து... அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். “.... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது”. இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்பது வேதாகமத் தையே குறிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அதைப் பற்றி அறிந்து கிரகித்துக்கொள்ளத்தக்கதாக எபிரெயர் 4:12ஐ எடுத்துக் கொள்வோம். வெளிப்படுத்தின விசேஷத்திற்கு ஓரிரண்டு பக்கம் சற்று முன்னால் எபிரெயர் உள்ளது. யூதா, பிறகு எபிரெயர். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.... எபிரெயர் 4ம் அதிகாரம், இதோ உள்ளது. சரி, எபிரெயர் 4ம் அதிகாரம் 12ம் வசனம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்கு களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது அவருடைய சபையில் பிரத்தியட்சமாகிறது. ஆனால் அவர்கள் “எண்ணங்களைப் படித் தறியும் மனோவசியக்காரர்கள்'' என்று கூறுகிறார்கள். தேவ னுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டய மாயிருக்கிறது. 118அதிலிருந்து ஒன்றைக் குறித்து நான் சிந்திக்க நேரிட்டது. ஒரு குறிப்பிட்ட வேதவாக்கியத்தை நான் இங்கே எழுதி வைத்துள்ளேனா இல்லையா என்பது தெரியவில்லை... வெளிப் படுத்தின விசேஷம் 19ம் அதிகாரத்தை எடுங்கள். வெளிப் படுத்தின விசேஷம் 19:11 முதல் 13 முடிய. “பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந் தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். (அவர் யாரென்று நீங்கள் அறிவீர்கள், இல்லையா?) (இங்கே வெண்மை மீண்டும் வருகிறது, அது நியாயத் தீர்ப்பைக் குறிக்கும்). அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தன, (இவர் யார்?) அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (ஊ ஊ... இப்பொழுது அவர் இராஜ்யத்தில் வந்து விட்டார்) அவருக்கேயன்றி வேறொருவருக்குந்த தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. வெளி.19:11-13 அவருடைய வாயிலிருந்து என்ன புறப்பட்டுச் சென்றது? என்ன புறப்பட்டுச் சென்றது? வெள்ளைக் குதிரையின்மேல் செல்லுகிறவர்? வெளிப்படுத்தின விசேஷம் 6ம் அதிகாரத்தில் அங்கே ஒரு வெள்ளைக் குதிரையின்மேல் ஏறிப்போகிறவன் இருந்தான், அவனிடம் வில் கொடுக்கப்பட்டிருந்தது, அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 119இவருடைய வாயிலிருந்தோ ஒரு பட்டயம் புறப்பட்டுச் சென்றது. அவர் என்னவாயிருந்தார்? வெளிப்படுத்தின விசேஷத்தின் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிப் போகிறவர்? பட்டயத்தைக் கவனியுங்கள். ''அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டுச் சென்றது''. அது வார்த்தை யாகும். இறுதியாக, அவருடைய வார்த்தையினாலே, அது எல்லா தேவ புத்திரருக்கும் பிரத்தியட்சமாகும் போது, அவர் கருக்குள்ள பட்டயமாகிய அவருடைய வார்த்தையினாலே, எல்லா ஜாதி களையும் அவருடைய பாதத்தின் கீழ் நசுக்கிப் போடுவார். இவ்வசனத்தை நாம் படிக்கையில் என்ன நேரிட்டது என்பதைக் கவனியுங்கள். “.. அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது”. “இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயம்''. இந்த நபரின் வாயிலிருந்து என்ன புறப்பட்டுச் சென்றது? தேவனுடைய வார்த்தை . அது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகும். அது என்ன செய்தது? இருதயத்தின் யோசனைகளையும் எண்ணங்களையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. அது சதையையும், இரத்தத் தின் திசுக்களையும், எலும்பினுள் இருக்கும் கணுக்களையும் ஊனை யும் ஆழமாக ஊடுருவிப் பாய்ந்து, அதற்கும் ஆழமாக உள்ளே கடந்து சென்று, இருதயத்தின் யோசனைகளையும், எண்ணங்களையும் வகையறுக்கிறது. அதை தான் தேவனுடைய வார்த்தையானது செய்கிறது. 120''அந்த தேவனுடைய வார்த்தையானது மாம்சமாகி நமக்குள் (நமது மத்தியில்) வாசம் பண்ணினார்''. இப்பொழுது, தேவனு டைய வார்த்தையானவர் தமது சபையில் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணுகிறார். அவருடைய கையில் இருக்கிற தூதர்கள் ஊழியம் செய்கிறார்கள். தேவன் தனது சபையை நம்பியிருக்கிறார். தேவன்தாமே, இந்த சுவிசேஷ ஒளியை, மரித்துக் கொண்டிருக்கிற, பிசாசினால் கட்டப்பட்டிருக்கிற, சாஸ்திர சம்பிரதாயங்களினால் நிறைந்த இவ்வுலகின் மக்களுக்குக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக, இக்காலத்திலுள்ள நம்மைச் சார்ந்திருக்கிறார். தேவன் அதற்குண்டான பாரத்தை என் மேலும் உங்கள் மேலும் வைத்திருக்கிறார். ஒரு அஞ்ஞானி சுவிசேஷத்தை அறியாமல் மரித்தால், நமக்கு ஐயோ! அவர்கள் (ஸ்தாபனங்கள்) அஞ்ஞானிகளுக்கு படிக்கவும், எழுதவும், கணக்குப் போடவும் கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு சில துண்டு பிரதிகளைக் கொடுத்து, வெறுமனே தங்களது மார்க்கத்தை தழுவிக் கொள்ளும்படி மட்டுமே செய்ததேயல்லாமல் வேறொன்றும் செய்யவில்லை. நானோ சுவிசேஷத்தைக் குறிப்பிடுகிறேன். சுவிசேஷம் வெறும் வார்த்தையல்ல. பவுல் அவ்வாறு கூறினான். பவுல், “சுவிசேஷமானது நம்மிடத்தில் வெறும் வார்த்தையாக மட்டும் வரவில்லை, அவ்வார்த்தையானது வல்லமையாக பிரத்தி யட்சமாகியது. பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு இருதயத்தினுள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் வார்த்தையானது விதைக்கப் படும்போது, வார்த்தை என்ன செய்யும் என்று கூறப்பட்டுள்ளதோ அதையே உருவாக்குகிறது. வார்த்தையானது இருதயத்தின் எண் ணங்களை வகையறுக்கிறது. மகிமை! ஓ, என்னே! ஓ! வார்த்தை யானது இருதயத்தின் யோசனைகளையும் எண்ணங்களையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. 121அவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் சென்ற இரு புறமும் கருக்குள்ள பட்டய மானது புறஜாதிகளை விழிப்படையச் செய்கிறது. இந்நாட்களில் ஒன்றில் ஏதோ ஒன்று சம்பவித்தாக வேண்டும். ஆம்! தேவனுடைய வார்த்தை, அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை, பிரத்தியட்சமான வார்த்தை. பாருங்கள், “உலகம் முழுவதும் புறப்பட்டுப் போங்கள்'' என்று இயேசு கூறினார். மாற்கு சுவிசேஷம் 16ம் அதிகாரத்தில், சபைக் காலத்தில் தன்னை வெளிப்படுத்துவதற்காக அவர் திரும்புவதற்கு முன்னர், சபைக்கு தன்னுடைய இறுதியான கட்டளையை அவர் கொடுப் பதை அங்கே பார்க்கிறோம். 'உலகமெங்கும் போய் சர்வ சிருஷ் டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று அவர் தன் சபைக்கு அதிகாரம் கொடுத்தார். அது என்ன? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். மாற்கு எழுதின சுவிசேஷம் 16ம் அதிகாரம். ”சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கி யுங்கள்'' என்று அவர் தன் சபைக்கு அதிகாரம் கொடுத்தார். அது என்ன? சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். மாற்கு எழுதின சுவிசேஷம் 16ம் அதிகாரம். ''சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும்.'' சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் என்றால் என்ன? அதற்கு அர்த்தம் என்னவெனில், “பரிசுத்த ஆவியின் வல்லமையை அதன் அற்புதக் கிரியைகள் மூலமாக வெளிப் படுத்திக் காண்பிப்பது' என்பதாகத்தான் அது இருக்க முடியும். 122இப்பொழுது கவனியுங்கள். அப்படியாயின், அது வெறு மனே வார்த்தையைப் போதித்தல் மட்டுமல்ல. அவர் ஒரு போதும், வார்த்தையைக் குறித்து போதியுங்கள் என்று கூற வில்லை. “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்றே அவர் கூறினார். வார்த்தையை உபதேசியுங்கள் என்பதாக அல்ல, சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்பதாகவே அது உள்ளது. ”சுவிசேஷத்தை விசுவாசிப்பவர்கள் இவ்வடையாளங்கள் பின் தொடரும்: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்து வார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்''. இயேசு இவ்வாறு அவர்களுக்கு கட்டளையிட்ட பின்பு, வேத வாக்கியத்தில் தொடர்ந்து, இவ்வாறு கூறப்பட்டுள்ளது ''... அவர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியை நடப்பித்து, அடையாளங் களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்'' அது தான் சுவிசேஷம், சுவிசேஷமானது அவ்வாறுதான் ஒரு காட்சியாக இருக்கிறது. வெறும் வார்த்தையல்ல. எவ்வளவு காலம் இவ்வடையாளங்கள் பின் தொடரும்? உலகத்தின் ஒவ்வொரு காலத்தினூடே, அதன் முடிவு பரியந்தமும் இருக்கும். ஒவ்வொரு காலத்தினூடேயும் அந்த சிறு கூட்டமானது அவ்வொளியை விடாமல் பற்றிக் கொண்டவாறே தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. ''பயப்படாதே, சிறு மந்தையே, உனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று இயேசுவானவர் கூறியதில் ஒன்றும் வியப்பில்லை. அது எப்பொழுதுமே சிறு மந்தையாகத்தான் இருந்து வந்துள்ளது, அது ஒரு போதும் பெருங்கூட்டமல்ல. 123இன்னும் ஒரு வேதவாக்கிய மேற்கோள். நாம் 20ம் வசனத்தை பார்த்தோம். இப்பொழுது 16ம் வசனத்தைப் பார்ப்போம். “... அவருடைய வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்“. இப்பொழுது அவருடைய முகச்சாயலைப் பற்றியுள்ள வசனத்தை நாம் எடுத்துக் கொள்வோம். “.... அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது.... அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது...'' மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இவ்வதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். இதில் உள்ள வசனங்களை குறித்துக் கொள்கிறவர்கள் குறித்துக் கொள்ளட்டும், நாம் இதை வாசிப்போம். மத்தேயு 17:1-2. “ஆறு நாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும், அவனுடைய சகோதரனாகிய யோ வானையும் கூட்டிக் கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அவர் மறுரூபமானார். அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய வருகையின் நாளுக்குள்ளாக அப்போது இருக்கப் போகும் அவரது ரூபத்திற்குள்ளாக மறுரூபமானார். இப்பொழுது கவனியுங்கள். இந்தக் காட்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இயேசுவானவர் இதற்கு முந்தைய அதிகாரத்தில், கடைசி வசனத்தில், “இங்கே நிற்கிறவர்களில் சிலர்...'' நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? ”இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம் முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.'' அது சரிதானே? பழைய ஏற்பாட்டில், எந்தவொரு காரியமும், வார்த்தையும், மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத் தப்படும் என்று சொல்லப்பட்டதற்கேற்ப, இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சாட்சிகளையும் மலையின் மேல் கூட்டிக் கொண்டு போனார். 124முதலாவதாக என்ன வருகிறது என்று பாருங்கள். ஓ, என்னால் இங்கு நிறுத்த முடியவில்லையே, இதைப் பெற்றுக் கொண்டாக வேண்டும். பாருங்கள்! அவர்கள் கண்ட முதல் காரியம் என்ன? அவர் அவர்களை மலையின் மேல் அழைத்துக் கொண்டு போனார், அவர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமானார். சூரியன் தன் வல்லமையோடு பிரகாசிக்கையில் இருக்கும் பிரகாசத்திற்கொப்பாக அவரது வஸ்திரம் பிரகாசித்தது. மோசேயும் எலியாவும் அவருக்கு முன்பாக தோன்றினர். இப்பொழுது மனுஷகுமாரன் எந்த ரூபத்தில் வந்து கொண்டிருக் கிறார்? முதலில் தோன்றுபவர்கள், மோசேயும், எலியாவுமாகும். இப்பொழுது கவனியுங்கள். இயேசு பூமிக்கு திரும்பி வருவதற்கு முன்னர், அந்த வேளைக்கு முன்பாக, எலியாவின் ஆவி பூமிக்குத் திரும்பி வந்து, பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களின் இருதயத்திற்கு திருப்பும். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. இயேசு அவரைப் பார்த்தார், அப்போஸ்தலர்களும் அவரை இங்கே பார்த்தார்கள். அதுவே மகிமைப்படுத்தப்பட்ட மனுஷ குமாரன் வருகையின்போது உள்ள நிகழ்வுகளின் ஒழுங்காகும். அவர் மகிமைப்படுத்தப்பட்டு திரும்பி வருவார். அவரைப் பார்ப்பதற்கு முன்பாக அவர்கள் கண்டது என்ன? எலியாவைக் கண்டார்கள். அதன் பிறகு என்ன? மோசே வருகிறான். அங்கே நியாயப் பிரமாணத்தை கைக் கொள்ளுகிற இஸ்ரவேலானது திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு மகிமைப்படுத் தப்பட்ட மனுஷகுமாரன் வருகிறார். அல்லேலூயா! அவருடைய வருகையின் போது நடக்க வேண்டிய காரியங்களின் ஒழுங்கைப் பார்த்தீர்களா? எலியாவின் ஆவி அல்லது கடைசி சபைக் காலத்தினுடைய சாட்சி, பாருங்கள், அவரை பிரத்தியட்சப்படுத்த வல்லமையோடு வருகிறார். 125அதன் பிறகு சீனாய் மலையின் மேல் அந்த இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் கூடி வருகிறார்கள். அங்கே இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆகிவிட்டது. உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஜாதியினர் அவர்கள்; உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த கொடியையுடையவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கென சொந்த தேசம், சொந்தக் கொடி, சொந்த இராணுவம், சொந்த நாணயம், மற்றும் யாவும் அவர்களுக்கென உண்டாயிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சபையில் அவர்களுடைய நாடும் ஒரு உறுப்பினராகி விட்டது. ஏனெனில் அவர்களும் ஒரு தேசமாகிவிட்டனர். இவையாவும் நிறைவேறும் வரையிலும் இந்த இஸ்ரவேல் என்னும் ஜாதியினர் ஒழிந்து போவதில்லையென்று இயேசு கூறியிருக்கிறாரே. 126புறக்கணிப்பின் காலங்களிலே எவ்வாறு புதிய ஏற்பாட்டுச் சபையானது இக்காலங்கள் தோறும் இருந்து வந்துள்ளதோ, அதே நிலையில் காணப்பட்ட இந்த யூதர்களும் எங்கு சென்றாலும் துன்புறுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, துரத்திவிடப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டு இருந்த நிலையைப் பார்க்கையில் அவர்கள் இன்னும் இருப்பது ஒரு இரகசிய மானதாகக் காணப்படுகிறது. இவ்வாறு இருந்த போதிலும், இயேசு கூறினார், ''அத்தி மரமானது துளிர்விடுவதை நீங்கள் காண்கையில், அந்த ஜாதியினர் மீண்டும் ஒரு தேசமாக மலரும்படி தங்கள் சுயதேசத்திற்கு திரும்பி வருவதை நீங்கள் காண்கையில் நேரமானது வாசல் வரைக்கும் நெருங்கிவிட்டது'' என்று. 'இவையெல்லாம் நிறை வேறும் வரைக்கிலும், இந்த சந்ததி ஒழிந்து போவதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று இயேசு கூறினார். இந்த ஜனங்கள் ஒழிந்து போகமாட்டார்கள். ஹிட்லர் அவர்களை ஒழித்துக் கட்ட முயற்சித்தான், முஸோலினி இவர்களை கருவறுக்க முயற்சித் தான். ஸ்டாலின் இவர்களை சர்வ நாசம் செய்ய முயற்சித்தான். மற்றும் பலரும் முயன்றனர். ஆனால் இவர்கள் ஒழித்துக்கட்டப்பட முடியாதவர்கள், தேசமாக மலர்ந்திடுவார்கள். ஆமென்! மோசேயும் எலியாவும் வருவார்கள். அதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என நம்புகிறேன். 127''வல்லமையாய்ப் பிரகாசிக்கும் சூரியன்''. அவ்வாறு அவரது முகரூபம் மறுரூபமாகியது. வெளிப்படுத்தின விசேஷம் 21:23 - விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். வெளி.21:23ல் , புதிய ஏருசலேமில், நகரத்தில், அவர் ஆட்டுக்குட்டியானவராக இருப்பார், அதின் வெளிச்சமும் அவரே, எனவே அவர்களுக்கு நகரத்தில் ஒளியேற்ற வேறு எந்த வெளிச்சமும் தேவையில்லை, சூரியனும் அவர்களுக்கு பிரகாசிக்க வேண்டியதில்லை; ஏனெனில் நகரத்தின் மத்தியில் இருக்கும் ஆட்டுக்குட்டியானவரே நகரத்திற்கு வெளிச்சமாயிருப்பார். இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் ஆட்டுக்குட்டி யானவரின் வெளிச்சத்தில் நடப்பார்கள்! ஆமென்! அவரே ஒளி யாயிருக்கிறார். அதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைய வில்லையா? அது மாத்திரமல்ல, அவருடைய வருகையிலே (யோவான் அவரை கர்த்தருடைய நாளில் கண்டான்) அவர் நீதியின் சூரியனாகவும் இருப்பார். மல்கியா புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் புத்தகம் 4ம் அதிகாரம். 128அங்கே பின்னால் அமர்ந்திருக்கிற என்னுடைய அருமையான மனைவியைக் குறித்து கூற என்னிடம் ஒரு சிறு கதை உண்டு. நாங்கள் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் அவளுக்கு ஒரு கடினமான சூழ்நிலையைக் கொடுத்தேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்குப் பின்பு, அவள் அதை மறந்து விடச் செய்ய நான் முயன்றிருக்கிறேன். நான் மீண்டும் திருமணம் (சகோ.பிரான்ஹாம் அவர்களின் முதல் மனைவி இறந்த பின்னர்மொழி பெயர்ப்பாளர்) செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. அதனால் அவள் மனமுடைந்து போனாள். அவள் மிகவும் நல்லவளா யிருந் தாள், அவளை ஏதாவது ஒரு நல்ல மனிதன் மணந்து கொள்ளட் டுமே, அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்வான் என்றெண் ணினேன். நான் அவளை விவாகம் செய்து கொள்ளத் தகுதியுள்ள வனல்ல, அவளைப் போல் தயவு உள்ளவன் அல்ல நான் என்று எண்ணினேன். இதையறிந்த அவள் மிகவும் மனமுடைந்து போனாள், என்ன செய்வது என்றறியாது இருந்தாள். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பாக, நடந்த சம்பவம். அவள் இதனால் மனம் நொறுங்கி, இரவும் பகலும் கதறிக் கொண்டிருந்தாள். நான் அவளை விவாகம் செய்து கொள்ளாமல் அவளை விட்டுப் பிரிந்து செல்ல முயன்றேன். நான் அவளை நேசிக்கவில்லையென்பதினால் இவ்வாறு செய்யவில்லை; ஆனால் நான் அவளது சமயத்தை வீணாக்க விரும்பவில்லை, ஏனெனில் அவள் மிகவும் நல்ல பெண்ணாக இருந்தபடியினால், அவளே என்னைவிட ஒரு நல்ல மனிதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் எண்ணினேன். அவள் என்னை நேசித்தாள் என்று நான் அறிந்திருந்தேன். அப்பொழுது நான், ''நல்லது, இவள் என்னைக் குறித்து வெறுப்பாக எண்ணும்படி, அவளுக்கு முன்பாக இன்னொரு பெண்ணை அழைத்துக் கொண்டு செல்வேன்'' என்றெண்ணினேன். இவ்வாறு செய்வதினால் அவளை நான் கிட்டத்தட்ட கொன்ற வனைப் போல் ஆகிவிட்டேன். இதைப் பற்றி நான் பின்னால் எண்ணிப் பார்க்கையில், என்னைப் பற்றி நானே அருவருப்பாக உணர்ந்து கொண்டேன். அவள் மிகவும் மனமுடைந்து போனாள். நான் அவளிடம், ''நீ மிகவும் நல்லவள், நான் உன்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை'' என்று கூறினேன். அதற்கு அவள், “பில், நான் உம்மை நேசிக்கிறேன், நான் நேசிக்கத்தக்க தெல்லாம் நீர் ஒருவர்தான், நான் எப்பொழுதும் உம்மையே நேசித்திருக்கிறேன்'' என்று கூறினான். “நான் அதை மெச்சுகிறேன்; ஆனால், நானோ ஒரு துறவி, ஒரு துறவியாகவே வாழ்ந்து விடப் போகிறேன், இனி நான் விவாகமே செய்து கொள்ளப் போவதில்லை'' என்று பதிலளித் தேன். 129ஆனால் சிறுமைப்பட்ட அந்த எளிய பெண்ணோ இந்தக் காரியத்தில் பிடிவாதமாக இருந்தாள். அவள் வெளியே சென்று அங்கிருந்த கொட்டகையினுள் முழங்கால்படியிட்டு, “கர்த்தாவே, என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் உமக்கு கீழ்ப்படியாமற்போக விரும்பவில்லை; ஆயினும் நான் பில்-ஐ நேசிக்கிறேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆண்டவரே, ஒரு சிறு ஆறுதல் எனக்கு அளிப்பீரா? ஒரு சிறிதளவு உதவி எனக்குச் செய்வீரா? என் வாழ்க்கையில் இதற்கு முன்பு இவ்வாறு இதைக் குறித்து உம்மிடம் கேட்டதில்லை. மீண்டும் இதைக் குறித்து நான் உம்மிடம் கேட்கத் தேவையும் இருக்காது என்று நான் நம்புகிறேன், கர்த்தாவே நீர் எனக்கு உதவி செய்வீரானால், அப்பொழுது நான் இந்த வேதாகமத்தை திறக்கையில், ஒரு வேதவாக்கியத்தை எனக்குத் தாரும், அவ்வாறு நீர் ஜனங்களுக்கு தந்ததைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக் கிறேன்'' என்று ஜெபித்திருக்கிறாள். அவ்வாறு ஜெபித்துவிட்டு அவள் வேதாகமத்தை திறக்கையில் அவளுக்கு மல்கியா 4ம் அதிகாரம் கிடைத்தது. “... கர்த்தருடைய பயங்கரமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களுக்கு கொடுப்பேன்... அல்லது நான் உங்களிடத் திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்...'' “நான் அங்கிருந்து ஜெபித்து விட்டு, நிச்சயமாக நாம் விவாகம் செய்து கொள்ளப் போகிறோம் என்று உறுதியான திருப்தியோடு எழுந்தேன்'' என்று என்னிடம் கூறினாள். பார்த்தீர்களா? “இதோ சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பா யிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்...'' மல்.4:1-2 130“சூரியன் தன் வல்லமையில் பிரகாசித்தல்'' ஓ! தேவ குமாரனின் வல்லமை இன்று நம் மத்தியில் இவ்விரவில் பிர காசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய ஏழுவிதமான ரூபங்களுடன், நியாயாதிபதியாக, ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். நமக்காக பாடுபட்டு மரித்தவராக, தெய்வீக நியாயத்தீர்ப்பை தன் மேல் எடுத்துக் கொண்டவராய், தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை அவரே மிதித்தவராயிருக்கிறார். வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில், பாவிக்கும், உறுதியில்லாத ஆத்துமாவுக்கும், அவர் நாசத்தை உண்டாக்கும் அதிபயங்கர ஜலப்பிரள மாயிருக்கிறார். ஆனால் தன் சபைக்கோ , அவர் ஒரு இனிமையான இரட்சகரா யிருக்கிறார். அவரது சபையானது கிறிஸ்துவுக்குள்ளாக நங்கூர மிடப்பட்டு, கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதும் பரிபூரண மான திருப்தியுடன் இளைப்பாறிக் கொண்டு, சலசலவென அசைந் தோடும் அமைதியான மெல்லிய நீரோடைகளின் இனிய ஓசையைக் கேட்டு கொண்டிருப்பவளாக இருக்கிறது. என்னே ஒருவேளை! அவர் தன்னுடைய இன்பமான கதிர்களினால் நம் மேல் பிரகாசித்து, ”பயப்படாதே, நான் இருந்தவரும், இருப் பவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ளவர், என்னையன்றி வேறே தேவர்கள் இல்லை, நான் அல்பாவும் ஓமெகாவுமா யிருக்கிறேன், தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற் றிலிருந்து இலவசமாக குடிக்கக் கொடுப்பேன்'' என்று கூறுகிறார். என்னே அற்புதமானதொரு வாக்குத்தத்தம் இது! என்னே ஒரு அருமையான தேசத்தின் காரியம் இது! ஆட்டுக்குட்டியானவர் நகரத்தின் மத்தியில் இருப்பதால், நகரத்திற்கு வேறு வெளிச்சம் தேவை யில்லை, அவரே நீதியின் சூரியனாக இருக்கிறார், அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். பள்ளத்தாக்கின் லீலி அவர்; பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் அவர் அவர் எனது ஆத்துமாவுக்கு பதினாயிரம் பேரிலும் அழகிற் சிறந்தவர் என் துக்கத்தில் ஆறுதலும் அவரே என் துன்பத்தில் ஆதரவும் அவரே என் கவலையெல்லாம் தன் மேல் போடு என்கிறார், அல்லேலூயா! அவரே பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசமுள்ளவிடிவெள்ளி நட்சத்திரமும் அவரே என் ஆத்துமாவுக்கு அவர் பதினாயிரம் பேரிலும் அழகிற் சிறந்தவர் 131ஆம், ஐயா! ஓ, அந்த மகத்தான விடிவெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கும்படி புறப்பட்டு வருகையில், வரப்போகும் பகற் காலத்தை முன்னறிவிக்கையில், ''பகற்காலமானது விடியப் போகிறது, குமாரன் (அல்லது நீதியின் சூரியன்) நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்'' என்று அறிவிக்கிறார். அவர் வருகையில், மற்றெல்லா நட்சத்திரங்களையெல்லாம் ஒளிவிடுவதில் தன் பின்னுக்குத் தள்ளி, மற்ற யாவையும் விட தானே மிஞ்சி பிரகாசிக் கிறவராயிருக்கிறார். அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக் கியம் உண்டாயிருக்கும். நம்முடைய செய்திக்கு திரும்புவோம். நாளை இரவுக் கூட்டத்திற்கு ஆயத்தப்படும்படி, நாம் இப்பொழுது முடிக்கி றோம், ஏனெனில் இப்பொழுது நேரமானது இரவு ஒன்பது மணியாக இன்னும் 15 நிமிடங்களே உள்ளன. எவரையும் அதிக நேரம் இங்கு காத்திருக்க வைக்க நாம் விரும்பவில்லை. 132நீதியின் சூரியனானவர் தன் செட்டைகளின் கீழ் ஆரோக் கியத்துடன் இருக்கிறார். இப்பொழுது அவரது முக ரூபத்தைப் பற்றி பார்ப்போம். அவர் ஒரு நியாயாதிபதியாகத் தோற்ற மளிக்கிறார். அதாவது, யோவான் வரப்போகும் கர்த்தருடைய நாளுக்குள் கொண்டு செல்லப்பட்டான் என்பதை அவனுக்குக் காண்பிக்க இத்தோற்றம் உள்ளது. அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? யோவான் கர்த்தருடைய நாளுக்குள் சென்று, அங்கே கர்த்தரை, ஒரு ஆசாரியனாக அல்ல, ராஜாவாக அல்ல, ஒரு நியாயாதிபதியாகத் தான் கண்டான். அவர் நியாயாதிபதியாக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? வேதம், அவர் நியாயாதிபதியாக இருக்கிறார் என்று கூறுகிறது. இங்கே அவர் முழுவதும் நியாயாதிபதியின் தோற்றத்திற்கேற்றவாறு உடுத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர், தான் என்ன செய்தார் என்பதையும், அவர் எவ்வாறாக இருந்தார் என்பதையும், பாவிக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும், கிறிஸ்த வனுக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதையும் எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இங்கே அவர், பெரு வெள்ளத்து இரைச்சலைப் போல் சத்தமுடையவராய், வல்லமை யோடே பிரகாசிக்கும் சூரியனைப் போன்ற முகத்தையுடைய வராயும் நின்று கொண்டிருக்கிறார். 133யோவான் இக்காட்சியை கண்டதினால் ஏற்பட்ட விளைவை இப்பொழுது பார்ப்போம். 16ம் வசனம், இல்லை, மன்னிக்கவும் 17ம் வசனம். “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல் அவருடைய பாதத்தில் விழுந்தேன்...” தீர்க்கதரிசியினால் அவ்விதமான தரிசனத்தைக் கண்டு நிற்க முடியவில்லை. அவன் பெலமிழந்தவனாக அவரது பாதத்தில் செத்தவனைப் போல் விழுந்தான். இப்பொழுது கவனியுங்கள். “... அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான் முந்தினவரும்; பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். ஓ, என்னே ! ஒரு தீர்க்கதரிசியல்ல, அவர் தேவன். “நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தலின் ஆதியாக நான் இருக்கிறேன். வெளிப்படுத்தலின் முடிவாகவும் நானே இருக்கிறேன். இருந்தவரும், இருப்பவரும், வருகிறவரு மாய் இருக்கிறேன்''. இப்பொழுது பார்ப்போம். “... அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி; பயப்படாதே, நான் முந்தினவரும்; பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக் கிறேன், (இப்பொழுதும்) (அதன்பிறகு அவர் சப்தமிடுகிறார்) ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத் திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். 134நீங்கள் கலக்கமடைய வேண்டாம். நாம் ஏன் அஞ்ச வேண்டும்? சபையானது ஏன் அவருடைய வார்த்தையைக் குறித்து சிந்திக்கவும், அதைக் கைக்கொள்ளவும் தவறிப் போகிறது? நாம் முடிக்கப் போகிறோம், எனவே சற்று நிறுத்தி இதை கவனிப் போம். ஏன் இந்த சபையானது பயப்படப் போகிறது? அவர் வாக்குரைத்த எதை அவர் நிறைவேற்றாதிருந்தார்? நீங்கள் ஏன் ஒரு தண்டனையைக் குறித்தோ, அல்லது இந்த ஜீவனுக்குப் பின்னால் வரப்போகும் காரியத்தைக் குறித்தோ அஞ்ச வேண்டும்? ''பயப்படாதே! நான் இருந்தவரும், இருப்பவரும், வரப்போகிற வருமாயிருக்கிறேன். நான் முந்தினவரும், பிந்தினவருமாயிருக் கிறேன். நான் இப்பொழுது இங்கேயே மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்'' என்று கூறுகிறார். ஏன்? “மரணம், பாதாளம் இவற்றை நான் மேற் கொண்டு, அதின்மேல் ஜெயங்கொண்டுமிருக்கிறேன் (இது கல்லறை மற்றும் பாதாளத்தையுமே குறிக்கும். மரணம் என்பது பாதாளமே). உங்களுக்காக. அவை யாவையும் நான் ஜெயித் தேன். நான் கல்லறை, மரணம், பாதாளம் இவைகளை ஜெயித் தேன்'' என்று கூறுகிறார். அவர் பூமியில் இருக்கையில், அவர் மட்டுமே ஜெயங் கொண்டவராயிருந்தார். 135அநேக மனிதர்கள் ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட் டார்கள். நீங்கள் அதை அறிவீர்களா? நெப்போலியன் தன் 33ம் வயதில் உலகத்தை ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டான். அவன் தன் 17வது வயது முதல் 25 வயது முடிய மது அருந்துவது மற்றும் அது போன்ற ஏனைய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக் காதவனாக இருந்து வந்தான். அவன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றான். (நெப்போலியன் ஒரு அசல் பிரெஞ்சுக்காரன் அல்ல, அவன் ஒரு தீவிலிருந்து வந்தவன். அவனுக்கு பிரான்ஸை பிடிக்காது. ஆயினும், பிரான்ஸை வெல்லவே அவன் அங்கு சென்றான். அவன் பிரான்ஸை வென்றான், பின்பு பிரெஞ்சுக் காரர்களைக் கொண்டு உலகத்தை வென்றான்.) அவனது 33ம் வயதில், அவன் உட்கார்ந்து, இனிமேல் ஜெயிப்பதற்கு உலகில் ஒன்றுமே இல்லையே என்று வேதனைப்பட்டான். ஆனால் அவன் குடியை வெல்ல முடியாதவனாக, ஒரு குடிகாரனாகவே மரித்தான். தோல்வியடைந்தவனாக அவன் இருந்தான். அவன் தன்னையே ஜெயிக்க முடியாதவனாக ஆகிவிட்டான். அவன் தனது 'வாட்டர் லூவை' வாட்டர்லூவில் எதிர்கொண்டான். (அவன் தனது வாட்டர்லூ என்று இங்கு குறிப்பிடக் காரணம், வாட்டர்லூ என்ற மத்திய பெல்ஜியத்தில் உள்ள ஒரு நகரத்தில் தான் நெப்போலியன் அவனுக்கெதிராக சண்டையிட்ட நேசநாடுகளிடம் தோற்றுப் போனான். எனவே வாட்டர்லூ சண்டை நெப்போலியனுக்கு தோல்வியைத் தந்தபடியால், வழக்கில், 'ஒருவரது வாட்டர்லூ' என்று குறிப்பிடுவது ஒருவன் அடைந்த மோசமான தோல்வியை எடுத்துக் காட்ட உபயோகிக்கப்படுகிறது - மொழி பெயர்ப்பாளர்). நெப்போலியன் வாட்டர்லூவில் தனது முடிவை அடைந்தான். நான் அங்கே சென்றிருக்கிறேன், அந்த பண்டைக்காலத்து அடை யாளங்களையும், ஞாபகச் சின்னங்களையும், அத்தேசத்திற்கு சென்ற போது கண்டேன். நாம் இந்த ஜெயிக்கிறவனை எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு இளைஞனாக இருக்கையில், ஜெயிப்ப தற்கு தவறானதொன்றை தெரிந்து கொண்டான், அவன் அவமானகரமாக மரித்தான். 136ஆனால் ஓர் காலத்தில் உலகில் தோன்றிய, இன்னொரு இளைஞர், தனது 33ம் வயதில் மரணமடைந்து, ஜெயிக்கப்பட வேண்டியவைகளையெல்லாம் ஜெயித்தார். அவர் இவ்வுலகில் இருக்கையில், ஆசை இச்சைகளையும், கர்வத்தையும் வியாதிகளை யும் ஜெயித்தார். அவர் பிசாசுகளை ஜெயித்தார். அவர் மரித்த போது, மரணத்தை ஜெயித்தார். அவர் உயிர்த்தெழுந்த போது, பாதாளத்தையும் ஜெயித்தார். அவர் உள்ளே போய், மனுக் குலத்திற்கெதிராக நின்ற அனைத்தையும் ஜெயித்து, தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதித்து, மரணத்தை ஜெயித்து, பாதாளம், கல்லறை, வியாதிகள், சடங்காச்சாரங்கள் மற்றும் அனைத்தையும் ஜெயித்தார். இவ்வாறு அவர் இவை யாவையும் மேற்கொண்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே தடையாக நின்ற பனி மூட்டத்தை நீக்கி, பூமியையும் பரலோகத்தையும் ஒருசேர இணைத்தார். மகிமை! ஓ, என்னே ! வ்யூ! அங்கே அவர், தேவாலயத்து திரைச்சீலையை இரண்டாக கிழித்தது முதற்கொண்டு அதோ அவர் வல்லமையான ஜெய வீரராக நிற்கிறார். “மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவு கோல்கள் என் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்றன, பயப்படாதே'' என்று கூறினார். அவர் அவன்மேல் தனது வலது கரத்தை வைத்து (வலது கரம் என்பது அவரது வல்லமையைக் குறிக்கும்) தனது வலது கரத்தின் வல்லமையினால் அவனை எழுப்பி, அவனிடம், ”பயப்படாதே, இருந்தவரும், இருப்ப வரும், வருகிறவருமாகியவர் நானே; நான் முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும் இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்'' என்று கூறினார். இதோ! இந்த ஜெயவீரரைப் பாரீர், இதோ! அவரை தெளிவாகப் பாரீர், அவர் உள்திரையை இருகூறாய் கிழித்தது முதற்கொண்டு, ஜெயவீரராய் அங்கே நிற்கிறார். 137ஆமென்! ஏதேன் தோட்டத்திலிருந்தது போல, மனிதன் தேவனுடன் இணைக்கப்படும்படி, மனுகுலத்திற்கு இருந்த தடைக் கல்லை யெல்லாம் அவர் தகர்த்தெறிந்தார். இப்பொழுது மனிதனானவன்... நான் இப்பொழுது சொல்லப் போவதைக் குறித்து உணர்ச்சிவயப்பட்டதினால், சொல்ல முடியாமல் தடைப் பட்டேன், ஆயினும் நான் அதைப் பற்றி சொல்லிவிடப் போகிறேன். என்னவெனில்; மனிதன் சர்வ வல்லமை படைத் தவன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை, ஆயினும், மனிதன் அவ்வாறு தான் இருக்கிறான். தேவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப் பணித்துள்ள மனிதன், சர்வ வல்லமையுள்ளவனாக இருக்கிறான். மாற்கு சுவிசேஷம் 11:22-ல் இயேசு இவ்வாறு கூறவில்லையா? ''...தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடியே ஆகும்...'' சர்வ வல்லமையுள்ள இரு நபர்கள் சந்தித்தால் என்ன நடக்கிறது? சர்வ வல்லமையினாலே தேவனும் மனிதனும் ஒன்றுசேரும் போது, ஏதோ ஒன்று அசைவை உண்டாக்கத்தான் வேண்டும். சிருஷ்டிக்கும் வல்லமையுள்ள தேவனுடைய சர்வ வல்லமையைக் கொண்டு, நீங்கள் ஒன்றை உரைத்தால், அவர் அதை வாக்குரைத்திருக்கிறார் என்றும், அவருடைய வார்த்தையில் அதைக் குறித்து கூறியிருக்கிறார் என்றும் அறிந்திருக்கும்போது, அப்பொழுது அது வெளியே புறப்பட்டுச் செல்லுகிற ஒரு வல்லமையை சிருஷ்டிக்கிறது, அது உரைக்கப்பட்டவைகளை நிறைவேறும்படி செய்கிறது, இல்லாதவைகளை இருக்கிறவை களாக இருக்கும்படி செய்கிறது அவ்வல்லமை. ஏனெனில் இரு சர்வ வல்லமைகளும் சந்தித்திருக்கின்றன. அங்கே அவர் நிற்கிறார்! ஓ! அவர் அற்புதமானவராக இல்லையா? 138இன்னும் நல்ல விஷயங்கள் நமக்கு உள்ளனவா என்று பார்ப்போம். 18ம் வசனம். இப்பொழுது 19ம் வசனம். அவருடைய முகரூபத்தை யோவான் கண்டபோது என்ன நேரிட்டது? அதன் விளைவு என்ன? அவருடைய பாதத்தில் அவன் விழுந்தான்; அவருக்கு முன்பாக அவனால் நிற்க முடியவில்லை, அவனுடைய மானிட ஜீவனானது அந்த வல்லமைக்கு முன்பாக நிற்கமுடியாமல் வலுவிழந்து போனது. அவர் ஜெயமெடுத்தவாயிருந்தார். அவர் ஏற்கனவே ஜெயங் கொண்டுவிட்டார். இப்பொழுது ஒரு கட்டளையை அவர் கொடுக்கிறார், இந்த அதிகாரத்தை முடிப்பதற்காக 19ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது“. நாம் ஏற்கனவே 20ம் வசனத்தைப் படித்தோம் : “என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத் தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இகரசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாம்” 139ஓ! நண்பரே, இக்காட்சி நம்மை மிகவும் சிலிர்க்கச் செய்கிறது. அவர் அங்கே தனது தெய்வீக மேன்மையான வல்லமையோடு திகழ்கிறார். அவரே நியாயாதிபதி, ஆசாரியன், இராஜா, கழுகு, ஆட்டுக்குட்டி, சிங்கம், அல்ஃபா, ஒமெகா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அவர் இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர். தேவனுடைய உக்கிரகோபமாகிய மது வுள்ள ஆலையை அவர் மிதித்தார், தேவனை எல்லாவற்றிலும் பிரியப்படுத்தினார். சிலுவையில் தேவன் அவ்வாறு கூறுகிற வரையிலும்... அவரை எழுப்பியபோது, “முடிந்தது'' என்று கூறினார். அவர் தேவனைப் பிரியப்படுத்தியதால், அவரை விட்டுப் போன ஆவி உயிர்த்தெழுதல் காலையில் அவரிடம் திரும்பி வந்தது. நாம் நீதியை அடையும்படி, அவரை தேவன் மீண்டும் உயிர்த்தெழும்படி செய்தார். அங்கே யோவான் அவரை உற்று நோக்கி, அவர் அங்கே பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுடனும், அக்கினி ஜுவாலையைப் போலுள்ள, பூமியெங்கும் உலாவும் கண்களை யுடையவராயும் நின்று கொண்டிருக்கக் கண்டான். யோவான் இக்காட்சியைக் கண்டதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக, தானியேல் தீர்க்கதரிசி அதேவிதமான மனிதனைக் கண்டான். யோவான் பார்த்தவிதமாகவே அவனும் அவரை அதே நிலையில், அதே மாதிரியில் அங்கே நின்று கொண்டிருக்கக் கண்டான். நீண்ட ஆயுசுள்ளவரையும், மனுஷகுமாரனுடைய சாயலுக்கொப்பான வரையும், இவர் அவரோடு சேர்ந்துவிடுவதையும், இவரிடம் நியாயத் தீர்ப்பு அதிகாரம் முழுவதும் கையளிக்கப்படுவதையும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் நிற்பதையும் கண்டான். 140சிநேகிதரே! இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் பார்த்த பிறகு, என்னவிதமான மக்களாக நாம் இருந்தாக வேண்டும்! தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்பதே என்னுடைய வேண்டுதலாகும். பார்த்தீர்களா? நீங்கள் அவரை நேசிக் கிறீர்களா? அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரில் உங் களது ஆத்துமாவை நங்கூரமிட்டுள்ளீர்களா? நாம் மெதுவாக “இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டிருக்கிறேன், எனவே நான் இனி நாசகரமான கொந்தளிக்கும் கடலின் பேரிரைச்சலை கேட்க மாட் டேன். ஆனால் என் ஆத்துமாவுக்கு இனிய சமாதானத்தையே பேசுவேன்'' என்ற பாடலை பாடும்போது, மென்மையாகவும், நளினமாகவும் பியானோ இசைக்கட்டும். ஒவ்வொருவரும் மெது வாகவும் பயபக்தியோடும் பாடுவோம். இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டேன் இனி கொந்தளிக்கும் கடலில் நான் பயணம் செய்யேன் ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயற்காற்று வீசிடினும் இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டேன் இனி கொந்தளிக்கும் கடலில் நான் பயணம் செய்யேன் ஆழ்ந்த ஆழியில் கொந்தளிக்கும் கடலில் கடும் புயற்காற்று வீசிடினும் இயேசுவில் நான் எப்போதும் பத்திரமாயுள்ளேன். என் மேல் பிரகாசியும். (ஆண்டவரே! மகிமையின் கதிர்கள்) ஆண்டவரே! என் மேல் பிரகாசியும் கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என் மேல் பிரகாசிக்கட்டும் என் மேல் பிரகாசியும், ஆண்டவரே, என் மேல் பிரகாசியும் (அவருக்கு நேராக நம் கரங்களை உயர்த்துவோமாக) கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும் இயேசுவைப் போல் ஆகிட (ஆம், கர்த்தாவே!) இயேசுவைப் போல் ஆகிட, பூமியில் நான் அவரைப் போல் ஆக வேண்டும்; புவி முதல் மகிமை வரையுள்ள என் வாழ்க்கைப் பயணத்தில் நான் அவரைப் போல் ஆகிடவேண்டும் என்று மட்டுமே வேண்டுகிறேன். (சகோ.பிரன்ஹாம் பல்லவியை மௌனமாக இசைக்கிறார் ஆசி) புவியில் நான் அவரைப் போல் ஆகிட வாஞ்சிக்கிறேன் புவி முதல் மகிமை வரையுள்ள என் வாழ்க்கைப் பயணத்தில். 141அவருடைய ஜீவனானது உங்களில் ஜீவிக்கவும், அதினால் அவருடைய பிரசன்னத்தை பிரதிபலித்திடச் செய்யவும் நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் அவ்வாறு விரும்பினால், இதுவரை யிலும், அதை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்காவிடில், அதற்காக ஜெபிக்கும்படி ஜெபத்திற்காக எழுந்து நிற்பீர்களா? ஜெபத்தில் நினைக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் நிற்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெத்லகேமின் முன்னணையிலிருந்து... (இப்பொழுது நின்று கொண்டேயிருங்கள்) நாம் அறியாதவர் ஒருவர் வந்தார் (நீங்களும் உலகுக்கு அவ்வாறே ஆகிவிடுவீர்கள்) பூமியில் நான் அவரைப் போல் ஆகிடவே வாஞ்சிக்கிறேன் புவி முதல் மகிமை பரியந்தமும் உள்ள எனது வாழ்வின் பயணத்தில் நான் அவரைப் போல ஆகிடவே வேண்டுகிறேன் இயேசுவைப் போல் ஆகிட, இயேசுவைப் போல் ஆகிட (அதுவே எனது வாஞ்சை) பூமியில் நான் அவரைப் போல் ஆகிட வாஞ்சிக்கிறேன். புவி முதல் மகிமை வரையுள்ள வாழ்க்கைப் பயணம் முழுவதும் நான் அவரைப் போல் ஆகிடவே வேண்டுகிறேன். (சகோ. பிரன்ஹாம் பாடலின் பல்லவியை மௌனமாக இசைக்கிறார் - ஆசி) எளிமையும், மனத்தாழ்மையுமாக. 142இப்பொழுது, பரம பிதாவே! உம்மை ஏற்றுக் கொள்ள விரும்பி அநேகர் நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாழ்வின் அலைகடலில் தாங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல், இதில் அலைந்து திரிவதினால் அவர்கள் களைப்படைந்து போயிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில், பகலொளி தோன்றுமுன்னர் இருதயமானது துடிக்காமல் நின்று விடக்கூடும், அப்பொழுது இந்த அலைந்து திரிகிற ஆத்துமா வானது, முடிவில் தண்ணீர்கள் போய் விழுகிற பேரிரைச்சலோடு கூடிய அழிவின் நீர்வீழ்ச்சியிலே போய் மாண்டு விடுமே என்பதை அவர்கள் அறிவர், அவர்கள் அவர்களைப் போலவே இருந்து வந்துள்ளார்கள். உலகத்தைப் போலவே இருந்து வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தாவே, அவர்கள் உம்மைப் போலவே ஆகிட வாஞ்சிக்கிறார்கள். உம்முடைய இராஜ்யத்தில் அவர்களை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் உம்முடையவராயிருக் கிறார்களே, பிதாவே. ஏனெனில், அவர்கள் இருதயத்தின் எண்ணங்களையும், யோசனைகளையும் நீர் அறிந்திருக்கிறீரே. நீர் அவ்வாறு எழுதிவைத்திருக்கிறீர், உம்முடைய உதடுகளாலேயே நீர் இவ்வாறு கூறியிருக்கிறீர்; ''என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' ''இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், இதைக் கேட்கிறவனும் பாக்கியவான், காலம் சமீபமாயிருக்கிறது'' என்றும் கூட நீர் கூறியிருக்கிறீர். அவர்கள் காலம் சமீபமாயிருக் கிறது என்பதை உணர்ந் திருக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் அலைந்து திரிய முடியாது, கர்த்தாவே. ஜீவக் கயிற்றை அவர் களிடமாக தூக்கியெறிந்து அவர்களை உம்மிடமாக இழுத்துக் கொள்ளும், கர்த்தாவே! இயேசு கிறிஸ்துவினுடைய ஒளியை பிரதிபலித்துக் கொண்டு அவர்கள் இன்றிரவில் இங்கிருந்து செல்லட்டும். பிதாவாகிய தேவனே! நான் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உம்மிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் இங்கே சபையில், ஞானஸ் நானத்தில், கர்த்தரை தாழ்மையுடன் பின்செல்லட்டும். மீதமுள்ள அவர்களுடைய ஜீவிய கால மெல்லாம் இயேசுவைப் போல் இருக்கும்படி, அவர்களுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியை அவர்களுக்கு அருளும். அவருடைய நாமத்தினால் அதை நாங்கள் கேட்கிறோம். இயேசுவைப் போல் ஆகிட... 143ஒப்புக் கொடுத்த ஆத்துமாக்களின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய உங்களில் சிலர், அவர் களிடம் நெருங்கி, அவர்களுடைய கரத்தைப்பிடித்து, கை குலுக் குங்கள். அவர்கள்மேல் உங்கள் கைகளை வைத்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக தேவனை துதியுங்கள். நம்முடைய பீடங்கள் இங்கே குழந்தைகளால் நிறைந்துள்ளது, அவர்களை நாம் இங்கே கொண்டு வர முடியாது. புவி முதல் மகிமை வரையுள்ள வாழ்வின் பயணம் முழுவதிலும் நாம் அவரைப் போல் ஆகிடவே வேண்டுகிறேன். என் மேல் பிரகாசியும், என் மேல் பிரகாசியும் கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என் மேல் பிரகாசிக்கட்டும் என் மேல் பிரகாசியும், என் மேல் பிரகாசியும் ஆண்டவரே, கலங்கரை விளக்கத்தினின்றும் ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும். உங்களுக்கு நல்லுணர்வு தோன்றுகிறதா? உங்களுக்கு நல் லுணர்வு தோன்றுகிறதல்லவா? கிறிஸ்தவனாக இருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நாம் இப்பொழுது ஒரு பாடலை பாடப் போகையில், உங்கள் அருகில் அமர்ந்திருக்கிறவ ரோடு கைகுலுக்குங்கள். ''ஒளியில் நடப்போம், அழகான ஒளியது, அது மாம்சத்தில் தோன்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியாகும்'' என்ற பாடல். ஒளியிலே நடப்போம், அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளிலும் வாரீர், இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். 144யாவரும் பாடுங்கள்: ஒளியிலே நடப்போம், அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளிலும் வாரீர், இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். இயேசுவே உலகின் ஒளியென ஒளியின் பரிசுத்தரே பிரசித்தம் செய்வீர் அப்பொழுது பரலோகத்தின் மணியோசை இயேசு உலகின் ஒளியாயிருக்கிறார் என்று ஒலித்திடுமே. இப்பொழுது உங்களது கரத்தை உயர்த்துங்கள் ஒளியிலே நடப்போம், அவ்வளவு அழகான ஒளியது, பிரகாசமாயுள்ள இரக்கத்தின் பனித்துளிகளிலும் வாரீர், இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நாம் தொடர்ந்து இவ்வொளியில் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது, இது இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, இயேசு, அவரே உலகின் ஒளியாயிருக்கிறார். இவ்வொளியில் நாம் நடப்போம் (சுவிசேஷ ஒளி) அது அழகான ஒளியாம்! இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திற்கு அது வருகிறது, அது இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிறது, இயேசு, அவரே உலகின் ஒளியாயிருக்கிறார். 145ஆதியில் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானது சபையின் மேல் விழுந்த முதற்கொண்டு, செய்தியானது தொடர்ந்து, அடுத்து வந்த சபைக்காலமாகிய சிமிர்னாவுக்குள்ளும் வந்தது. அங்கே ஐரேனியஸ் நின்றார். அவர் தேவனுடைய மகத்தான பரிசுத்தவான் ஆவார். அவர் அந்நிய பாஷையில் பேசி, தேவனுடைய வல்லமையால், மரித்தோரை உயிரோடெழுப்பி, பிணியாளிகளை சொஸ்தமாக்கினார். அவர் ஒளியிலே நடந்து கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு, மகத்தான வல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்தவானாகிய கொலம்பா வந்தார். அதன் பின்பு வந்த ஏனைய மகத்தான பரிசுத்தர்கள் யாவரும், தொடர்ந்து செய்தியையுடையவர்களாயிருந்து, சுவிசேஷ ஒளியிலே நடந்து வந்தார்கள். அவ்வொளியானது பெந்தெகொஸ்தே நாளில் பிரகாசித்த அதே ஒளிதான். கிறிஸ்துவானவர் தமது ஜனங்களின் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார், அந்த ஏழு குத்துவிளக்கு களும் நடுப்பகலில் உள்ள சூரியனைப் போல அவருடைய பிரகாசத் தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இங்கே நாம் 1962ம் ஆண்டில் இருக்கிறோம் : இவ்வொளியில் நாம் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாம், பனிபோல் பொழியும் இரக்கத்தின் வெளிச்சம் வருகிறது, இரவும் பகலும் எம்மைச் சுற்றிலும் பிரகாசியும், ஓ இயேசு, நீர் உலகத்தின் ஒளியாமே. நாம் எழுந்து நிற்போமாக. நாம் தொடர்ந்து இவ்வொளியில் நடப்போம், அது அவ்வளவு அழகான ஒளியாகும், பனிபோல் பொழியும் இரக்கத்தின் வெளிச்சம் அங்கிருந்து வருகிறது, இரவும் பகலும் எம்மைச் சுற்றிலும் அது பிரகாசிக்கிறது இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவரே என்னை முந்தி நேசித்து கல்வாரி சிலுவையில் என் இரட்சிப்பை கிரயத்திற்குக் கொண்டார். இனி ஒருபோதும் உலகத்தின் காரியங்களுக்குத் திரும்பக் கூடாது. உலகத்துக்கு நான் மரித்தவனாயிருக்கிறேன், உலகம் எனக்கு மரித்ததாயிருக்கிறது. பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு நான் கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே நடக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன், ஏனெனில், அவர் என்னை நேசித்து, அவரது ஆசீர்வாதங்களை என் மேல் பிரகாசிக்கச் செய்து, தனது இராஜ் யத்தில் எனது ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளு மாயிருக்கிறோம். முடிவில் நாம் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆயினும், அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருடைய சொந்த மகிமையின் சரீரத்தைப் போலவே ஒரு சரீரத்தையுடைய வர்களாக நாம் இருப்போம். அப்பொழுது நாம் ஒளியிலே நடந்து கொண்டிருப்போம் அது அழகான ஒளியாகும் பனிபோல் பொழியும் இரக்கம் பிரகாசமாயுள்ளது, அதிலிருந்து அது வருகிறது, எம்மைச் சுற்றிலும் அது இரவும் பகலும் பிரகாசிக்கிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியாயிருக்கிறார். 146நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? செய்தியளிக்கப்பட்டு, அது மக்களை உடைத்து நொறுக்கிய பிறகு, ஜனங்கள் பாடிக்கொண்டே, ஆவிக்குள் தொழுது கொண்டும், பாடிக் கொண்டும் இருக்கவே நான் விரும்புகிறேன். நல்ல பழமையான பாடுதலைப் போல் அழகானது வேறொன்றுமில்லை. அது சரிதான். பழமை வாய்ந்த பெந்தெகொஸ்தே அனுபவம் வாய்ந்த பாடல் பாடுவதை நான் நேசிக்கிறேன். மிகவும் நீண்ட பயிற்சியெடுத்து, நீளமாகப் பாடி, கீச்சிட்டுப் பாடி, அதினால் முகமெல்லாம் நீலமடைந்து, தாங்கள் பாடுவது என்னவென்றே தெரியாது பாடுகிறார்களே, அவ்விதமான பாடலை நான் விரும்பவில்லை. யாராவது ஒருவர் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு, ஒருவேளை சரியான இனிமையான இராகமில்லாவிடினும், பரவாயில்லை, ஆனால் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தோடு பாடுவதை நான் விரும்பு கிறேன். சிலுவையைப் பற்றிய அவ்வினிமையான பாடல்கள் எத்தனை மகிமையாயிருக்கின்றன. ஆராதனையின் முடிவாக இதோ இந்தப் பாட்டு : இயேசுவின் நாமத்தை ஏந்திச் செல்வீர் உம்மோடு ஓ துக்கம், வேதனையில் துவளும் பிள்ளையே, அந்நாமம் உனக்கு ஆனந்தத்தையும், தேறுதலையும் அளிக்குமே நீர் செல்லுமிடமெல்லாம் அதை ஏந்திச் செல்லுவீர் நாளை இரவு சரியாக ஏழு மணிக்கெல்லாம் ஆராதனை துவங்குகிறது. நமது யாத்திரையின் முடிவில், இயேசுவின் நாமத்தில் பணிந்து, சாஷ்டாங்கமாக அவர் பாதத்தில் நாம் வீழ்ந்து பரலோகில் இராஜாதி இராஜாவுக்கு நாம் கிரீடம் சூட்டுவோம். 147நாம் யாவரும் இப்பொழுது பாடுவோம் : இயேசுவின் நாமத்தை ஏந்திச் செல்வீர் உம்மோடு ஓ துக்கம், வேதனையில் துவளும் பிள்ளையே, அந்நாமம் உனக்கு ஆனந்தத்தையும், தேறுதலையும் அளிக்குமே நீர் செல்லுமிடமெல்லாம் அதை ஏந்திச் செல்லுவீர். விலையேறப்பெற்ற நாமமது, எத்தனை இனிமையானது அது பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமது விலையேறப்பெற்ற நாமமது, எத்துணை இனிமையானது (எத்தனை இனிமையானது!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகின் மகிழ்ச்சியுமது. 148இன்றிரவு இப்பொழுது நாம் இதை முடித்து விட்டோம். நாளை காலை ஆராதனை உண்டா என்று என்னிடம் கேட்கப்பட் டது. இல்லை, நாளைக்கு இல்லை, நாளை நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங் கள். நாளை இரவு ஒரு வேளை நான் அந்தச் செய்தியை எடுக்க முடியவில்லையெனில், அடுத்த நாள் எடுப்பேன். ஒரு நாளில் இந்தத் தொடர் செய்தியை நான் கொடுக்கத் தவறினால், அடுத்த நாளில் கொடுத்துவிடுவேன். ஆனால், இந்தச் செய்தித் தொகுப்பு நமக்கு இருக்கிறது, நீங்கள் ஏற்கனவே, சபைக் காலங்கள் செய்திக்காக இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறேன். அப்படித் தானே? சரி. 149இப்பொழுது மெதுவாக நாம் பாடுகையில் தலைகளை வணங்குவோம். இயேசுவின் நாமத்தில் பணிகையில் (எல்லா நாவுகளும் அதை அறிக்கை செய்யும்) அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாக வீழ்கையில் நம் யாத்திரையை முடித்திருக்கையில், அவரை நாம் இராஜாதி இராஜாவாக முடிசூட்டுவோம் விலையேறப் பெற்ற நாமமது, எத்தனை இனிமையானது பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் ஆனந்தமும் அதுவே, விலையேறப் பெற்ற நாமமது, ஓ எத்தனை இனிமையானது அது(எத்தனை இனிமையானது!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் ஆனந்தமும் அது.